விமலா ரங்காச்சார்
விமலா ரங்காச்சார் Vimala Rangachar | |
---|---|
![]() | |
பிறப்பு | 1929 பெங்களூர், மைசூர் அரசு, இந்தியா |
இறப்பு | (அகவை 96) பெங்களூர், கருநாடகம், இந்தியா |
தேசியம் | ![]() |
குடியுரிமை | இந்தியர் |
அறியப்படுவது | நுண்கலைகளின் பாதுகாப்பு இயக்கத்துடன் தொடர்புடையவர் |
பெற்றோர்(கள்) | எஸ். கே. ராமானுஜ ஐயங்கார், அம்மணியம்மாள் |
விமலா ரங்காச்சார் (Vimala Rangachar, 1929 – 25 பெப்ரவரி 2025)[1] இந்தியாவின் கருநாடகாவின் நுண்கலை மற்றும் நிகழ்த்து கலைகளின்பாதுகாப்பு இயக்கத்துடன் தொடர்புடை கல்வியாளர் ஆவார்.[2] கருநாடகாவின் கைவினை மன்றத்தின் தலைவரான இவர் மாவல்லி கல்வி நிறுவனங்களின் நிறுவனர் உறுப்பினராகவும் அதன் தலைவராகவும், கதக் நாட்டிய நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார். மைசூர் கல்வி சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், கல்வி, கலை மற்றும் கலாச்சாரத் துறைகளில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக கர்நாடக அரசின் ‘இராஜ்யோத்சவா விருதைப்’ பெற்றார். மேலும், பாரதிய வித்தியா பவனின் கௌரவத் தலைவராகவும் இருந்தார். விமலாவிற்கு 2004 ஆம் ஆண்டில் ‘கமலா சம்மான் விருது’ வழங்கப்பட்டது.
இளமை வாழ்க்கை
[தொகு]விமலா ரங்காச்சார் 1929 ஆம் ஆண்டு எஸ். கே. ராமானுஜ ஐயங்கார் மற்றும் அம்மணியம்மாளுக்கு மகளாகப் பிறந்தார்.[3] இவரது தாத்தா வெங்கடரங்க ஐயங்கார் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மல்லேசுவரத்தை நிறுவியவர்களில் ஒருவராக இருந்தார். 16 வயதில், இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலியில் பணியாற்றிய மருத்துவரும் இராணுவ வீரருமான டாக்டர் ரங்காச்சார் என்பவரை மணந்தார். சிறுவயதிலேயே நடந்த திருமணத்திற்குப் பிறகும், இவர் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தார். ஆங்கிலம் மற்றும் உளவியலில் பட்டப்படிப்பை முடித்தார்.
தொழில்
[தொகு]
1956 ஆம் ஆண்டு மைசூர் கல்வி சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான விமலா ரங்காச்சார், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கு தலைமை தாங்கினார், இறுதியில் பல ஆண்டுகள் அந்த அமைப்பின் தலைவராக இருந்தார். 2025 இல் தான் இறக்கும் போது, அதன் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.[4]
பெண்கள் அதிகாரமளிப்புக்கான விமலா ரங்காச்சார் வாதாடினார். மேலும் பெண்கள் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் ஒரு சமூகமான மல்லேசுவரம் தொழில்முனைவோர் பெண்கள் சங்கத்தை இணைந்து நிறுவினார். குழந்தைகள் அனாதை இல்லங்களை உள்ளடக்கிய ஒரு தொண்டு நிறுவனமான சேவா சதனின் தலைவராகவும் பணியாற்றினார். நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் ச. வெ. ராமனின் மனைவி உலோகசுந்தரியிடமிருந்து இந்தப் பதவியை விமலா ஏற்றுக்கொண்டார்.
பாரம்பரிய இந்திய கைவினைப்பொருட்கள் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்துவதிலும் இவர் ஈடுபட்டார். இந்த ஆர்வம் தனது தாயார் அம்மாணி அம்மாளிடமிருந்து பெற்ரார். இந்தப் பணியின் மூலம், இவர் கமலாதேவி சட்டோபாத்யாயாவால் வழிநடத்தப்பட்டு, பாரதிய நாட்டிய சங்கம் மற்றும் இந்திய கைவினை மன்றம் ஆகிய இரண்டின் கருநாடக அத்தியாயங்களுக்கும் தலைமை தாங்கினார்.
சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் மகளுடன் சேர்ந்து மல்லேசுவரத்தில் முதல் பெண்கள் விடுதிகளை ரங்காச்சார் அமைத்தார். அரசாங்கத்திடமிருந்து ஓரளவு நிதி பெறுவதற்காக இருவரும் ஒரு அமைப்பைப் பதிவு செய்ய வேண்டியிருந்தது. மேலும் இவர்கள் ஒருவரையொருவர் பூனையுடன் தொடர்புடைய “மியாவ்” என்ற வார்த்தையை அந்த சங்கத்திற்கு MEWS என்று பெயரிட்டனர். பின்னர் இவர்கள் ‘மல்லேசுவரம் தொழில்முனைவோர் பெண்கள் சங்கம்’ என்ற பெயரைக் கொண்டு வந்தனர்.[5]
பெங்களூரைத் தளமாகக் கொண்ட ‘கலாஜோதி’ என்ற நாடகக் குழுவின் தலைவராக ரங்காச்சார் நாடகத்துறையிலும் ஈடுபட்டிருந்தார். ஆண் நடிகர்கள் பெண் வேடங்களில் நடிப்பதில் அதிருப்தி அடைந்த இவர், தானும் ஒரு வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார். மேலும், தனது கணவரையும் நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. குழுவின் சில தயாரிப்புகளில் கன்னட நாடக ஆசிரியர்களான தி. ப. கைலாசம் மற்றும் பிரவதனி ஆகியோரின் நாடகங்களும் அடங்கும். குழுவின் தயாரிப்புகளில் ஒன்று கைலாசத்தின் அம்மாவ்ர காந்தா நாடகத்தின் இந்தி நிகழ்ச்சியாகும். இதில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவும் கலந்து கொண்டனர்.[6]
பெங்களூரில் உள்ள ஜே.சி. சாலையில் அமெச்சூர் டிராமாடிக் அசோசியேட்ஸ் என்ற நாடகக் குழுவை அமைத்த கலைஞர்களில் இவரும் ஒருவர். 1970 களின் முற்பகுதியில், குழந்தைகள் நாடகத்திற்கான பிரத்யேக இடமாக பெங்களூரில் உள்ள கப்பன் பூங்காவில் ‘ஜவகர் பால பவன்’ அமைப்பதற்கு விமலா ரங்காச்சார் பங்களித்தார். இந்தியாவின் கலாச்சாரத் தூதராக அமெரிக்காவிற்கும் அப்போதைய சோவியத் ஒன்றியத்திற்கும் சுற்றுப்பயணம் செய்தார்.
விருதுகள்
[தொகு]விமலா ரங்காச்சார், 2004 ஆம் ஆண்டு ‘கமலா சன்மான் விருதைப்’ பெற்றார். மேலும் கலை மற்றும் கலாச்சாரத்திற்கான பங்களிப்புகளுக்காக கர்நாடக அரசாங்கத்தின் ‘இராஜ்யோத்சவா விருதையும்’ பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Multi-faceted cultural personality and Mysore Education Society co-founder Vimala Rangachar passes away in Bengaluru
- ↑ Devika, V. R (7 November 2019). "Vimala Rangachar — a saga of service" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/society/vimala-rangachar-a-saga-of-service/article29908773.ece.
- ↑ Rizvi, Aliyeh. "Resident Rendezvoyeur: Woven into city history". Bangalore Mirror (in ஆங்கிலம்). Retrieved 2 March 2025.
- ↑ "Our Founders". MES Vidyasagara Prof. MPL Sastry PU College (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2 March 2025.
- ↑ Damodaran, Akhila (2016-01-20). "Meet the Heroes of Malleswaram". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2025-03-08.
- ↑ "~ಅಮ್ಮೋರ ಗಂಡ | Ammora Ganda~". www.prakasamtrust.org. Retrieved 1 March 2025.