விரிசையருளிளங்குமரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விரிசை அருளிளங்குமரன் என்பவர் திருநெல்வேலி மாவட்டம்,விரிசம்பட்டி எனும் ஊரில் குமாரசாமி-செல்லம்மாள் தம்பதிக்கு மகனாக 08-02-1940 அன்று பிறந்தார் .இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் குமாரசாமி என்பது .கல்லூரியில் பயின்றபோது தம் இயற்பெயரைத் தமிழ்ப்படுத்தி,' அருளிளங்குமரன்' என்று மாற்றினார்.

கல்வியும் தமிழ்ப்பற்றும்[தொகு]

விரிசம்பட்டியில் பள்ளிக் கல்வியை முடித்த இவர்,மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார் .இவருக்குப் பேராசிரியராக இருந்தவர் சி.இலக்குவனார்.அப்பேராசிரியர் இவருக்கு இட்ட பெயர், 'வாடாத் தமிழ் வண்ண மலர்மீது நடக்கும் வரிசை அருளிளங்குமரன்' என்பதாகும்.

ஆற்றிய பணிகள்[தொகு]

இவர் தஞ்சாவூர் மன்னர் சரபோசிக் கல்லூரியில் ஆங்கிலப் பயிற்றுநராக சேர்ந்து,பின்னர் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார் .இறுதியில் குடந்தை அரசு ஆடவர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

நூற்பணிகள்[தொகு]

இவர் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய போது ,ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லொ நாடகத்தைக் ,'காதல் வானில் தேயும் நிலவு' எனும் பெயரில் மொழிபெயர்த்தார். 1966 ஆம் ஆண்டு கவிதை நடையில்- நேரிசை ஆசிரியப்பா வகையில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல்,1999 இல் இவரது துணைவியாரால் பதிப்பித்து வெளியிடப்பட்டது.

பெற்ற விருதுகள்[தொகு]

இவரது தமிழ்ப் பணிகளையும் ஆசிரியர் பணிகளையும் பாராட்டி,தமிழக அரசு இவருக்கு 1995 ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதினை,05-09-1997 அன்று அன்றைய தமிழக முதல்வரால் வழங்கப்பட்டது.

மறைவு[தொகு]

இவர் 26-10-1997 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.

உசாத்துணை[தொகு]
  • அ.ம.சத்தியமூர்த்தி, 'தமிழுலகம் நினைக்க மறந்த தமிழறிஞர்கள்'-மணிவாசகர் பதிப்பகம்,சென்னை-2001.