உள்ளடக்கத்துக்குச் செல்

விலங்குச் சிறைப்பிடிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூண்டிற்குள் அடைக்கப்பட்ட ஒரு குரங்கு

விலங்குச் சிறைப்பிடிப்பு (Animal captivity) என்பது வீட்டு விலங்குகளையும் காட்டு விலங்குகளையும் அடைத்து வைக்கும் செயலாகும்.[1] இது குறிப்பாக விலங்குகள் மனிதர்களால் பிடித்து வைக்கப்பட்டு, தப்பிச் செல்ல முடியாத மட்டும் தடுக்கப்படும் செயலைக் குறிக்கின்றது.[2] இச்சொல் பிராதானமாகக் காட்டு விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் குறிக்க முற்பட்டாலும், கால்நடைகள், செல்லப்பிராணிகள் போன்ற மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் சிறைபிடிக்கப்பட்டு வளர்க்கப்படுவதையும் குறிக்கின்றது. எடுத்துக்காட்டாக, பண்ணைகள், தனியார் வீடுகள், உயிரியல் பூங்காக்கள், மீன்வளக் காட்சியகங்கள், பொது மீன் காட்சியகங்கள் மற்றும் ஆய்வகங்களில் உள்ள விலங்குகள் பிடிக்கப்பட்டு வளர்க்கப்படுவதும் இதில் அடங்கும். விலங்குகளைச் சிறைப்பிடிப்பது என்பது அந்த அடைத்து வைத்தலின் பின்னால் உள்ள நோக்கங்களையும் நிலைமைகளையும் கருத்தில் கொண்டே அதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.

இவற்றையும் காண்க

[தொகு]

விலங்கு வளர்ப்பு

விலங்குரிமை

மேற்கோள் தரவுகள்

[தொகு]
  1. "Is that animal wild or domesticated? | World Animal Protection". www.worldanimalprotection.ca (in கனடிய ஆங்கிலம்). Retrieved 2023-04-25.
  2. Definitions, 1911 Chapter 27 1 and 2 Geo 5; "...the expression "captive animal" means any animal (not being a domestic animal) of whatsoever kind or species, and whether a quadruped or not, including any bird, fish, or reptile, which is in captivity, or confinement, or which is maimed, pinioned, or subjected to any appliance or contrivance for the purpose of hindering or preventing the animals escape from captivity or confinement..."; Protection of Animals Act 1911; http://www.legislation.gov.uk/ukpga/Geo5/1-2/27

வெளியிணைப்புகள்

[தொகு]