உள்ளடக்கத்துக்குச் செல்

வியாகுல அன்னை தேவாலயம், காசர்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேலா தேவாலயம்

பேலா தேவாலயம் அல்லது வியாகுல அன்னை தேவாலயம் ( Bela Church, also Our Lady of Sorrows Church) என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இது   காசர்கோடுக்கு வடக்கே 15 கி.மீ. தொலைவிலும், மங்களூரிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

இந்த தேவாலயம் 1890 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, இதுவே மாவட்டத்தின் பழமையான தேவாலயமாகும். மங்களூர் மறைமாவட்டத்தின் கீழ் உள்ள இந்த கோதிக் மறுமலர்ச்சி கட்டடக்கலை கொண்ட ரோமன் கத்தோலிக்க தேவாலயம் அண்மையில் தன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியதுடன், புதுப்பிக்கப்பட்டும் வருகிறது.

ஆதாரங்கள் மற்றும் வெளிப்புற இணைப்புகள்[தொகு]