உள்ளடக்கத்துக்குச் செல்

வியட்நாம் இனக்குழுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வியட்நாம் 50 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பல இனக்குழுக்கள் வாழும் நாடாகும் (வியட்நாம் அரசு 54 இனக்குழுக்களை இனங்கண்டு ஒப்புக்கொண்டுள்ளது). ஒவ்வொரு இனக்குழுவுக்கும் ஒரு மொழியும் வாழ்முறைமையும் பண்பாட்டு மரபும் உண்டு. மலைவாழ் இனக்குழுக்கள் பலவற்றையும் இணைத்து மேற்கத்தியர்கள் மொந்தாகுநார்டு அல்லது தேகர் எனக் குறிப்பிடுகின்றனர். இவற்ரில் முதன்மையான பெரும்பான்மை இனக்குழுக்களாவன: கின் (வியட்) 86.2%, தாய் 1.9%, தை இனம் 1.7%, மூவோங் 1.5%, கேமெர் குரோம் (கோ மே குரோம்) 1.4%, கோவா 1.1%, நூங் 1.1%, கிமோங் 1%, மற்றவர்கள் 4.1% (1999 கணக்கெடுப்பு). இனக்குழுவுக்கான வியட்நாமியச் சொல் இங்குவாயி தியேயி சோ (người thiểu số) அல்லது தான் தோசு தியேயி சோ (dân tộc thiểu số) என்பதாகும்( இதன் நேர்பொருள் "சிறுபான்மையர்"). மலைவாழ் இனக்குழுக்களின் தனித்த இயல்பு வீட்டிலும் பண்ணையிலும் நகரிலும் பயணத்திலும் வண்ணவண்ண உடைகளில் மிளிர்வதாகும். ஆனால் தென்வியட்நாமிலும் கம்போடியாவிலும் இலாவோசிலும் மயன்மாரிலும் சினாவிலும் பாப்புவா நியூகினியாவிலும் இன்னும் பல நாடுகளிலும் உள்ள பல இனக்குழு மக்கள் அன்றாட வேலைகளில் ஈடுபடும்போது வண்ண ஆடைகளை அணிவதில்லை. மேலும் ஓர் இனக்குழு மக்களின் உடை வண்னம் மற்றவரில் இருந்து வேறுபடுவதால் சமூக அணிதிரட்சி பலவண்ணக் கோலத்துடன் மிளிரும்.

இனக்குழுக்களின் பட்டியல்

[தொகு]

மக்கள்தொகை தரவுகள் 2009 கணக்கெடுப்பில் இருந்து எடுக்கப்பட்டவை [1]

முதன்மை அமைச்சரின் வலைத்தளத்தின்படி, 2014 ஏப்பிரல் கணக்கெடுப்பின்படி, வியட்நாம் மக்கள்தொகை 90.493.352 ஆகும்.[2]

