வியட்நாமில் சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


Circle frame.svg

வியட்நாமில் சமயம் (2014)[1]

  வியட்நாமிய நாட்டுப்புறச் சமயம் அல்லது சமயம் சாராத மக்கள் (73.2%)
  கத்தோலிக்கக் கிறித்தவம் (6.8%)
  சீர்திருத்தக் கிறித்தவம் (Protestantism) (1.5%)
  [கோவாக்வோயியம் (Hoahaoism) (1.4%)
  பிற சமயங்கள் (0.1%)

நெடுங்காலமாக நிறுவப்பட்ட வியட்நாமின் சமயங்கள் (religions in Vietnam) எனப்படுபவற்றில் [[வியட்நாமிய நாட்டுப்புறச் சமயம் அடங்கும். இது வரலாற்றியலாக சீனாவின் கன்பூசியனியம், தாவோயியம் சார்ந்த,நெறிமுறைகளையும் திறன்மிக்க பவுத்த தாம் கியாவோ எனும் மும்மை போதனைகளையும் உள்ளடக்கியதாகும். வியட்நாம் உலகின் மிகக் குறைவாக சமய மயமாகிய நாடுகளில் ஒன்றாகும். 2014 ஆம் ஆண்டின் அரச அலுவற் புள்ளிவிவரப்படி, மொத்த மக்கள்தொகையான 90 மில்லியன் மக்களில் 24 மில்லியன் மக்களே நிறுவனச் சமயங்களைச் சார்ந்துள்ளனர். இவரில், 11 மில்லியன் பேர் பவுத்தர் (12.2%), 6.2 மில்லியன் பேர் கத்தோலிக்கர் (6.8%), 4.4 மில்லியன் பேர் சாவோதையர் (4.8%), 1.4 மில்லியன் பேர் சீர்டிருத்தக் கிறித்தவர்(1.6%), 1.3 மில்லியன் பேர் கோவாகோவாவினர் (1.4%), 75,000 பேர் முசுலிம்கள், 7,000 பேர் பாகாலியர், 1,500 பேர் இந்து சமயத்தவர், மேலும் பிற சிறுகுழுக்கள் (<1%) பிற சமயத்தவர் ஆவர்.[1] மரபான தேவர், தேவதை, மூத்தோர் ஆகியவரை வழிபடும் நாட்டுப்புற வடிவம் 1980 களுக்குப் பின்னர் புத்துயிர்ப்பு பெற்றுள்ளது.[2]

பியூ ஆராய்ச்சி மைய 2010 ஆம் ஆண்டின் அறிக்கைப்படி, மொத்த மக்கள்தொகையில், (45.3%) அளவு வியட்நாமியர் நாட்டுப்புறச் சமயம் சார்ந்துள்ளனர். பவுத்தர்கள் 16.4% அளவினர் ஆவர்; 8.2% அளவினர் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் ஆவர்; எஞ்சிய 30% அளவினர் சமயம் சாராதவர் ஆவர்.[3][4] அலுவல்முறைப்படி, வியட்நாமியப் பொதுவுடைமைக் கட்சியும் அரசும் வியட்நாமை வியட்நாமியச் சமவுடைமைக் குடியரசு எனவும் இதுவொரு நாத்திக ந்நடு என்வும் அறிவித்துள்ளன.[5]

பருந்துப் பார்வை[தொகு]

1999 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பெர்ம்பாலான வியட்நாமியர் சமயம் சாராதவராக்ப் பதிவு செய்திருந்தாலும்,[6] சமயம் என்பது அனைவரும் ஏற்கின்ற ஒத்த நம்பிக்கை, நடைமுறைகள் எனும் வரையறையின்படி, வியட்நாமிய வாழ்க்கையில் சமயம் ஒருங்கிணைந்த பகுதியாகவே உள்ளது,[7] இது உள்நாட்டு, வெளிநாட்டு வியட்நாமியரின் சமூக நடத்தையையும் ஆன்மீக நடைமுறைகளையும் வழிபடுத்துகிறது. தாம் கியாவோ எனும் முச்சமயம், அதாவது, மகாயாணப் பவுத்தம், தாவோயியம், கன்பூசியனியம், நாட்டுப்புறச் சமயம் ஆகியவை இணைந்த கூட்டுச் சிந்தனை மரபு, வியட்நாமியரின் நம்பிக்கைகளிலும் நடைமுறைகளிலும் தாக்கம் செலுத்துகிறது. இது கணக்கெடுப்பில் பதிவாவதில்லை.வியட்நாமியர் பின்பற்றும் மிகக் குறிப்பிடத்தக்க ஆன்மீக நடைமுறைகளில் ஒன்று மூதாதையர் வழிபாடாகும். இவ்வழிபாட்டைச் சீனரும் பெரும்பாலான ஆசியப் பண்பாடுகளும் மேற்கொள்கின்றன. சமயம் சார்ந்த அல்லது சாராத வியட்நாமியரின் வீடுகளிலும் வணிக இல்லங்களிலும் பலிபீடங்கள் உள்ளன. அங்கு மூதாதையருக்கு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இவை முதன்மையான மரபு அல்லது சமய விழாக்களில் அதாவது இறப்பு நினைவு விழா, வணிகத் தொடக்கம், குடும்ப உறுப்பினருக்கான வழிப்படுத்தல் போன்ர நிகழ்ச்சிகாளில் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான வியட்நாமியருக்கு பேய்களிலும் ஆவிகளிலும் நம்பிக்கை உண்டு; தம் மூத்தோருக்கு முறையாக வழிபாடு செய்யாவிட்டால் அவர்கள் பசிமிக்க பேய்களாக 9வியட்நாமில் மாதோய்களாக) அலைவர் என்ற நம்பிக்கை வியட்நாமியரிடம் உண்டு .[nb 1]

