விரலெலும்புகள்
Appearance
விரலெலும்புகள் | |
---|---|
மனித கையின் விரலெலும்புகள் | |
மனித காலின் விரலெலும்புகள் | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Phalanges |
Anatomical terms of bone |
விரலெலும்புகள் (ஆங்கிலம்:Phalanges) ஒரு கையில் 14 கை விரலெலும்புகள், ஒரு காலில் 14 கால் விரலெலும்புகள் மொத்தம் 126 தூக்கவெலும்புக்கூடு எலும்புகளில் 56 விரலெலும்புகள் உள்ளன.
அமைப்பு
[தொகு]மொத்தம் 56 விரலெலும்புகள் நமது உடலில் உள்ளது. இதில் 14 விரலெலும்புகள் ஒவ்வொரு கை மற்றும் கால்களில் அமைந்துள்ளது. இவ்வெலும்புகளே கால் மற்றும் கை விரல்களை உருவாக்குகின்றன.[1] ஒவ்வொரு விரலிலும் அண்மைய, நடு, தொலை விரலெலும்புகள் என தலா மூன்று விரலெலும்புகள் உள்ளன. ஆனால் கை கட்டை விரல்கள் மற்றும் கால் கட்டை விரல்களில் இரு விரலெலும்புகளே உள்ளன. சிலருக்கு அருகில் உள்ள இரு விரலெலும்புகள் இணைந்து காணப்படும்.[2]
மனித கை எலும்புகள்:
முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
- 1.படகெலும்பு (Scaphoid)
- 2.பிறைக்குழி எலும்பு (Lunate)
- 3.முப்பட்டை எலும்பு(Triquetrum)
- 4.பட்டாணி எலும்பு (Pisiform)
இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
- 5.சரிவக எலும்பு (Trapezium)
- 6.நாற்புறவுரு எலும்பு (Trapezoid)
- 7.தலையுரு எலும்பு (Capitate)
- 8.கொக்கி எலும்பு (Hamate)
- I.முதல் அங்கை முன்னெலும்பு
- II.இரண்டாம் அங்கை முன்னெலும்பு
- III.மூன்றாம் அங்கை முன்னெலும்பு
- IV.நான்காம் அங்கை முன்னெலும்பு
- V.ஐந்தாம் அங்கை முன்னெலும்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gray, Henry (1918). Anatomy of the Human Body. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8121-0644-X.
- ↑ Williams, Lynda (June 22, 2012). "Two-phalange fifth toe a 'common variant'". news-medical.net. பார்க்கப்பட்ட நாள் 14 July 2014.