வியட்நாமில் போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வியட்நாமில் போக்குவரத்து (Transportation in Vietnam) வளர்ச்சி அளவியலாகவும் தரநிலையிலும் வேகமாகப் பெருகியவண்ணம் உள்ளது.

தொடர்வண்டித் தடங்கள்[தொகு]

வியட்நாம் தொடர்வண்டி வலையமைப்பு.

வியட்நாமிய தொடர்வண்டி வலையமைப்பின் நீளம் 2600 கி.மீ ஆகும். இதில்வடக்கு-தெற்கு விரைவுத் தொடர்வண்டித் தடம் மட்டுமே 1726 கி.மீ நீளம் கொண்டதாகும். இது கனாய் நகரத்தையும் ஓ சி முன் நகரத்தையும் இணைக்கிறது. தேசியத் தொடர்வண்டி வலையமைப்பு முதன்மையாக, 1000மிமீ தண்டவாள அகலத்தைப் பெற்றுள்ளது. என்றாலும், நாட்டின் வடபகுதியில் சில 1435மிமீ தண்டவாள அகலத்தையும் சில கலந்த தண்டவாள அகலங்களையும் பெற்றுள்ளன. வியட்நாம் தொடர்வண்டி வலையமைப்பில், 2005 ஆம் ஆண்டளவில், 278 நிலையங்கள் அமைந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வடக்கு-தெற்கு விரைவுத் தடத்திலேயே அமைந்துள்ளன. இந்த வலையமைப்பு வியட்நாம் அரசின் தொடர்வண்டித் துறையால் இயக்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் கீழ் பல இணை/துணை நிறுவனங்கள் கட்டுமானம், தொலைத்தொடர்பு, பயிற்சி தொடர்வண்டி பேணுதலைச் சார்ந்த பிறபணிகளை மேற்கொள்கின்றன.[1][2][3]

வியட்நாமின் தொடர்வண்டி அகக்கட்டமைப்பின் ஒட்டுமொத்த நிலவரம் கீழான தரத்தில் இருந்து ஓரளவு சரியான நிலை வரை உள்ளது; பெரும்பாலான வலையமைப்புப் பகுதிகள் சீரமைப்பு வேண்டிய நிலையிலும் தரமுயர்ந்த்தாப்பட வேண்டிய நிலையிலும் உள்ளன. இவை பல பத்தாண்டு வியட்நாம் போரில் சிதந்த நிலையில் இருந்து ஓரளவு பழுதுபார்ப்புக்கு உட்பட்டதைத் தவிர, இன்னமும் முழுமையாக மீட்கப்படவேயில்லை. ஒரு யப்பானிய-வியட்நாமியக் கூட்டாய்வுக் குழு தொடர்வண்டி ஏதங்கள் நேர்வதற்கு இந்த்த் தொடர்வண்டி அகக்கட்டமைப்பின் சீர்கேடான நிலைமையே அடிப்படையான காரணம் என அறிவித்துள்ளது. வழக்கம்மக வியட்நாமில் ஊர்திகளோடோ தனியரோடோ தொடர்வண்டிகள் அடிக்கடி மோதுகின்றன. பெரும்பாலௌம் இவை முறையற்ற தடக் குறுக்கு நுழைவாலேயே நிகழ்கின்றன. மேலும், இவை வேகத்தைக் குறைக்க முடியாமையால் தொடர்வண்டித் தொடர்கள் தடம்புரள்வதாலும் நிகழ்கின்றன.[3]

பன்னாட்டுத் தொடர்வண்டி இணைப்புகள்[தொகு]

