வியட்நாமில் மகளிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வியட்நாமில் மகளிர்
Ao dai APEC.jpg
ஆசியா-பசிபிக் பொருளியல் கூட்டுறவு-2006 நிகழ்ச்சியில் ஆவோதாய் உடையணிந்த இளம்பெண்கள்.
பாலின சமனிலிக் குறியீடு
மதிப்பு0.299 (2012)
தரவரிசை48 ஆவது
தாய் இறப்புவீதம் (100,000க்கு)59 (2010)
நாடாளுமன்றத்தில் பெண்கள்24.4% (2012)
உயர்நிலைக் கல்வி முடித்த பெண் 25 அகவையினர்24.7% (2010)
பெண் தொழிலாளர்கள்73.2% (2011)
Global Gender Gap Index[1]
மதிப்பு0.6863 (2013)
தரவரிசை73 ஆவது out of 136

வியட்நாமில் மகளிர் (women in Vietnam) பாத்திரம் வியட்நாமின் வரலாற்றில் காலந்த்றும் மாறிக்கொண்ட்ந்ந் வந்துள்ளது. அவர்கள் சமூகத்தில் போராளிகளாக செவிலியராக தாயராக மனைவியராகப் பாத்திரங்களை வகித்து வந்துள்ளனர். வியட்நாம் மகளிர் உரிமைகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அரசில் மகளிரின் பேராண்மை உயர்ந்துள்ளது.வியட்நாம் மகளிர் ஒன்றியம் 1930 இல் உருவாக்கப்பட்டுள்ளது.

சீனக் குடியேற்ற ஆட்சிக்கு முன்பு வியட்நாம் தாய்வழி சமூகமாகவே இருந்துள்ளது எனவும் சீன ஆட்சி வியட்நாமில் கன்பூசியத் தந்தைவழி முறைமையைத் திணித்தது எனவும் பல அறிஞர்கள் கருதுகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் கி.பி இரண்டாம் நூற்றாண்டளவில் சீன ஆட்சி முடிவுற்றாலும், பின்வந்த வியட்நாமிய அரசகுலங்கள் சீன விழுமியங்களையும் நிறுவனங்களையும் பின்பற்றலாயினர்.19 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு இந்தோசaஇன ஆட்சி ஏற்பட்டது. அப்போது பலவியட்நாமிய் மகளிர் ஐரோப்பியரை மணந்தனர். இது இருபாலாருக்கும் நலம்தருவதாகக் கருதிக்கொண்டனர்.[2]

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தேசிய உணர்வு வியட்நாமில் எழுச்சியுற்றதால் 1954 இல் பிரெஞ்சு ஆட்சிக்கு முடிவுகட்டியது. வியட்நாம் இரு நாடுகளாகப் பிரிந்தது. தேசிய உணர்வு மகளிர் உரிமைகளை கூட்டியதோடு பிரெஞ்சு ஆட்சிக்கு எதிரான புரட்சியில் மகளிர் பெரும்பங்காற்றியுள்ளனர் என பல ஆய்வுகள் கூறுகின்றன..[3]

20 ஆம் நூற்றாண்டு முழுவதும் போரிலும் வீட்டுக்கு வெளியிலும் வியட்நாம் மகளிரின் பஙளிப்பும் பாத்திரமும் விரிவடைந்தவண்ணமே இருந்தன, குறிப்பாக இந்நிலை இந்தோசீனப் போரில் திறம்பட வெளிப்பட்டது. வியட்நாம் போரின்போதும் பின்னரும், வியட்நாமின் பொதுவுடைமைக் கட்சி ஆட்சி மகளிரின் உரிமைகளையும் சமமையையும் அரசில் மகளிரின் பங்களிப்பையும் வென்றெடுத்தது. 1960 களில் அரசு வேலைகளில் பெண்களுக்கான ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது, இதன்படி, அனைத்து அரசு துறைகளிலும் குறிப்பிட்ட விழுக்காட்டில் மகளிருக்கு வேளை வழங்கப்பட்டது..[4]

நிகழ்கால வியட்நாமிலும் பெண்களின் உரிமைகள் உயர்ந்தவண்ணமே உள்ளதோடு மகளிர் தலைமையுங்கூட வளர்ந்தவண்ணமே உள்ளது. அண்மையில், தாங் தி நிகோசு தின் 2016 ஏப்பிரலில் இருந்து வியட்நாமியக் குடியரசுத் துணைத்தலைவராக உள்ளார். கூடுதலாக, நிகுயேன் தி கிம் நிகான் 2016 மார்ச்சில் இருந்து வியட்நாம் தேசியச் சட்டமன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுவே இம்மன்ற முதல் பெண் தலைமையாகும்.[5][6] என்றாலும் வியட்நாமில் வீட்டளவிலும் சமூகப் பொருளியல் மட்டத்திலும் இன்னமும் பழைய ஆண்பாலினப் பாத்திர, பண்பாட்டுத் தாக்கங்கள் இல்லாமல் இல்லை.

