விரிவாக்கக்கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விரிவாக்க கல்வி என்பது கல்வி அறிவு குறைந்து காணப்படும் நம்கிராம மக்களிடையே விழிப்புணர்வு வளர்ப்பதற்கும்,புதிய தொழில் நுட்பத்தையை அறிமுகப்படுத்துவதற்கும்,சுற்றுப்புற சூழல் மேலாண்மையை வளர்ப்பதற்கும் தேவையான பயிற்சியை அளிப்பதற்கும் எற்படுத்தப்பட்ட ஒரு புதிய கல்வி முறையே வி'ரிவாக்க கல்வி என்பதாகும்.ஊரக வளர்ச்சியில் இக்கல்வி பெரிதும் உதவுகின்றது.. இது ஒரு முறை சாரா தொடர் கல்வியாகும்..இக்கல்வியில் மக்கள் பிரச்சனையை தீர்க்க உதவுகின்றது. மக்கள் தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.

விரிவாக்க கல்வியின் தத்துவங்கள்[தொகு]

தத்துவம் என்பது அறிவியல் அடிப்படையிலான பகுத்தாய்வின் முலம் ஒரு கூற்றின் செயல்பாட்டினை விளக்குவதாகும். மக்களின் தன்னிறைவிற்காக பாடுபடுவது.செய்முறையின் முலம் அறிவது மற்றும் கண்ணால் காண்பதன் மூலம் நம்புவது என்ற தத்துவத்தை கொண்டது. மனித வளர்ச்சியை குறிக்கொளாக கொண்டது.ம்ற்றும் கலாச்சாரத்தைக்கொண்டது. சுற்றுச்சூழல், மனித வள மேம்பாட்டைக் கொண்டது

விரிவாக்கக்கல்வியின் நெறிமுறைகள்[தொகு]

விரிவாக்க கல்வி,ஆர்வம்,மற்றும் தேவையை அடிப்படையைக்கொண்டிருக்க வேண்டும். சமுதாயத்தின் அடிப்படை நியதிகளைச் சார்ந்து அமைய வேண்டும்.கலாச்சார ஒருமைப்பாட்டுணர்வைக் கொண்டிருக்க வேண்டும். கலாச்சார மாற்றத்தை கருத்தில் கொள்ள வேண்டும். கூட்டுறவு அவசியத்தை உணர வேண்டும். மக்கள் பங்கேற்க வேண்டும்.,நடைமுறை அறிவியல் ம்ற்றும் மக்களமைப்பு முறையை வலியுறுத்த வேண்டும்., செய்முறைப் பயிற்சிக் கல்வி, நன்கு பயிற்சி பெற்ற விரிவாக்க பணியாளர்கள்.,கல்வி தொடர்பு சாதனங்களை உபயோகித்தல், சமுதாய தலைவர்களுடன் இணைந்து பணி செய்தல்.,முழுக்குடும்பத்தையும் சார்ந்து இருத்தல்.,மனநிறைவுத் தருவதாக அமையவெண்டும். திட்ட மதிப்பிடு உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

விரிவாக்க கல்வியின் குறிக்கோள்[தொகு]

ஊரக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது.,கிராமபுற வாழ்க்கை முறையை உயர்த்துவது., கிராம மக்களிடம் குடும்பம் மற்றும் நலத்திட்டங்களை சரிவர செயல்படுத்த உதவுதல்., உற்பத்தியை பெருகக உதவுதல்.,புதிய தொழில் நுட்ப கருத்துக்களை அறிய செய்தல்.,கிராமப்புற இளைநர்களிடையே நம்பிக்கை, தலைமைப்பண்பு மற்றும் வேலை வாய்ப்பு உருவக்குதல்.,ஒற்றுமை, தன்னிறைவு,சமநோக்குசிந்தனை உருவாக்குதல்., மனிதநேயம்.,பெண்கள் மேம்பாடு,நலிவடைந்தொர் வாழ்வு போன்றவை முன்னெற்றம் அடைய முயற்சி எடுத்தல்.,

விரிவாக்கக் கல்விக்குரிய வாய்ப்புகள்[தொகு]

இன்று அனைத்து துறைகளிலும் அறிவியல் கருத்துக்களை பரப்ப பெரிதளவில் பயன்படுகிறது. முக்கியமாக கல்வித்துறை, சமுக நலம்,வேளான்மைத் துறைகளில் பயன்படுத்த படுகிறது.

மேற்கோள்[தொகு]

[1]

.

  1. வெங்கடசுப்ரமணியன் (2000). விரிவாக்கக் கல்வி. நியு செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்,சென்னை. பக். 5,6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரிவாக்கக்கல்வி&oldid=2753539" இருந்து மீள்விக்கப்பட்டது