விரிவு விகிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விரிவு விகிதம் (Expansion ratio) என்பது அறை வெப்பநிலையில், சாதாரண வளிமண்டல அழுத்தத்தில் திரவநிலையில் உள்ள ஒரு பொருளின் கன அளவுக்கும், அதே அளவு பொருள் வாயுநிலையில் உள்ளபோது இருக்கும் கன அளவுக்கும் இடையேயுள்ள ஒப்பீட்டு அளவு ஆகும் [1].

மூடப்பட்ட ஒரு கொள்கலனில் போதுமான அளவு திரவம் ஆவியாக்கப்பட்டால், அழுத்தம் உருவாக்கப்பட்டு கலனில் விரிசல் ஏற்படும் வாய்ப்பு ஏற்படும். எனவே கலனுடன் அழுத்தநீக்க அடைப்பிதழ்கள், நிவாரண போக்குக் குழாய்கள் முதலியனவற்றைப் பயன்படுத்தவேண்டும் [2].

திரவமாக்கப்பட்ட மற்றும் கடுங்குளிர் பொருளின் சுற்றுப்புற காற்றின் வெப்பநிலைக்கும் கொதிநிலைக்கும் இடையிலான விரிவு விகிதம்,

  • நைட்ரசன் 1 முதல் 696
  • நீர்ம ஈலியம் 1 முதல் 757
  • ஆர்கான் 1 முதல் 847
  • நீர்ம ஐதரசன் 1 முதல் 851
  • நீர்ம ஆக்சிசன் 1 முதல் 860
  • நியான் 1 முதல் 1445, (அதிகபட்சமான விரிவு விகிதம்) [3][3][4][4]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரிவு_விகிதம்&oldid=3228825" இருந்து மீள்விக்கப்பட்டது