விரோசனன்
விரோசனன் | |
---|---|
தகவல் | |
துணைவர்(கள்) | தேவாம்பை |
பிள்ளைகள் | மகாபலி சக்கரவர்த்தி |
விரோசனன் (Virochana) (சமக்கிருதம்: विरोचन), அசுர குல மன்னரான இரணியகசிபின் பேரனும்; பிரகலாதனின் மகனும் ஆவர்.
அதர்ண வேதத்தில் (VIII.10.22) பிரகலாதனின் மகனாக விரோசனனை குறிப்பிடுகிறது.[1] சாந்தோக்கிய உபநிடதத்தின் படி (VIII.7.2-8.5), அசுரர் தலைவன் விரோசனனும், தேவர்களின் தலைவன் இந்திரனும் ஆத்ம தத்துவத்தை அறிய பிரம்மனிடம் 32 ஆண்டுகள் சீடர்களாக குருகுலக் கல்வியைப் பயின்றனர். குருகுலக் கல்வி முடிவில், விரோசனன், தன் உடலே இறைவன் என்று தவறாக உணர்ந்து பூஜித்தான்.[2] விரோசனனின் மகன் மகாபலி சக்கரவர்த்தி ஆவார்.[3]
மகாபாரதக் குறிப்புகள்[தொகு]
மகாபாரதத்தின், உத்தியோகப் பருவத்தில், கேசினி என்ற அசுர குலப் பெண்ணை விரும்பிய, விரோசனனுக்கும், சூதன்வான் என்பவனுக்கு நடந்த போட்டியில், பிரகலாதன் நடுவராக இருந்து, சூதன்வானே வெற்றி பெற்றவர் என தீர்ப்பு வழங்கினார். [4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Griffith, Ralph T.H. (1895). "Hymns of the Atharva Veda, Book 8, Hymn 10". The Internet Sacred Text Archive website. http://www.sacred-texts.com/hin/av/av08010.htm. பார்த்த நாள்: 2009-11-12.
- ↑ "Chandogya Upanishad". Maharishi University of Management website. pp. 151–2 இம் மூலத்தில் இருந்து 2012-02-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120227112549/http://is1.mum.edu/vedicreserve/upanishads/fifteen_upanishads_10_chandogya.pdf. பார்த்த நாள்: 2009-11-12.
- ↑ Gopal, Madan (1990). K.S. Gautam. ed. India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 75. https://archive.org/details/indiathroughages00mada.
- ↑ பிரகலாதன் தீர்ப்பு! - உத்யோக பர்வம் பகுதி 35அ