விரிவு இணைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு பாலத்தில் காணப்படும் விரிவு இணைப்பு

விரிவு இணைப்பு அல்லது நகர்வு இணைப்பு என்பது, கட்டிடங்களிலும் பிற அமைப்புக்களிலும், ஏற்படக்கூடிய நகர்வுகளைப் பாதுகாப்பாகத் தாங்கக்கூடிய வகையில் அவற்றின் வெவ்வேறு பகுதிகளிடையே உருவாக்கப்படும் இணைப்பு முறையைக் குறிக்கும். கட்டிடங்கள் அல்லது பிற அமைப்புக்களில் மேற்படி நகர்வுகள் வெப்பநிலை மாற்றங்களாலும், கட்டிடப் பொருட்கள் வேறு காரணங்களால் சுருங்கி விரிவதாலும், அதிர்வுகளாலும், பல்வேறு காரணங்களால் கட்டிடப் பகுதிகள் வேறுபட்ட அளவில் நிலத்துள் இறங்குவதாலும், புவியதிர்ச்சி போன்றவற்றாலும் ஏற்படுகின்றன. விரிவு இணைப்புக்களைப் பொதுவாகக் கட்டிடங்கள், பாலங்கள், நடை பாதைகள், தொடர்வண்டிப் பாதைகள், குழாய் அவைப்புக்கள், கப்பல்கள் போன்றவற்றில் காணலாம்.

மேற்படி அமைப்புக்களில் விரிவு இணைப்புக்கள் இல்லாதவிடத்து, முன் குறிப்பிட்டவாறு நகர்வுகள் ஏற்படும்போது ஏற்படும் தகைப்புக்களினால், அந்த அமைப்புக்களில் வலுக் குறைவாக உள்ள இடங்களில் அல்லது வேறுபட்ட கட்டிடப் பொருட்கள் சந்திக்கும் இடங்களில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரிவு_இணைப்பு&oldid=1606055" இலிருந்து மீள்விக்கப்பட்டது