உள்ளடக்கத்துக்குச் செல்

விராலிமலை

ஆள்கூறுகள்: 10°36′6″N 78°32′47″E / 10.60167°N 78.54639°E / 10.60167; 78.54639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விராலி மலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விராலிமலை
—  சிறப்பு நிலை பேரூராட்சி  —
விராலிமலை
அமைவிடம்: விராலிமலை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°36′6″N 78°32′47″E / 10.60167°N 78.54639°E / 10.60167; 78.54639
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
அருகாமை நகரம் திருச்சி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்களவைத் தொகுதி கரூர்
மக்களவை உறுப்பினர்

ஜோதிமணி

சட்டமன்றத் தொகுதி விராலிமலை
சட்டமன்ற உறுப்பினர்

சி. விஜயபாஸ்கர் (அதிமுக)

மக்கள் தொகை 10,883 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


137 மீட்டர்கள் (449 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.viralimalai.com
விராலிமலை முருகன் கோயில்
விராலிமலை முருகன் கோயில்

விராலிமலை (Viralimalai) என்பது தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும்.

ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[3][4]

விராலிமலை திருச்சியிலிருந்து தெற்கே 21 கி.மீ தொலைவில் உள்ளது. விராலிமலையில் 2,759 வீடுகளும், 10,883 மக்கள் தொகையும் கொண்டது.[5] விராலிமலையில் குன்று ஒன்றின் உச்சியில் விராலிமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோவில் பரத நாட்டியக் கலைக்குப் பெயர்பெற்றது. இவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர். இவ்வூரானது கரூர் மக்களவைத் தொகுதிக்கும் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

விராலிமலையில் வாரம் ஒரு முறை நடைபெறும் திங்கள் கிழமை சந்தை மிகவும் பிரபலமானதாகும்

போக்குவரத்து

[தொகு]

விராலிமலை பேரூராட்சி திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மதுரை, இராஜபாளையம், விருதுநகர், தூத்துக்குடி திருச்செந்தூர், சிவகாசி, போன்ற தென்மாவட்ட நகரங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் விராலிமலை பேருந்து நிலையம் வந்து செல்கின்றன. திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி. கொடைக்கானல் போன்ற நகரங்களுக்கும் இங்கிருந்துப் பேருந்து வசதிகள் உள்ளன. மணப்பாறை, திருச்சி, இலுப்பூர், துவரங்குறிச்சிக்கு நகரப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அருகில் உள்ள நகரங்கள்

[தொகு]

திருச்சிராபள்ளி, மணப்பாறை, புதுக்கோட்டை, இலுப்பூர், துவரங்குறிச்சி ஆகியவை அருகமை நகரங்களாகும்.

சட்டமன்றத் தொகுதி

[தொகு]

விராலிமலை தமிழகத்தின் சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இந்த தொகுதியில் முத்தரையர், முக்குலத்தோர், தேவேந்திரர் போன்ற சமூகங்கள் இருக்கின்றன. முத்தரையர் சமுதாயம் பெரும்பான்மையாக வாழும் தொகுதி ஆகும். விராலிமலை சட்டமன்றத் தொகுதியானது கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[6]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 2,759 வீடுகள் கொண்ட விராலிமலையின் மக்கள் தொகை 10,883 ஆகும். இதில் ஆண்கள் 5,483 மற்றும் 5,400 பெண்கள் ஆக இருந்தனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 985 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.32% ஆக இருந்தது. இதன் சராசரி எழுத்தறிவு 85.72% ஆகவுள்ளது.[7]

வரலாறு

[தொகு]

குன்றில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருந்த அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆறு கி.மீ தொலைவில் அமைந்துள்ள கொடும்பாளூரின் தாக்கம் இங்கும் இருந்திருக்கலாம். சோழர் கால கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் வளமிக்க ஊராக இருந்திருக்க வேண்டும் என சாற்றுகிறது.[8] இங்குள்ள குன்றுப்புறத்தில் முள்ளில்லாத மரங்கள், பெரும்பாலும் வெப்பாலை மரங்கள் காணப்படுகின்றன.

விராலிமலை இரு நூற்றாண்டுகளுக்கும் பழமையான குறவஞ்சி நாட்டிய நாடக வடிவொன்றிற்குப் பெயர்பெற்றது. 1993ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி குன்றின் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் இரவு முழுவதும் குறவஞ்சி நாடகம் நடக்கும்.[9]

மயில் உய்வகம்

[தொகு]

இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் கூடுதலாகக் காணப்படும் ஓர் இடமாக விராலிமலை திகழ்கிறது. விராலிமலை முருகன் கோவிலைச் சுற்றியும் சுற்றியுள்ள மலைக் காடுகளிலும் இவை காணப்படுகின்றன. இம்மலைப்பகுதி மயில்களுக்கான உய்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[10] இந்நகரமும் கோவிலும் மயில்களின் உய்வகமும் பாரம்பரியமிக்க இடமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. [11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025
  4. 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், தினமலர் 1 சனவரி 2025
  5. Viralimalai Population Census 2011
  6. "கரூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1226803-karur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025. 
  7. Viralimalai Town Population Census 2011
  8. Pudukkottai District#Pandya empire
  9. Sundarsuman center for Arts and Culture, Pudukkottai More details on Viralimalai பரணிடப்பட்டது 2008-12-04 at the வந்தவழி இயந்திரம்
  10. Services International, Viralimalai Sanctuary Viralimalai Sanctuary[தொடர்பிழந்த இணைப்பு]
  11. Rural Development and Panchayat Raj (PR.2) Department, G.O. (Ms) No.19, Dated: 23.1.2008 Declaring Viralimalai as a heritage place
"https://ta.wikipedia.org/w/index.php?title=விராலிமலை&oldid=4356915" இலிருந்து மீள்விக்கப்பட்டது