இனக்குழு மக்கள் மக்கள்தொகை
(2009
கணக்கெடுப்பு)
பரவல்
(2009
கணக்கெடுப்பு)
குறிப்பு
மொத்தம் 85,846,997
1. வியட்டிய மொழியினர் கின் 73,594,427 வியட்நாம் முழுவதும் வியட்டியர் எனவும் அழைக்கப்படும் வியட்நாமின் பெரும்பான்மை இனக்குழு மக்கள்
சியூட் 6,022 குவாங் பின் (5.095 பேர், வியட்நாமில் உள்ள சியூட்டின மக்களில் 84,6% சியுட்டு மக்களும் கின் மக்களும் உறவினர் மூவோங் 1,268,963 கோவா பின் (479.197 பேர், இம்மாகாண மக்கள்தொகையில் 63,3% ), தான் கோவா (328.744 பேர், இம்மாகாண மக்கள்தொகையில் 9,5% ), பூ தோ (165.748 பேர், இம்மாகாண மக்கள்தொகையில் 13,1% ), சோன்லா (71.906 பேர், இம்மாகாண மக்கள்தொகையில் 8,2%), நின் பின் (46.539 பேர்) கின் இனத்துக்கு மிக நெருக்கமானது, வியட்டியத் துணைக்குடும்பத்தின் வியட் மூவோங் கிளையின் மற்றொரு முதன்மைப் பகுதி
தோ 74,458 நிகே ஆன் அல்லது இங்கே ஆன் (59.579 பேர், வியட்நாமில் உள்ள அனைத்து தோ மக்களில் 80,0% ), தான் கோவா (9.652 பேர், வியட்நாமில் உள்ள அனைத்து தோ மக்களில் 13,0% ) தோ மக்கள், கின் வியட்நாமியருடன் உறவுள்ளவர்கள்
2. தாய்–காதை போய் 2,273 Lào Cai (1.398 பேர், வியட்நாமில் உள்ள போய் மக்களில் 61,5% ), கா கியாங் (808 பேர், , வியட்நாமில் உள்ள போய் மக்களில் 35,5%) போவுயேய்
கிளாய் 58,617 இலாவோ சாய் (28.606 பேர், , வியட்நாமில் உள்ள கிளாய் மக்களில் 48,8% ), கா கியாங் (15.157 பேர், , வியட்நாமில் உள்ள கிளாய் மக்களில் 25,9% ), இலாய் சாவு (11.334 பேர்), யேன் பாய் (2.329 பேர்)
இலாவோ 14,928 இலாய் சாவு (5.760 பேர், , வியட்நாமில் உள்ள இலாவோ மக்களில் 38,6% ), தியேன் பியேன் (4.564 பேர், , வியட்நாமில் உள்ள இலாவோ மக்களில் 30,6% ), சோன்லா (3.380 பேர், , வியட்நாமில் உள்ள இலாவோ மக்களில் 22,6% )
உலூ 5,601 இலாய் சாவு (5.487 பேர், , வியட்நாமில் உள்ள உலூ மக்களில் 98,0% ) உலூ
நூங் 968,800 இலாங் சோன் (314.295 பேர், இம்மாகாணத்தில் 42,9% , வியட்நாமில் உள்ள நூங் மக்களில் 32,4% ), சாவோ பாங் (157.607 பேர், இம்மாகாணத்தில் 31,1% , வியட்நாமில் உள்ள நூங் மக்களில் 16,3% ), பாசு கியாங் (76.354 பேர்)
சான் சாய் 169,410 துயேன் குவாங் (61.343 பேர், , வியட்நாமில் உள்ள சான் சாய் மக்களில் 36,2% ), தாய் நிகுயேன் (32.483 பேர், , வியட்நாமில் உள்ள சான் சாய் மக்களில் 19,2% ), பாசு கியாங் (25.821 பேர்), சான் சாய், சாவோ இலான்
தாய் 1,626,392 வடக்கு வியட்நாம் தாய் – வயட்நாமின் பெரிய சிறுபான்மையர்
தை இனம் 1,550,423 வக்கு வியட்நாம் தை இனம்
3. காதை
(கிரா)
