விராசத் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

விராசத் திருவிழா (Virasat) என்பது நாட்டின் இந்தியாவின் பண்பாடு பாரம்பரியத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்டாடும் திருவிழா ஆகும். இது இந்தியாவின் தேராதூனில் நடைபெறுகிறது. ஆப்ரோ-ஆசியாவின் மிகப்பெரிய நாட்டுப்புற வாழ்க்கை மற்றும் பாரம்பரிய விழாவாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ரீச் (கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான கிராமப்புற தொழில்முனைவோர்) அமைப்பு இந்த திருவிழாவினை ஏற்பாடு செய்கிறது. ஒரு வாரக் காலம் நடைபெறும் இந்த விழாவில் இந்திய நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலைகள், இலக்கியம், கைவினைப்பொருட்கள், நாடகம், சினிமா மற்றும் யோகா நிகழ்ச்சிகள் மற்றும் பட்டறைகள் ஆகியவை அடங்கும்.

கல்வியாண்டின் முதல் பாதியில் மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு இடையேயான தொடர்புகளை வளர்க்கும் நோக்கத்துடன், பாரம்பரிய இசை மற்றும் நடன கலைஞர்கள் மற்றும் தலைசிறந்த கைவினைஞர்கள் விழாவில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.[1][2]

விராசத் என்ற சொல்லுக்கு இந்தி மொழியில் "பரம்பரை" என்று பொருள்.

வரலாறு[தொகு]

முதல் விராசத் திருவிழா[3] 1995-ல் உத்தராகண்டு மாநிலம் தேராதூனில் நடைபெற்றது. விராசத் 2008 திருவிழா நாடு தழுவிய நிகழ்வாக கொண்டாடப்பட்டது. இது 2 செப்டம்பர் 2008 அன்று தில்லி மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் சுமார் 300 இடங்களில் கச்சேரிகள் மற்றும் இசை நிகழ்வுகளுடன் திசம்பர் மாதம் வரை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் புகழ்பெற்ற கலைஞர்கள். பிர்ஜு மகராஜ், சிவகுமார் சர்மா, டி. என். சேஷகோபாலன், அலர்மேல் வள்ளி, விசுவ மோகன் பட், ஷோவனா நாராயண், இராஜன் மற்றும் சஜன் மிஸ்ரா, தீஜான் பாய் ஆகியோரும் தொடர் கச்சேரிகளில் பங்கேற்றுள்ளனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விராசத்_திருவிழா&oldid=3670564" இருந்து மீள்விக்கப்பட்டது