உள்ளடக்கத்துக்குச் செல்

விரிவுரை அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பருச் கல்லூரியில் ஒரு விரிவுரை அரங்கம்.
பிரான்சின் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு விரிவுரை அரங்கம்

விரிவுரை அரங்கம் (lecture hall) என்பது பொதுவாக ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பெரிய அறையாகும். பொதுவாக ஒன்று முதல் ஐம்பது பேர் வரை அமரும் பாரம்பரிய வகுப்பறைகளைப் போலன்றி, நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அமரும் வசதி கொண்டதாக இருக்கும். விரிவுரை அரங்குகள் எப்போதும் ஒரு சாய்வான தளத்தைக் கொண்டிருக்கும், இதனால் பின்புறத்தில் உள்ளவர்கள் முன்பக்கத்தில் உள்ளவர்களை விட உயரமாக அமர்ந்திருப்பார்கள் (அதாவது அடுக்கு இருக்கைகள்), இதனால் அவர்கள் விரிவுரையாளரை சரியாகப் பார்க்க முடியும்.

விரிவுரை அரங்குகள் மற்ற வகையான கற்றல் இடங்களிலிருந்து, குறிப்பாகக் கருத்தரங்கு அறைகளிலிருந்து வேறுபடுகின்றன. கருத்தரங்குகள் பல்வேறு துறை தொடர்பான கூட்டங்கள் நடத்துவதை அனுமதிக்கின்றன. [1] விரிவுரை அரங்குகளில் பரிசோதனை, குழுப்பணி ஆகிய முறைகள் நடைபெருவதற்கு வாய்ப்பளிப்பதில்லை. இது, அதிக எண்ணிக்கையிலான பங்களிப்பாளர்களுக்கு கல்வி வழங்குவதையோ ஒலி-ஒளி சார்ந்த கற்றலினை வழங்குவதற்கு உகந்ததாகும். நவீன அரங்குகள் பரவலாக ஒலி-ஒளிக் கற்றல் உபகரணங்களான ஒலிவாங்கி, ஒலிபெருக்கி, படம் காட்டும் கருவி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. விரிவுரை அரங்குகளின் ஒலியியல் பண்புகள் ஏராளமான சர்வதேச ஆய்வுகளுக்கு உட்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Large Lecture Hall Design". Center for Research on Learning and Teaching. Archived from the original on 2010-08-19. Retrieved 2011-01-23.
  2. "Raumakustik Kurt Eggenschwiler ETH EMPA" (PDF). Arch.ETHZ.ch.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரிவுரை_அரங்கம்&oldid=4209047" இலிருந்து மீள்விக்கப்பட்டது