சோ லாவோ 2,636 கா கியாங் (2.301 பேர், வியட்நாமில் உள்ள சோ இலாவோ மக்களில் 87,3% ) கெலாவோ
இலா சி 13,158 கா கியாங் (12.072 பேர், வியட்நாமில் உள்ள இலா சி மக்களில் 91,7% ), இலாவோ சாய் (619 பேர்), துயேன் குவாங் (100 பேர்) இலாசி
இலா கா 8,177 சோன்லா (8.107 பேர், வியட்நாமில் உள்ள இலாகா மக்களில் 99,14% ) இலாகா
பூ பியேவோ 687 கா கியாங் (580 பேர், வியட்நாமில் உள்ள பூ பியேவோ மக்களில் 84,4% ), Tuyên Quang (48 persons) குவாபியாவோ, பூபியாவோ
3. ஆத்திரோ-ஆசியர் பா நார் 227,716 கியா இலாய் (150.416 பேர், இம்மாகாணத்தில் உள்ள மக்கள்தொகையில் 11,8% வியட்நாமில் உள்ள பா நார்களில் 66,1% ), கொன் தூம் (53.997 பேர், இம்மாகாணத்தில் உள்ள மக்கள்தொகையில் 12,5% வியட்நாமில் உள்ள பா நார்களில் 23,7% ), பூ யேன் (4.145 பேர், இம்மாகாணத்தில் உள்ள மக்கள்தொகையில் 12,5% வியட்நாமில் உள்ள பா நார்களில் 23,7% ) பாநார்
பிராவு 397 கொன் தூம் (379 பேர், வியட்நாமில் உள்ள பிராவு மக்களில் 95,5% ) பிராவு
பிரூ 74,506 குவாங் திரி (55.079 பேர், வியட்நாமில் உள்ள பிரூ வான் கியேயு மக்களில் 73,9% குவாங் பின் (14.631 பேர், வியட்நாமில் உள்ள பிரூ வான் கியேயு மக்களில் 19,6% ), தாக் இலாக் (3.348 பேர்) பிரூ
சோரோ 26,855 தோங் நாய் (15.174 பேர், வியட்நாமில் உள்ள சோரோ மக்களில் 56,5% ), பா இரியா-வூங் தாவு (7.632 பேர்), பின் துவான் (3.375 பேர்)
சோ 33,817 குவாங் நிகாய் (28.110 பேர், வியட்நாமில் உள்ள சோ மக்களில் 83,1% ), குவாங் நாம் (5.361 பேர்)
சொ கோ 166,112 இலாம் தோங் (145.665 பேர், இம்மாகாண மக்கள்தொகையில் 12,3% வியட்நாமில் உள்ள சொ கோ மக்களில் 87,7% ) கோகோ
சோ தூ 61,588 குவாங் நாம் (45.715 பேர், வியட்நாமில் உள்ள சோ தூ மக்களில் 74,2% ), தியூவா தியேன் குவே (14.629 பேர், வியட்நாமில் உள்ள சோ தூ மக்களில் 23,8% )
கியே திரியேங் 50,962 கொன் தூம் (32.644 பேர், வியட்நாமில் உள்ள கியே திரியேங் மக்களில் 62,1% ), குவாங் நாம் (19.007 பேர், வியட்நாமில் உள்ள கியே திரியேங் மக்களில் 37,3% )
கிரே 127,420 குவாங் நிகாய் (115.268 பேர், வியட்நாமில் உள்ள கிரே மக்களில் 90,5% ) கிரே
காங் 13,840 சோன்லா (8.582 பேர், வியட்நாமில் உள்ள காங் மக்களில் 62,0% ), தியேன் பியேன் (4.220 பேர், வியட்நாமில் உள்ள காங் மக்களில் 30,5% )
கேமர் குராம் 1,260,640 சோசு திராங் (397.014 பேர், இம்மாகாண மக்கள்தொகையில் 30,7 % வியட்நாமில் உள்ள கேமர் குரோம் மக்களில் 31,5 % ), திரா வின் (317.203 பேர், இம்மாகாண மக்கள்தொகையில் 31,6 % வியட்நாமில் உள்ள கேமர் குரோம் மக்களில் 25,2 % , கியேன் கியாங் (210.899 பேர், இம்மாகாண மக்கள்தொகையில் 12,5 % வியட்நாமில் உள்ள கேமர் குரோம் மக்களில் 16,7 % ), ஆன் கியாங் (90.271 பேர்), பாசு இலியேயு (70.667 பேர்), சா மாவு (29.845 பேர்)