வியட்நாம் போருக்கு முன் வரலாறு[தொகு]

தொடக்கநிலை வரலாறும் சீன ஆட்சியும்[தொகு]

வீட்டு வாசலில் பகைவன் வந்தால், பெண்களும் போருக்குக் கிளம்புவர். இவ்வுரை வியட்நாம் மகளிர் தகுதிக்கான சான்றாகும் எனக் கூறப்படுகிறது.[7] (Giac den nha dan ba phai danh) – என்பது வியட்நாமிய முதுமொழியாகும். "giac den nha, dan ba cung danh" எனும் வியட்நாமிய மேற்கோளின் பொருள் போர் மகளிருக்கு உகந்ததல்ல; என்றாலும் வீட்டு வாசலில் பகைவன் நின்றால் அப்போது பெண்களும் போரில் ஈடுபடுவர் எனபதாகும்.[8][9]

திரங் உடன்பிறப்புகள் (மகளிர்) ஆட்சி[தொகு]

முதன்மைக்கட்டுரை:திரங் உடன்பிறப்புகள் (மகளிர்) ஆட்சி

கி.பி 40 இல் திரங் திராசு, திரங் நிகி ஆகிய இரு திரங் உடன்பிறப்பு மகளிர், வியட்நாமை அப்போது ஆண்டுவந்த தோ தின் எனும் ஊழல்மலிந்த சீன ஆளுநரை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். இவர்கள் கியாவோ சி (இன்றைய வடக்கு வியட்நாம்) பகுதியின் நிலக்கிழாரின் பெண்கள்; அலுவலர்களின்விதவைகள். இவர்கள் மீ இலின்னில் தம் ஆட்சியை வெற்றிபெற்று நிறுவினர். இங்கு திரான் திராசு அரசியாக அறிவிக்கப்பட்டாள். அங்கு அவளுக்காக ஒரு தலைநகரம் உருவாக்கப்பட்டது. மீ இலின்னில் ஆட்சி செய்தபோது தோ தின் ஆட்சியின் கொடுமை வாய்ந்த வரிகள் அனைத்தையும் நீக்கினார். இவ்விருவரும் கி.பி 43 இல் சீனப் போர்த்தளபதியான ஏன் அரசகுல மா யுவானால் தோற்கடிக்கப்பட்டனர். இவர்கள் இன்னமும் பெண்போர்மணிகளாகவும் நாட்டின் வீராங்கனைகளாகவும் போற்றப்படுகின்றனர்.[10]

மேலும் காண்க[தொகு]

 • வியட்நாம் மகளிர் நினைவுச்சின்னம்

மேற்கோள்கள்[தொகு]

 1. "The Global Gender Gap Report 2013" 12–13. World Economic Forum.
 2. 0H. A. van Foreest and A. de Booy, eds., De Vierde Schipvaart derNederlanders naar Oost-IndiÃ" onder Jacob Wilkens en Jacob van Neck (1599-1604) (The Hague: Linschoten Vereeniging, 1980), 223; and Hamilton, A New Account, 2:115.
 3. Turley, William S. "Women in the Communist Revolution in Vietnam." Asian Survey 12.9 (1972): 793-805. JSTOR. Web. 30 Mar. 2014. <http://www.jstor.org/stable/2642829>.
 4. Jayne Werner, "Women, Socialism, and the Economy of Wartime North Vietnam," Studies in Comparative Communism, vol. 16 (1981), pp. 165-90. எஆசு:10.1016/0039-3592(81)90005-3
 5. "Vietnam elects first chairwoman of parliament". https://www.yahoo.com/news/vietnam-elects-first-chairwoman-parliament-032726345.html?ref=gs. 
 6. "Nguyen Thi Kim Ngan elected as first woman National Assembly chair". Báo Ấp Bắc. http://baoapbac.vn/english/politics/201603/nguyen-thi-kim-ngan-elected-as-first-woman-national-assembly-chair-670031/. 
 7. Nguyˆen, Van Ky. "Rethinking the Status of Vietnamese Women in Folklore and Oral History" 87–107 (21 pages as PDF file). University of Michigan Press.
 8. Hue-Tam Ho Tai (2001). The Country of Memory: Remaking the Past in Late Socialist Vietnam. University of California Press. பக். 1–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-22267-0. https://books.google.com/books?id=6RKggJM_oWoC&pg=RA1-PA74#v=onepage&q&f=false. 
 9. http://publishing.cdlib.org/ucpressebooks/view?docId=kt5z09q3kz&chunk.id=ss2.28&toc.id=ch06&brand=ucpress
 10. Sarah Womack (1995). "The remakings of a legend: women and patriotism in the hagiography of the Tru'ng sisters". Crossroads 9 (2): 31–50. 

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியட்நாமில்_மகளிர்&oldid=2680521" இருந்து மீள்விக்கப்பட்டது