2002 ஆம் ஆண்டின் பியூ ஆராய்ச்சி மைய அறிக்கை வியட்நாமின் 24% அளவு மக்கள்தொகையைச் சார்ந்தவரே சமயத்தை மிகவும் முதன்மையானதாகக் கருதுகின்றனர்.[8]

புள்ளியியல்[தொகு]

அரசு பதிவு செய்த சமயக் குழுக்களின் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது
சமயக்
குழு
மக்கள்தொகை
% 2009[9]
மக்கள்தொகை
% 2014[1]
வியட்நாமிய நாட்டுப்புறச் சமயம்,
சமயஞ்சாராதவர்களும் நாத்திகர்களும்
81.6% 73.2%
பவுத்தம் 7.9% 12.2%
கிறித்தவம் 7.4% 8.3%
கத்தோலிக்கம் 6.6% 6.8%
சீர்திருத்தக் கிறித்தவம் 0.8% 1.5%
சாவோதையியம் 1.0% 4.8%
கோவாகோவாயியம் 1.6% 1.4%
பிற சமயங்கள் 0.2% 0.1%

வரலாறு[தொகு]

வியட்நாம் நாட்டில் நிகா திராங்கில் உள்ள மாபெரும் புத்தர் சிலை.

வியட்நாமியரின் மிகப் பழைய சமய நடைமுறைகளாக ஆவி வழிபாடும் குலக்குறி வழிபாடும் நிலவின.[10]தோன் சோன் முரசு அழகுபாடுகள் விழா, சமயப் பொருள்களும் நம்பிக்கைகளும் அமைந்தவையாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.[nb 2]அவற்றில் பறவை உருவங்கள் உள்ளன; எனவே தொடக்க கால வியட்நாமிய்ர் பறவைகலை வழிபட்டிஉக்கலாம். வியட்நாமியக் கலையில் அடிக்கடி நீர்த்தும்பிகள் அமைகின்றன.இது அவர்களது தந்தையாக்க் கருதப்படும் இலாசுலோங் குவான் எனும் தொன்மக் கடவுளாகிய தும்பிக்கடவுளின் வழிபாடாகலாம்.

அகச் சமயங்கள்[தொகு]

அடுக்குத் தூபியில் வழிபடும் இலேந்தோங் வழியினர்.

முதன்மைக்கட்டுரை:வியட்நாமிய நாட்டுப்புறச் சமயம்

தாவோ துவா[தொகு]

தாவோ மாவு[தொகு]

பவுத்தம்[தொகு]

கனாயில் உள்ள ஒற்றை அடுக்குத் தூபி, வரலாற்றுப் பவுத்தக்கோயில்.
தூயநில ஆசான் அமிதாப புத்தர், பெண்துறவிக்கு அருள்தருதல், குவானாம் அடுக்குத் தூபி, சோலான்.

முதன்மைக்கட்டுரை:வியட்நாமில் பவுத்தம்

தூய நிலப் பவுத்தம்[தொகு]

கோவாகோவா[தொகு]

தூ ஆன் கியேயு நிகீயா[தொகு]

கிறித்தவம்[தொகு]

முதன்மைக்கட்டுரை:வியட்நாமில் கிறித்தவம்

கத்தோலிக்கம்[தொகு]

நோத்ரே தாம் தேவாலயம், ஓ சி மின் நகர், வியட்நாம்.

முதன்மைக்கட்டுரை:வியட்நாமில் உரோமக் கத்தோலிக்கம்

சீர்திருத்தக் கிறித்தவம்[தொகு]

முதன்மைக்கட்டுரை:வியட்நாமில் சீர்திருத்தக் கிறித்தவம்

கீழை மரபியம்[தொகு]

பிந்தைய புனிதரின் இயேசு கிறித்து பேராயம்[தொகு]

சாவோ தையியம்[தொகு]

வியட்நாம், தாய்மின் நகரில் சாவோதையில் துறவிகள் வழிபடல்.