சீன மக்கள் குடியரசு இணைப்பு

மக்கள் சீனக் குடியரசுடன் வியட்நாமை இருதொடவண்டித் தடங்கள் இணைக்கின்றன. அவை, கைப்போங்கில் இருந்து கன்மிங் வரை செல்லும் மேற்கு யுன்னான்-வியட்நாம் தொடர்வண்டித் தடம், கனாயில் இருந்து நான்னிங் வரை செல்லும் கிழக்கு தொடர்வண்டித் தடம் என்பனவாகும். யுன்னான்-வியட்நாம் தொடர்வண்டித் தடம் குறுகிய தண்டவாளத் தொடராகும். இது மட்டுமே சீனாவின் உட்பகுதிக்குச் செல்கிறது; இதைச் செந்தர அகல வண்டித்தொடராக மாற்றவியலும். இப்போது சினப்பகுதை ஓட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. 2002 வரை எல்லைக்கடப்பு சேவை நிலவியது. பின்னர் வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் அடிக்கடி ஏற்பட்ட காலத் தாழ்த்தத்தால் இச்சேவை தேங்கியுள்ளது. [4] caused serious damage to the tracks on the Chinese side.[5] நான்னிங் வரையிலான தொடர்வண்டி இயக்கம் எல்லையோரத் தோங் தாங் எனுமிடத்தில் இலாங்சோன் மாகாணத்தின் ஊடாக நடக்கிறது. வழக்கமான சேவை எல்லையில் நிறுத்தப்படும்; அங்கு வியட்நாமின் குறுந்தடத் தொடர்வண்டியில் இருந்து சீனாவின் செந்தரத் தடத் தொடர்வண்டிக்கு மாறியதும் சீனத் தொடர்வண்டி நான்னிங் வரை செல்லும்.[5]

இந்த யுன்னான்-வியட்நாம் தொடர்வண்டித் தடம், சிங்கப்பூர்-கன்மிங் இணைப்புத் தொடரின் ஒரு பகுதியாகும். பின்னது 2015 இல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.[6]

கம்போடியா, இலாவோசு இணப்புகள்

வியட்நாமில் இருந்து இப்போது கம்போடியாவையோ இலாவோசையோ இணைக்கும் தொடர்வண்டித் தடம் ஏதும் இல்லை. என்றாலும், ஆசியன் அமைப்புத் (ASEAN) திட்ட்த்தின்படி, இரண்டு புதிய தொடர்வண்டித் தடங்கள் உருவாக்கத்தில் உள்ளன.இவற்றில் ஒன்று ஓ சி மின் நகரத்தைக் கம்போடியாவில் உள்ள பினோம் பின் நகரையும் மற்றொன்று, இலவோசில் அமைந்த தெக்கேக் நகரை வடக்குத் தெற்கு தொடர்வண்டித் தடத்துடன் இணைத்திடும். வியட்நாம்-பினோம் பின் தொடரின் வியட்நாமியப் பகுதி வடக்குத் தெற்குத் தொடரின் தியான் நிலையத்தில் தொடங்கி, கம்போடிய எல்லைக்கருகில் உள்ள பின் புவோசு மாகாணத்தில் உலோசு நின் நகரில் முடிவடையும். இது இதையொத்த கம்போடியாவின் திட்ட்த் தொடர்வண்டித் தட்த்தில் இணையும். ஆசியன் திட்டப்படி, இந்தப் பகுதி 2020 இல் முடிவடையும்; இது சிங்கப்பூர்-கன்மிங் தொடர்வண்டித் தட இணைப்புத் திட்டத்தின் பகுதியாக அமையும். இத்திட்டம் ஆசியன்-மேகாங் கழிமுகப் படுகைவளர்ச்சிக் கூட்டுறவு நிறுவனத்தால்(AMBDC) நிறைவேற்றப்படுகிறது.[6][7]

மிகுவேகத் தொடர்வண்டித் தடங்கள்[தொகு]

இப்போது கனாய் நகரத்தில் இருந்து ஓ சி மின் நகரத்துக்குச் செல்ல 30 மணி நேரம் ஆகிறது. எனவே வியட்ந்ந்மின் தேசியத் தொடர்வண்டிக் குழுமம் ஆகிய வியட்நாம் தொடர்வண்டிகள் நிறுவனம் இந்த இருநகரங்களூக்கு இடையில் மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும் விரைவுத் தொடர்வண்டித் தொடரை யப்பனியச் சிங்கான்சென் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமைக்க திட்டமிட்டுள்ளது. இப்பணி முடிவுற்றால், ஆறு மணி நேரத்திலேயே கனாயில் இருந்து ஓ சி மின் நகரத்துக்குச் செல்லமுடியும்.[8][9][10]வியட்நாமின் முதன்மை அமைச்சராகிய நிகுயேன் தான் தூங், முதலில் 2013 அளவில் 1630 கிமீ தொடரை முடிக்கும் கனவு இலக்கை அடைய ஒப்புதல் அளித்தார். இதற்கான 70% நிதி (33 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) யாப்பானிய ODA நிதியில் இருந்து பெறவும் கருதியுள்ளார். மீதி 30% நிதியைக் கடன்வாயிலாகப் பெறவும் நினைத்துள்ளார்.[9] பின்னர் இத்திட்ட மதிப்பீடு 53 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியதும், (இது வியட்நாமின் 2009 ஆம் ஆண்டின் தொகு தேசிய வி;ளைபொருளில் 60% ஆகும்) முடிவடையும் இலக்கு 2030 ஆம் ஆண்டுக்கு தள்ளிப் போடப்பட்டது. 2010 ஜூன் 19 இல் ஒருமாத ஆய்வுக்குப் பின்னர், வியட்நாம் தேசியச் சட்டமன்றம் உயர்செலவின உயர்வேகத் தொடர்வண்டித் தடத் திட்டத்தையே தள்ளிவிட்டு, அத்திட்டத்தை மீளாய்வு செய்யும்படி கூறிவிட்டது.[8][10]

