உள்ளடக்கத்துக்குச் செல்

விராட்டு இந்துசுத்தான் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விராட்டு இந்துசுத்தான் சங்கம்
Virat Hindustan Sangam
சுருக்கம்வி.எச்.எசு
உருவாக்கம்8 April 2015; 11 ஆண்டுகள் முன்னர் (8 April 2015)
நிறுவனர்சுப்பிரமணியன் சுவாமி
நோக்கம்இந்துக்கள், பௌத்தர்கள், பார்சிகள், சமணர்கள் மற்றும் சீக்கியர்களை ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைப்பது
சேவை பகுதி
இந்தியா
தலைவர்
சுப்பிரமணியன் சுவாமி
பொதுச் செயலாளர்
இயகதீசு செட்டி
அரவிந்து சதுர்வேதி
வலைத்தளம்vhsindia.org

விராட்டு இந்துசுத்தான் சங்கம் (Virat Hindustan Sangam) என்பது ஓர் இந்தியக் கலாச்சார அமைப்பாகும்.[1] இச்சங்கம் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி சுப்பிரமணியன் சுவாமியால் நிறுவப்பட்டது.[2] சனாதன தர்மத்தின் கோட்பாடுகளின் அடிப்படையில் ஓர் இந்து மறுமலர்ச்சிக்கு வழிவகுப்பதே இதன் குறிக்கோளாக அறிவிக்கப்பட்டுள்ளது.[3] இராமர் கோயில் கட்டுதல், அரசியலமைப்பின் 370-ஆவது பிரிவை நீக்குதல், பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருதல் போன்ற விவகாரங்களை முன்னெடுப்பதற்கும், இந்துக்கள், பௌத்தர்கள், பார்சிகள், சமணர்கள் மற்றும் சீக்கியர்களை ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைப்பதற்கும் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது.[4][5]

2018-ஆம் ஆண்டில் இல் விராட்டு இந்துசுத்தான் சங்க அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய இலங்கை அரசியல்வாதி மகிந்த ராசபக்ச , 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற போர் பயங்கரவாதத்திற்கு எதிரானதுதானே தவிர, தமிழ் சமூகத்திற்கு எதிரானது அல்ல என்று கூறினார்.[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Subramanian Swamy launches Hindutva outfit 'Virat Hindustan Sangam'". Firstpost. 2015-04-08. Retrieved 2022-02-05.
  2. ↑ "Swamy floats new outfit" (in en-IN). The Hindu. 2015-04-09. https://www.thehindu.com/news/national/swamy-floats-new-outfit-virat-hindustan-sangam/article7081994.ece.
  3. ↑ "About VHS". Virat Hindustan Sangam. Retrieved 2022-02-05.
  4. ↑ "BJP's Subramaniam Swamy launches Hindutva outfit" (in en). The Indian Express. PTI. 2015-04-08. https://indianexpress.com/article/india/india-others/bjps-subramaniam-swamy-launches-hindutva-outfit/.
  5. ↑ Sharma, Betwa (2015-04-18). "Subramanian Swamy's New Hindutva Outfit Is For English-Speaking, Social Media Savvy Indians". HuffPost. Retrieved 2022-02-05.
  6. ↑ "Former Sri Lankan President Rajapakse to visit New Delhi next month". DD News. 22 August 2018. Retrieved 2022-02-05.
  7. ↑ "Sri Lanka's military did not wage ethnic war against Tamils, says ex-President Mahinda Rajapaksa". Scroll.in. 13 September 2018. Retrieved 2022-02-05.