கோ மூ 72,929 நிகே ஆன் (35.670 பேர், வியட்நாமில் உள்ள கோ மூ மக்களில் 48,9% ), தியேன் பியேன் (16.200 பேர்), சோன்லா (12.576 பேர்), இலாய் சாவு (6.102 பேர்) கிமூ
மா 41,405 இலாம் தோங் (31.869 பேர், வியட்நாமில் உள்ள மா மக்களில் 77,0% ), தாக் நோங் (6.456 பேர்), தோங் நாய் (2.436 பேர்)
மாங் 3,700 இலாய் சாவு (3.631 பேர், வியட்நாமில் உள்ள மாங் மக்களில் 98,1% )
மிநோங் 102,741 தாக் இலாக் (40.344 பேர், வியட்நாமில் உள்ள மிநோங் மக்களில் 39,3% ), தாக் நோங் (39.964 பேர், வியட்நாமில் உள்ள மிநோங் மக்களில் 38,9% ) மிநோங்
ஓ தூ 376 நிகே ஆன் (340 பேர், வியட்நாமில் உள்ள ஓ தூ மக்களில் 90,4% )
உரோ மாம் 436 கொன் தூம் (419 பேர், வியட்நாமில் உள்ள உரோ மாம் மக்களில் 96,1% )
தா ஓயி 43,886 தியுவா தியேன் குவே (29.558 பேர், வியட்நாமில் உள்ள தா ஓயி மக்களில் 67,35% ), குவாங் திரி (13.961 பேர், வியட்நாமில் உள்ள தா ஓயி மக்களில் 31,81% ) தா ஓயி
சின் முன் 23,278 சோன்லா (21.288 பேர், வியட்நாமில் உள்ள சின் முன் மக்களில் 91,5% ), தியேன் பியேன் (1.926 பேர்) சின் முன்
சோ தாங் 169,501 கொன் தூம் (104.759 பேர், இம்மாகாண மக்கள்தொகையில் 24,4% வியட்நாமில் உள்ள சோ தாங் மக்களில் 61,8% ), குவாங் நாம் (37.900 பேர், வியட்நாமில் உள்ள சோ தாங் மக்களில் 22,4% ), குவாங் நிகாய் (17.713 பேர்) சேதாங், சோ தாங்
சுடியேங் 85,436 பின் புவோசு (81.708 பேர், வியட்நாமில் உள்ள சுடியேங் மக்களில் 95,6% ) சுடியேங்
5. குமாங்–மியேன் தாவோ 751,067 வடக்கு வியட்நாம் யாவோ மக்கள், அல்லது மியேன் மக்கள். இவர்களில் பலர் இயூ மியேன் மொழியைப் பேசுகின்றனர்.
குமாங் 1,068,189 வடக்கு வியட்நாம் முன்னர் மேயோ எனப்பட்டவர், சீனாவில் மியாவோ மக்கள் எனப்படுபவர்.
பா தேன் 6,811 கா கியாங் (5.771 பேர், வியட்நாமில் உள்ள பா தேன் மக்களில் 84,7% ), துயேன் குவாங் (877 பேர்) பா-கிங்
6. மலாயோ-பாலினேசியர்கள் சாம் 161,729 நின் துவான் (67.274 பேர், வியட்நாமில் உள்ள சாம் மக்களில் 41,6% ), பின் துவான் (34.690 பேர், வியட்நாமில் உள்ள சாம் மக்களில் 21,4% ), பூ யேன் (19.945 பேர்), ஆன் கியாங் (14.209 பேர்) தென்வியட்நாம் சாம்பா அரசகுலச் சாம் கால்வழிகள்.
சூரு 19,314 இலாம் தோங் (18.631 பேர், வியட்நாமில் உள்ள சூரு மக்களில் 96,5% ) சூரு