நெடுஞ்சாலைகள்[தொகு]

தேசிய நெடுஞ்சாலைகள்:


விரைவூர்தித் தடங்கள்[தொகு]

விரைவூர்தித் தடங்களின் பட்டியல்:

வடக்கு-தெற்கு விரைவூர்தித் தடம் (வியட்நாம்)

 • கனாய் – கைப்போங். நீளம்: 96 கிமீ.
 • கனாய் – நின் பின். நீளம்: 84 கிமீ.
 • கனாய் – தாய் நிகுயென். நீளம்: 61 கிமீ.
 • கனாய் – பாசு கியாங். நீளம்: 63,5 கிமீ.
 • இலாங் கோவாலாசு நெடுஞ்சாலை (கனாய்). நீளம்: 31 கிமீ.
 • கனாய் – கனாய் பன்னாட்டு விமானநிலையம். நீளம்: 35 கிமீ.
 • கனாய் – இலாவோ சாய் (எல்லை சுங்கவிடம் இலவோ சாய்). நீளம்: 279 கிமீ.
 • இலியேன் குவாங் – பிரேன் (இலாம் தோங்). நீளம்: 18 கிமீ.
 • ஓ சி மின் நகரம் – உலோங்கான்]]. நீளம்: 45 கிமீ.
 • ஓ சி மின் நகரம் –உலோங் தாங் – தாவு கியாய் விரிவூர்தித் தடம்
 • ஓ சி மின் நகரம் – திரங் உலுவோங் விரைவூர்தித் தடம்
 • கைப்போங் – குவாங் நின்

குழாய்த் தொடர்கள்[தொகு]

துறைமுகங்களும் நாவாய்த்தளங்களும்[தொகு]

 • சாம்ரான் – சீனப் பயணங்களின்போது மார்க்கோபோலொ பயன்படுத்திய பெரிய ஆழ்நீர்த் துறைமுகம்; முன்பு 1960 களில் இது அஎரிக்காவின் தரைப்படைக்கும் நாவாய்ப்படைக்கும் நல்ல படைத்தளமாக விளங்கியது ; பின்னர் இது சோவியத் நாவாய்ப்படைக்கும் வியநாமிய நாவாய்ப்படைக்கும் பயன்பட்டது.
 • தா நாங் – ஓ சி மின் நகரத் துறைமுகத்துக்கும் கைப்போங் துறைமுகத்துக்கும் அப்பால், தியேன் சா துறைமுகம் வியட்நாலிலேயே மூன்றாம் பெரிய துறைமுகம் ஆகும்; இது ஆண்டுக்கு 3 முதல் 4 மில்லியன் டன்கள் சரக்கைக் கையாள்கிறது
 • கைப்போங்
 • ஓ சி மின் நகரம் – இது பின்வரும் இடங்களை உள்ளடக்கிய மாபெரும் துறைமுகம் ஆகும் Saigon port
 • கோங்காய்
 • குவிநோன்
 • [நாத்திராங்
 • தின்கியா மாவட்ட நிகிசோன் (தாங்கோவா)
 • கீயான் மாவட்டச் சோன் துவாங் (கா தின்]])
 • துங் குவாத் (குவாங் நிகாய்)
 • வூங் தாவு

வியட்நாம் 17,702 கி.மீ நீள நீர்வழிதடங்களைக் கொண்டுள்ளது, இவற்ரில் 1.8 மீ ஆழம் வரையிலான கலங்களை ஓட்டலாம்.

