உள்ளடக்கத்துக்குச் செல்

விரூபக உருவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விரூபகம் என்பது, ஒன்றன் தோற்றத்தில், மற்றொன்றின் ஒரு பகுதியை மட்டும் வைத்து உருவகம் கூறுவதாகும். இந்தப் பாடலில் பெண்ணின் முகம் தாமரை மலராக உருவகம் செய்யப்பட்டுள்ளது. தாமரைக்கு இவள் முகம் போன்ற பாங்குகளில் சில இல்லை என்கிறது. அதனால் இது விரூபக உருவகம். [1]

பாடல் - எடுத்துக்காட்டு
[தொகு]

தண் மதிக்குத் தோலாது தாழ் தடத்து வைகாது
முள் மருவும் தாள் மேல் முகிழாது - நண்ணி
இரு பொழுதும் செவ்வி இயல்பாய் மலரும்
அரிவை வதனாம்புயம் [2]

பாடல் செய்தி
[தொகு]

வதனாம்புயம் (வதனம் + அம்புயம்) / முகத்தாமரை

தாமரை நிலா வந்ததும் தன் அழகை இழந்து தோற்றுப் போகும்.
இவள் முகம் மறுவுள்ள மதியத்தை வெல்லும்.

தாமரை நீரில் இருக்கும்
இவள் நிலத்தில் இருக்கிறாள்

தாமரைத் தண்டில் முள் இருக்கும்.
இவள் உடம்பில் முள் இல்லை

இப்படிச் சொல்வதால் இந்தப் பாடல் விரூபக உருவகம்.

மேற்கோள்

[தொகு]
  1. தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மடம் பதிப்பு, 1967, நூல் பக்கம் 66
  2. மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரூபக_உருவகம்&oldid=4282550" இலிருந்து மீள்விக்கப்பட்டது