இந்து சமயம்[தொகு]

முதன்மைக்கட்டுரை:தென்கிழக்காசியாவில் இந்து சமயம், வியட்நாம்

வியட்நாம் நாட்டில் நிகா திராங்கில் உள்ள இந்துக் கோயில்

இசுலாமியம்[தொகு]

ஆன் கியாங்கில் உள்ள மசூதி

முதன்மைக்கட்டுரை:வியட்நாமில் இசுலாமியம்

யூதவியம்[தொகு]

முதன்மைக்கட்டுரை:வியட்நாமில் யூதர் வரலாறு

பாகாலியம்[தொகு]

முதன்மைக்கட்டுரை:வியட்நாமில் பாகாலியம்

சமய விடுதலை[தொகு]

முதன்மைக்கட்டுரை:வியட்நாமில் சமய விடுதலை

மேலும் காண்க[தொகு]

 • வியட்நாமில் சமய விடுதலை
 • வியட்நாமிய மெய்யியல்
நிறுவன சமயங்கள்
 • வியட்நாமில் பாகால் நம்பிக்கை
 • வியட்நாமில் பவுத்தம்
 • வியட்நாமில் கிறித்தவம்
  • [வியட்நாமில் மரபியம்
  • வியட்நாமில் சீர்திருத்தக் கிறித்துவம்
   • வியட்நாமில் மென்னோனைட் பேராயம்
   • வியட்நாமில் கடவுட்குழுக்கள்
  • வியட்நாமில் உரோமக் கத்தோலிக்கம்
 • வியட்நாமில் யூதவியம்
 • வியட்நாமில் இசுலாமியம்
 • வியட்நாமில் தாவோயியம்

குறிப்புகள்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. "If properly buried and worshipped, the dead would be happy to remain in their realm and act as benevolent spirits for their progeny. But those who died alone and neglected, and to whom no worship was given, disturbed the dead and preyed on the living." Hue-Tam Ho Tai (2008-08-20). "Religion in Vietnam: A World of Gods and Spirits". Asia Society. பார்த்த நாள் 2010-06-11.
 2. "இவை சடங்கு நிகழ்த்தவே பயன்பட்டுள்ளன (எ.கா. ஐகாம் (Higham) 1996: 133)மேலும் அவை சமய சூழலிலேயே செய்யப்பட்டன எனவும் வாதிடலாம்; எனவே தோங் சோன் சமயம் பற்றியும் பேசலாம்." Bowdler, Sandra (2006). Bacus, Elisabeth A.; Glover, Ian; Pigott, Vincent C.. eds. "The Hoabinhian: Early Evidence for SE Asian Trade Networks?". Uncovering Southeast Asia's past: selected papers from the 10th International Conference of the European Association of Southeast Asian Archaeologists (National University of Singapore): 357. 

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 Home Office: Country Information and Guidance — Vietnam: Religious minority groups. December 2014. Quoting United Nations' "Press Statement on the visit to the Socialist Republic of Viet Nam by the Special Rapporteur on freedom of religion or belief". Hanoi, Viet Nam 31 July 2014. Vietnamese. Quote, p. 8: "[...] According to the official statistics presented by the Government, the overall number of followers of recognized religions is about 24 million out of a population of almost 90 million. Formally recognized religious communities include 11 million Buddhists, 6.2 million Catholics, 1.4 million Protestants, 4.4 million Cao Dai followers, 1.3 million Hoa Hao Buddhists as well as 75,000 Muslims, 7000 Baha’ís, 1500 Hindus and others. The official number of places of worship comprises 26,387 pagodas, temples, churches and other religious facilities. [...] While the majority of Vietnamese do not belong to one of the officially recognized religious communities, they may nonetheless – occasionally or regularly – practise certain traditional rituals, usually referred to in Viet Nam under the term "belief". Many of those traditional rituals express veneration of ancestors. [...]"
 2. Philip Taylor. Goddess on the Rise: Pilgrimage and Popular Religion in Vietnam.
 3. The Global Religious Landscape 2010. The Pew Forum.
 4. "Global Religious Landscape". The Pew Forum. பார்த்த நாள் 4 May 2014.
 5. Jan Dodd, Mark Lewis, Ron Emmons. The Rough Guide to Vietnam, Vol. 4, 2003. p. 509: "After 1975, the Marxist-Leninist government of reunified Vietnam declared the state atheism while theoretically allowing people the right to practice their religion under the constitution."
 6. "Vietnam". World Factbook. Central Intelligence Agency. பார்த்த நாள் 17 May 2010.
 7. "Beliefs and religions". Embassy of Vietnam (USA). பார்த்த நாள் 17 May 2010.
 8. "Among Wealthy Nations, U.S. Stands Alone In Its Embrace of Religion". Pew Global Attitudes Project. Pew Research Center (2002-12-19). பார்த்த நாள் 2010-06-22.
 9. Full results of the 2009 Population and Housing Census of Vietnam, part #1.
 10. Hue-Tam Ho Tai (2008-08-20). "Religion in Vietnam: A World of Gods and Spirits". Asia Society. பார்த்த நாள் 2010-05-15.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Religion in Vietnam
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியட்நாமில்_சமயம்&oldid=2698583" இருந்து மீள்விக்கப்பட்டது