வணிகக் கடற்கலங்கள்[தொகு]

மொத்தம்: 579 கப்பல்கள் (1,000 GRT or over) வகை வாரியான கப்பல்கள்: barge 1, bulk 142, சரக்குக்கலம் 335, வேதிமப் பொருட் தகரி 23, கொள்கலக் கப்பல் 19, நீர்ம வளிமக் கப்பல் 7,பயணியர்/சரக்குக் கலம் 1, பாறையெண்ணெய்க் கப்பல் 48, குளிர்பதனச் சரக்குக் கலம் 1,உருள்தகவுக் கப்பல் 1, சிறப்புக் கொள்கலக் கப்பல் 1

அயல்நாட்டுப் பதிவுள்ள கலங்கள்: 86 (கம்போடியா 1, கிரிபாதி 2, மஙோலியா 33, பனாமா 43, தைவான் 1, துவளு 6) (2010)

விமான நிலையங்கள்[தொகு]

மக்கள் சேவை விமான நிலையங்கள்

 • மொத்தம் : 37
 • 3,047 மீ நீளத்துக்கும் கூடுதலான ஓடுதளம் உள்ள விமான நிலையங்கள்: 9
 • 2,438 மீ முதல் 3,047 மீ வரையிலான நீள ஓடுதளம் உள்ள விமான நிலையங்கள் :6
 • 1,524மீ முதல் 2,437 மீ நீள ஓடுதளம் உள்ள விமான நிலையங்கள் :13
 • 914 மீ முதல் 1,523 மீ நீள ஓடுதளம் உள்ள விமான நிலையங்கள் :9

சுருளிமெத்தை விமான நிலையங்கள்

 • மொத்தம்: 1

வியட்நாமில் சீருந்துகள்[தொகு]

வியட்நாமில் பரவலான பயன்பாட்டில் தென்கொரியச் சீருந்துகள் அமைகின்றன. என்றாலும், சில அமெரிக்க போர்டு சீருந்துகளுல் யப்பானியச் சீருந்துகளும் இங்கு ஓடுகின்றன. இசைவில்லா இறக்குமதிகள் வியட்நாமில் தடைசெய்யப் பட்டுள்ளன. வியட்நாமில் இயங்கும் பிரெஞ்சு சீருந்து பியூகியோத் ஆகும்; செருமனி நாட்டுப் பிரீமியம் குழுமத்தின் (ஆடி, BMW, மெர்சிடெசு-பெஞ்சு போன்ற) சீருந்துகளும் இங்கு ஓடுகின்றன.


மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Proposed Loan and Administration of Loan from Agence Française de Développement: Yen Vien–Lao Cai Railway Upgrading Project" (pdf) (November 2006). மூல முகவரியிலிருந்து 2011-06-07 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-06-27.
 2. "Infrastructure Maintenance and Construction". Vietnam Railways. மூல முகவரியிலிருந்து 2010-04-14 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-06-24.
 3. 3.0 3.1 "Hanoi-Ho Chi Minh City Railway Bridge Rehabilitation Project". Japan International Cooperation Agency (2007). பார்த்த நாள் 2010-06-30.
 4. This Train Beats Walking (Sometimes) New York Times, 2000-12-03
 5. 5.0 5.1 "Train travel in Vietnam". Seat61. பார்த்த நாள் 22 June 2010.
 6. 6.0 6.1 "Fact Sheet: The Singapore–Kunming Rail Link Project". ASEAN (2007-09-26). பார்த்த நாள் 2011-01-05.
 7. Vong Sokheng (2010-10-31). "China to bridge missing rail link". பார்த்த நாள் 2011-01-05.
 8. 8.0 8.1 "Critics urge brakes on Vietnam's high-speed rail". AFP. 2010-06-12. https://www.google.com/hostednews/afp/article/ALeqM5jZt1P7ZKoy4cwjdo9y9vSc7-NloA. பார்த்த நாள்: 2011-01-05. 
 9. 9.0 9.1 "High-speed train planned for Vietnam". New York Times (2007-02-06). பார்த்த நாள் 2011-01-05.
 10. 10.0 10.1 "National Assembly rejects express railway project". VietNamNet Bridge. 2010-06-21. http://english.vietnamnet.vn/politics/201006/National-Assembly-rejects-express-railway-project-917324/. பார்த்த நாள்: 2010-06-21. 

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Transport in Vietnam
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

நிலப்படங்கள்[தொகு]