ஏ தே 331,194 தாக் இலாக் (298.534 பேர், இம்மாகாணத்தின் மக்கள்தொகையில் 17,2% வியட்நாமில் உள்ள ஏ தே மக்களில் 90,1%), பூ யேன் (20.905 பேர்) இராதே
கியாராய் 411,275 கியா இலாய் (372.302 பேர், இம்மாகாணத்தின் மக்கள்தொகையில் 29,2% வியட்நாமில் உள்ள கியாராய் மக்களில் 90,5% ), நிகோவாய் இரா சோன் ஓ கொன் தும் (20.606 பேர்), தாக் இலாக் (16.129 பேர்) யாராய்
இராகிளாய் 122,245 நின் துவான் (58.911 பேர், வியட்நாமில் உள்ள இராகிளாய் மக்களில் 48,2% ), கான் கோவா (45.915 பேர், வியட்நாமில் உள்ள இராகிளாய் மக்களில் 37,6%), பின் துவான் (15.440 பேர்) இராகிளாய்
7. சீனர்கள் கோவா 823,071 ஓ சி மின் நகரம் (414.045 பேர், வியட்நாமில் உள்ள கோவா மக்களில் 50,3% ), தோங் நாய் (95.162 பேர்), சோசு திராங் (64.910 பேர்), கியேன் கியாங் (29.850 பேர்), பாசு இலியேயு (20.082 பேர்), பின் தூவோங் (18.783 பேர்), பாசு கியாங் (18.539 பேர்) கடல்கடந்த சீனர், இவர்களைத் தனியாக வகைபடுத்தப்பட்டுள்ள நிகாய் ஓக்கியேன் மக்களுடன் குழ்ப்பிக் கொள்ளக்கூடாது.
நிகாய் 1,035 தாய் நிகுயேன் (495 பேர், வியட்நாமில் உள்ள நிகாய் மக்களில் 47,8% ), பின் துவான் (157 பேர், வியட்நாமில் உள்ள நிகாய் மக்களில் 15,2% ) க்க்கா சீனர், கோவா மக்களில் இருந்து பிரித்து தனியாக வகைபடுத்தப்பட்டவர்
சான் தியூ 146,821 தாய் நிகுயேன் (44.131 பேர், வியட்நாமில் உள்ள சான் தியூ மக்களில் 30,1% ), வின் பூசு (36.821 பேர், வியட்நாமில் உள்ள சான் தியூ மக்களில் 25,1% ), பாசு கியாங் (27.283 பேர்), குவாங் நின் (17.946 பேர்), துயேன் குவாங் (12.565 பேர்) சான் தியூ, யாவோகண்டோனிய மொழி பேசுகின்றனர். சிலரியூ மியேன் மொழியும் பேசுகின்றனர்
8. திபெத்திய-பர்மியர்கள் பூனாய் 2,029 இலாய் சாவு (1.134 பேர், வியட்நாமில் உள்ள கோங் மக்களில் 55,9% ), தியேன் பியேன் (871 பேர், வியட்நாமில் உள்ள கோங் மக்களில் 42,9% ) கோங்
கா நீ 21,725 இலாய் சாவு (13.752 பேர், வியட்நாமில் உள்ள கா நீ மக்களில் 63,3% ), இலாவோ சாய் (4.026 பேர்), தியேன் பியேன் (3.786 பேர்) கா நீ
இலா கூ 9,651 இலாய் சாவு (9.600 பேர், வியட்நாமில் உள்ள இலாகூ மக்களில் 99,47% ) இலாகூ
உலோலோ 4,541 சாவோ பாங் (2.373 பேர், வியட்நாமில் உள்ள உலோலோ மக்களில் 52,3% ), கா கியாங் (1.426 பேர்), இலாய் சாவு (617 பேர்) யி
பூலா 10,944 இலாவோ சாய் (8.926 பேர், வியட்நாமில் உள்ள பூலா மக்களில் 81,6% ), யேன் பாய் (942 பேர்), கா கியாங் (785 பேர்), தியேன் பியேன் (206 பேர்)
சிலா 709 இலாய் சாவு (530 பேர், வியட்நாமில் உள்ள சிலா மக்களில் 74,75% ), தியேன் பியேன் (148 பேர், வியட்நாமில் உள்ள சிலா மக்களில் 20,87% )

