வியட்நாம் ஊடகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வியட்நாம் ஊடகங்கள் (Media of Vietnam) என்பன வியட்நாமில் நிலவும் அச்சு, ஒலிபரப்பல், இணையப் பெருந்திரள் ஊடகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும்.

தொலைக்காட்சி[தொகு]

வியட்நாம் தொலைக்காட்சி[தொகு]

முதன்மைக்கட்டுரை: வியட்நாம் தொலைக்காட்சி

வியட்நாமில் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பு 1960 களில் தொடங்கியது. முதன்முதலாக, அமெரிக்காவும் தென்வியட்நாமும் இணைந்து வியட்நாம் மொழியில் ஒன்றும் ஆங்கிலத்தில் ஒன்றுமாக இரண்டு தொலைக்காட்சி அலைவரிசைகளைச் சாய்கோனில் உருவாக்கின.

வியட்நாம் பல்லூடகக் கூட்டிணையம்[தொகு]

முதன்மைக்கட்டுரை: வியட்நாம் பல்லூடகக் கூட்டிணையம்

வியட்நாம் தொலைத்தொடர்பு குழுமம் (VTC) ஐந்து தேசிய அலைவரிசைகளை இயக்குகிறது.இது மட்டுமே வியட்நாமில் இலக்கமுறை நிலத் தொலைக்காட்சியை (DTT) இயக்குகிறது. இது சந்தாமுறை சேவையாகும். இதில் குறிகைக் களவுகள் நிறைய நடக்கின்றன.


வட்டார நிலையங்கள்[தொகு]

கனாய்த் தொலைக்காட்சி, ஓ சி மின் நகரத் தொலைக்காட்சி ஆகிய வட்டார தொலைக்காட்சி அமைப்புகள் வட்டார நிலையங்களாகச் செயல்படுகின்றன. பின்னது மேகாங் படுகை வட்டாரப் பெரும்பகுதியில் ஒளிபரப்புகிறது.

பிற முகமைத் தொலைக்காட்சி[தொகு]

வியட்நாமில் 1991ஆம் அண்டுக்குப் பின் விடுதிகள் அயல்தூதரகங்கள், அரசு அலுவலகங்கள், செயற்கைக்கோள் தொலைத்தொடர்பை நிற்வு இயக்கவும் அயல்நாட்டு நிகழ்ச்சிகளைக் காணவும் உரிமம் அரசால் வழங்கப்பட்டது.

வானொலி[தொகு]

முதல் வியட்நாமிய வானொலி ஒலிபரப்பல் 1945, செப்டம்பர் 2 இல் தொடங்கியது. இதில் ஓ சி மின் நாட்டின் விடுதலையை அறிவித்தார்.


தென்வியட்நாம் தனது வானொலியை 1955 இல் ஏற்படுத்தியது.

வியட்நாம் போர் முடிந்து, வியட்நாம் ஒருங்கிணைந்த்தும் 1978 இல் அனைத்து வானொலி நிலையங்களுக் வியட்நாம் குரல் அமைப்பின்கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு அது வியட்நாம் தேசிய வானொலி நிலையம் ஆகியது.

செய்தித்தாள்கள்[தொகு]

தோய் மோய் நடவடிக்கையின்படி, வியட்நாம் கட்டற்ர சந்தைமுறைக்கு மாறியதும், அரசு தன் கொள்கைகளை மக்களுக்கு தொடர்ந்து உடனடியாக் அறிவிக்க செய்தித்தாள்களைப் பயன்படுத்தியது. இந்நடவடிக்கையால், 1996க்குப் பிறகு, செய்தித்தாள்கள் இருமடங்காகப் பெருகின.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

or [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியட்நாம்_ஊடகங்கள்&oldid=2153498" இருந்து மீள்விக்கப்பட்டது