உள்ளடக்கத்துக்குச் செல்

விமலகீர்த்தி சூத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விமலகீர்த்தி சூத்திரம் அல்லது விமலகீர்த்தி நிர்தேச சூத்திரம்(विमलकीर्ति-निर्देश-सूत्र) இலக்கிய வளம் உள்ள ஒரு மகாயான சூத்திரம் ஆகும். இந்த சூத்திரம் மகாயான கருத்துகளை மிகவும் விரிவாக விவரிக்கின்றது. அதிலும் முக்கியமாக அத்வைத கருத்தினை விரித்துரைக்கிறது. இந்த சூத்திரம் விமலகீர்த்தி போதிசத்துவரால் உபதேசிக்கப்பட்டது. மேலும் இதில் விமலகீர்த்தி சூன்யத்தனமையை குறித்து விவரிக்கையில் இவ்விதமான கருத்துகள் உபதேசிக்கப்பட்டன.


விமல்கீர்த்தி சூத்திரத்துக்கு கீழ்க்கணட மூன்று புகழ்பெற்ற சீன மொழி பெயர்ப்புகள் உள்ளன

  • Wéimójié suǒshuō jīng (குமாரஜீவர்; T 475.14.537a-557b)
  • Shuō wúgòuchēng jīng (சூவான் சாங்க் . T 476.14.557-587)
  • Fóshuō wéimójié jīng (லோகக்‌ஷேமர் . T 474.14.519-536)

இதைத் தவிர்த்து இதற்கு முன்னர் சீகியான்(223-228), தர்மாகரர்(308), உபாசூன்யர்(545), ஞானகுப்தர்(591) ஆகியோரும் இதை மொழிபெயர்த்துள்ளனர்.

எனினும் குமாரஜீவரின் மொழிபெயர்ப்பே மிகவும் பரவலாக போற்றப்படுகிறது,

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விமலகீர்த்தி_சூத்திரம்&oldid=1348550" இலிருந்து மீள்விக்கப்பட்டது