அலுவலகப் பட்டியலில் இல்லாத இனக்குழுக்கள்

[தொகு]

உள்நாட்டவர்கள்

[தொகு]
  1. நிகுவோன் – இவர்கள் மூவோங் குழுவைச் சார்ந்தவர்களாக இருக்கலாம். இப்போது இவர்கள் வியட் (கின்) குழுவில் அரசால் வகைபடுத்தப்படுகின்றனர். நிகுவோன்களே தம்மை வியட் இனக்குழுவுடன் இனங்காண்கின்றனர்; இவர்களது மொழியும் வியட்டியத் துணைக்குடும்ப மொழியான வியட்-மூவோங் கிளையின் ஓர் உறுப்பாகும்.
  1. சுயி மக்கள் (நிகுவோய் தூய்) -அரசால் பா தேன் மக்கள் என வகைபடுத்தப்படுகின்றனர்.
  1. வியட்நாமின் இணையச் செய்தித்தாளான தந்திரியின்படி, 2008 செப்டம்பரில் தியூவா தியேன் குவே மக்கள் குழு வியட்நாமில் வாழும் இவர்களைப் பற்றி விரிவாக ஆயும் திட்டம் ஒன்றை அறிவித்தது. இவர்கள் பா கோ அல்லது பா சோ எனப்படும் இனக்குழுவினர் ஆவர். இந்த இனக்குழு பெரிதும் ஆலூவோய் சார்ந்த புறநகர் மாவட்டமான தியுவா தியேன் குவேயிலும் குவோங் கோவா (குவாங் திரி) மலைப்பகுதியிலும் வாழ்கின்றனர்.[3][4] இப்போது இவர்கள் தா ஓய் இனக்குழுவாக வகைபடுத்தப்படுகின்றனர்.
  1. பியுனாங்/பினாங் மக்கள். இந்த இனக்குழு பெரிதும் வடகிழக்கு கம்போடியாவில் வாழ்கின்றனர். என்றாலும் அமெரிக்கப் போரின்போது பலர் வியட்நாமுக்குச் சென்று பியுவான் மா தியுவாட் உயர்சம வெலி சுற்றி வாழத் தொடங்கினர். போர் முடிந்ததும் பெரும்பாலானவர்கள் கம்போடியாவுக்குத் திரும்பினாலும் சிலர் அங்கேயே வாழ்கின்றனர். இது evidenced by the story of குவின் தீ கதையில் இருந்து தெரியவந்துள்ளது. பியுனாங் மக்களில் மிகச் சிலரே வியட்நாமில் உள்ளனர். கிறித்தவ இயக்க்க் கூட்டமைப்பு கம்போடியாவில் வாழும் இவர்களை விரிவாக ஆய்ந்து இவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டி வெளியிட்டுள்ளனர். இவர்களின் வரலாற்றை அறிந்தவர்கள் இக்கூட்டமைப்பினர் மட்டுமே.

ஐரோப்பியர்கள்

[தொகு]

ஐரோப்பியர், வட அமெரிக்கர், ஆத்திரேலியர், ஆசியர்(வியட்நாமியர் அல்லாதார்) ஆகியோர் வியட்நாமில் வாழ்கின்றனர். இவர்களில் தற்காலிகமாக வாழ்பவரும் புலம்பெயர் தொழிலாளர்களும் திருமண உறவாலோ பிரான்சுக் குடியேற்றக்கால குடியிருப்புக் கால்வழியாலோ நிலைத்து வாழும் மக்களும் அடங்குவர். விடுதலைக்குப் பிறகு பெரும்பாலான ஐரோப்பியர் வியட்நாமை விட்டு வெளியேறிவிட்டனர்.

மேலும் காண்க

[தொகு]

தகவல் வாயில்கள்

[தொகு]
  1. 2009 Census: Kết quả toàn bộ Tổng điều tra Dân số và Nhà ở Việt Nam năm 2009, Tổng Cục Thống kê Việt Nam. Retrieved 18/08/2015.
  2. Trang Web Thủ tướng. பரணிடப்பட்டது 2017-12-01 at the வந்தவழி இயந்திரம் Dân số Việt Nam. Retrieved 22/08/2015.
  3. Việt Nam sẽ có dân tộc thứ 55?
  4. Pa Kô được bổ sung vào danh mục các dân tộc Việt Nam

மேலும் படிக்க

[தொகு]
  • Nguyễn Trọng Tấn; Viện khoa học xã hội Việt Nam - Viện dân tộc học - Tạp chí dân tộc học. 2005. Tổng mục lục 30 năm tạp chí dân tộc học (1974 - 2004). Hà Nội: Nhà xuất bản khoa học xã hội.

வெளி இணைப்புகள்

[தொகு]