உள்ளடக்கத்துக்குச் செல்

விராஜ்பேட்டை சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 12°12′N 75°48′E / 12.2°N 75.8°E / 12.2; 75.8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விராஜ்பேட்டை
Virajpet
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 209
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்குடகு மாவட்டம்
மக்களவைத் தொகுதிமைசூர் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2,13,294 (2023)[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஏ. எஸ். பொன்னண்ணா
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்

விராஜ்பேட்டை சட்டமன்றத் தொகுதி (Virajpet Assembly constituency) என்பது கருநாடகாவின் 224 கர்நாடக சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது கர்நாடக சட்டமன்றத்தில் இந்தியத் தேசிய காங்கிரசின் ஏ. எஸ்.பொன்னண்ணாவால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.[1]

தொகுதி வரலாறு

[தொகு]

விராஜ்பேட்டை சட்டமன்றத் தொகுதி மைசூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். 1957 முதல் 2008 வரை, இந்த தொகுதி மங்களூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது. 2008-ல் தொகுதிச் சீரமைப்பு ஆணையத்தால் மைசூர் மக்களவைத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.[2] 1956ஆம் ஆண்டு வரை மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம், 1956-ன் கீழ், மைசூர் மாநிலத்தின் (தற்போது கர்நாடகா) ஒரு பகுதியாக மாறியது. 1956 வரை விராஜ்பேட்டை முந்தைய கூர்க் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]

ஆதாரம் [3]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி
1957 சி.எம்.பூனாச்சா இந்திய தேசிய காங்கிரசு
1962 ஏ.பி.அப்பண்ணா
1967 என். லோகய்ய நாயக் பாரதீய ஜனசங்கம்
1972 ஜி.கே.சுப்பையா இந்திய தேசிய காங்கிரசு
1978
1983
1985 சுமா வசந்த்
1989
1994 எச். டி.. பசவராஜு பாரதிய ஜனதா கட்சி
1999 சுமா வசந்த் இந்திய தேசிய காங்கிரசு
2004 எச். டி.. பசவராஜு பாரதிய ஜனதா கட்சி
2008 கே. ஜி. போபையா
2013
2018
2023 ஏ. எஸ். பொன்னண்ணா இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2023 முடிவுகள்

[தொகு]
2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: விராஜ்பேட்டை[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. எஸ். பொன்னண்ணா 84,879 49.94 +9.00
பா.ஜ.க கே. ஜி. போபையா 80,466 47.38 –2.02
நோட்டா நோட்டா 1,630 0.98 –0.12
ஜத(ச) எம். ஏ. மன்சூர் அலி 1,121 0.67 –6.44
வெற்றி விளிம்பு 4,291 2.56
பதிவான வாக்குகள் 1,67,778 74.07
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Virajpet Election 2023: Congress' AS Ponnanna defeats BJP's K G Bopaiah" (in en). cnbctv18.com. 12 May 2023. https://www.cnbctv18.com/politics/karnatka-virajpet-election-results-2023-live-updates-16643241.htm. 
  2. "Kodagu goes to LS polls with Mysore for first time". தி இந்து. 12 April 2009 இம் மூலத்தில் இருந்து 16 ஏப்ரல் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090416201313/http://www.hindu.com/2009/04/12/stories/2009041251960300.htm. 
  3. "Virajpet Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.
  4. "Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 17 May 2023.