வியத்தகு இந்தியா (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வியத்தகு இந்தியா
நூல் பெயர்:வியத்தகு இந்தியா
ஆசிரியர்(கள்):ஏ. எல். பசாம்
மொழிபெயர்ப்பு: செ. வேலாயுதபிள்ளை, மகேசுவரி பாலகிருட்டிணன்
வகை:வரலாறு
துறை:இந்திய வரலாறு
காலம்:முகம்மதிய வருகைக்கு முன் இந்தியத் துணைக்கண்டம்
இடம்:கொழும்பு
மொழி:தமிழ்
பக்கங்கள்:722
பதிப்பகர்:--
பதிப்பு:1963

வியத்தகு இந்தியா எனும் நூல் இலங்கையைச் சேர்ந்த செ. வேலாயுதபிள்ளை, மகேசுவரி பாலகிருட்டினன் என்பவர்களினால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு இலங்கை அரசினால் 1963 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூலாகும். இது இலண்டன் பல்கலைக் கழகத்தில் இந்திய வரலாற்றுப் போதனாசிரியராகக் கடமையாற்றிய ஏ. எல். பசாம் என்பவரது தி வொண்டர் தட் வாஸ் இந்தியா எனும் நூலின் மொழிபெயர்ப்பாக அமைகின்றது. இலண்டனிலுள்ள சிட்சுவிக்கு, யாக்சன் கம்பெனியாரின் இசைவுபெற்று இலங்கை அரசாங்கத்தின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்பு முயற்சியாக அமைகின்றது. அதன் வழியில் இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்காக சிசாரா பிரின்ட்வே நிறுவனத்தினால் அச்சிடப்பட்டதாகும். நூலில் கி.பி 662 இல் சிரியா நாட்டு வானியலறிஞரும் துறவியுமான செவரசு செபோத்து என்பவர் எழுதிய பண்டைய இந்துக்கள் பற்றிய குறிப்பு முன்னுரை பகுதியில் அமைந்துள்ளது.

மொத்தம் 722 பக்கங்களை கொண்டதாக விளங்கும் நுலில், 10 அதிகாரங்களும் 12 பின்னிணைப்புகளும் காணப்படுகின்றன. விளக்கப்பட அட்டவணை, கோட்டுவரைதல்கள், நாட்டுப் படங்கள், முகமதியருக்கு முற்பட்ட இந்தியாவின் காலவரன்முறை என்பன அறிமுக விடயங்களாகவும் அமைகின்றன.

பண்டைய இந்தியா, அதன் பண்பாடு, அரசு, சமூகம், வரலாறு, அன்றாட வாழ்க்கை, சமயம், கலைகள், மொழியும் இலக்கியமும் எனும் பிரிவுகளில் நூலின் பாதை செல்கின்றது. அண்டவியலும் புவியியலும், வானியல், பஞ்சாங்கம், கணிதவியல், பௌதீகவியலும் இரசாயனவியலும், யாப்பு, நெடுங்கணக்கும் அதன் ஒலிப்பு முறையும் முதலான இந்துக்களின் அறிவியற் புலமை பற்றியதாக பின்னிணைப்பு அமைகின்றது.

நூலின் முதல் 413 பக்கங்களும் திரு. செ. வேலாயுதபிள்ளை அவர்களின் மொழிபெயர்ப்பாகவும், எஞ்சியவை திருமதி மகேசுவரி பாலகிருட்டினன் அவர்களின் மொழிபெயர்ப்பாகவும் அமைகின்றன.

மேலும் பார்க்க[தொகு]

Noolagam logo.jpg
தளத்தில்
வியத்தகு இந்தியா (நூல்)
நூல் உள்ளது.