விருத்தாசலம் அமுதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விருத்தாசலம் அமுதா (பிறப்பு: மார்ச்சு 2 1970) கேரள மாநிலத்தின் காட்டூரில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை பாலக்காட்டின் ஆர்பி கூடப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை செயிண்ட் உயர்நிலைப் பள்ளியிலும் பெற்றுள்ளார். பின்பு மெர்சி கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டத்தினையும், விக்டோரியா கல்லூரியில் முதுகலைப் பட்டத்தினையும் பெற்ற இவர் கல்வித்துறையிலும் இளங்கலைப் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.

தொழில்முயற்சி[தொகு]

மெர்சி கல்லூரியிலும் விஸ்யு மெட்ரிகுலேசன் பள்ளியிலும் ஒன்றரை ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இலக்கியப் பணி[தொகு]

தனது 12வது வயதில் கவிதை எழுதத் தொடங்கிய இவர் குறிப்பாக புதுக்கவிதை எழுதுவதில் மிக்க ஆர்வம் காட்டி வருகின்றார். என்றாலும் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்ததன் பின்னர் இவர் பத்திரிகைக்கு எழுதத் தொடங்கினார். ‘அட்டை உலகம்’ எனும் தலைப்பிலான இவரது முதல் ஆக்கம் தமிழ் முரசு சனவரி 21 1999ல் இதழில் வெளிவந்தது.

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்[தொகு]

கல்லூரி, பல்கலைக்கழக மட்டத்தில் பலமுறை கவிதைப் போட்டிகளில் 1ம் பரிசில்களைப் பெற்றுள்ளார்.

உசாத்துணை[தொகு]

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விருத்தாசலம்_அமுதா&oldid=2713104" இலிருந்து மீள்விக்கப்பட்டது