வியட்நாம் மாநகராட்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மையக் கட்டுபாட்டில் அமைந்த வியட்நாமின் மாநகராட்சிகளின் நிலப்படம்

முதல் அடுக்கு ஆட்சிப் பிரிவில், வியட்நாம் 58 மாகாணங்களாகவும் (தின்) 5 மாநகராட்சிகளாகவும் (தான்போதிரூசு துவோசுதிரங் ஊவோங்) பிரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகள் வியட்நாமில் உயரிய தரவரிசை மாநகரங்களாகும்.[1] இது மாகாணத் தகுதி கொண்டது. இது அரசின் நேரடி மையக் கட்டுபாட்டில் உள்ளது.

இவை நகரக மாவட்டங்களாகவும் நகரியங்களாகவும் ஊரக மாவட்டங்களாகவும் இரண்டாம் ஆட்சியடுக்கில் பிரிக்கப்படுகின்றன. மூன்றாம் ஆட்சியடுக்கில், நகரக மாவட்டங்கள் (குவான்) சிறகங்களாகவும் (பூவோங்) நகரியம் சிறகங்களாகவும் குமுகங்களாகவும் (திசா) ஊரக மாவட்டங்கள் (குயேன்) நகரியங்களாகவும் (தித்திரான்) குமுகங்களாகவும் (சா) பிரிக்கப்படுகின்றன.

நடப்பு வியட்நாம் மாநகராட்சிகள்[தொகு]

Municipalities of the Socialist Republic of Vietnam
மாநகராட்சி வகை ஆட்சி வட்டாரம் மக்கள்தொகை
(2009 கணக்கெடுப்பு)
அடர்த்தி
(/கிமீ²)
பரப்பளவு
(km²)
பிரிவுகள்
கனாய் சிறப்பு வகுப்பு சிவப்பாற்றுக் கழிமுகப் படுகை 7,067,000 1,943.4 3,344.7 கனாய் ஆட்சிப் பிரிவுகள்
ஓ சி மின் நகரம் சிறப்பு வகுப்பு தென்கிழக்கு வட்டாரம் 7,891,411 3,419 2,095 ஓ சி மின் நகர் ஆட்சிப் பிரிவுகள்
சாந்தோ முதல் வகுப்பு மேகாங் கழிமுகப் படுகை 1,237,300 807 1,389.6 சாந்தோ ஆட்சிப் பிரிவுகள்
தா நாங் முதல் வகுப்பு நடுவண் தெற்குக் கடற்கரை 1,007,000 599 1,256 தா நாங் ஆட்சிப் பிரிவுகள்
கைபோங் முதல் வகுப்பு சிவப்பாற்றுக் கழிமுகப் படுகை 1,946,000 1,250.1 1,507.57 கைபோங் ஆட்சிப் பிரிவுகள்

முன்மொழியப்பட்டுள்ள மாநகராட்சிகள்[தொகு]

 • தூவதியேன்–குயே மாகாணத்தை புது மாநகராட்சியாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது 2020[2]
 • தாக்லாக் மாகாணம் புது தாக்லாக் மாகாணமாகவும் புவோன்மா துவோத் மாநகராட்சியாகவும் பிரிக்கப்படும். (நடுவண் மேட்டுச் சமவெளி (வியட்நாம்)).[3]
 • 4 மாகாணங்கள் மாநகராட்சிகள் ஆகும்:
  • பின் தூவோங் மாகாணம் (2015-2020)[4][5]
  • காங்கோவா மாகாணம் (2020)[6]
  • குவாங்நின் மாகாணம் (2020)[7]
  • தாய் நிகுயேன் மாகாணம்]] (2020)[8][9][10]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]