விபா நடராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விபா நடராஜன் ஒரு இந்தியத் திரைப்பட நடிகையாவார். சென்னையில் பிறந்த இவர் சென்னையிலும் பெங்களூரிலும் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். இவர் சுற்றுலா மற்றும் சுற்றுலாப்பிரிவு இளங்கலை பட்டதாரி ஆவார். நடிகர் அரவிந்த் சாமி இவரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது[1].

இவர் கன்னடத்தில் 2011 வெளிவந்த ஆத்தா படத்தில் சுமந்த் ஷைலேந்திராவுடன் இணைந்து அறிமுகமானார். இதில் அவரது செயல்திறன் குறித்து கலவையான விமர்சனங்களைப் பெற்றார்[2]. இவரது இரண்டாவது படம் தமிழில் வெளிவந்த காதல் படமான லீலை. இப்படத்தின் பெரும்பகுதி 2008 இல் படமாக்கப் பட்டாலும் 2012 இலேயே வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் காயத்திரி என்ற துணை கதாப்பாத்திரத்தில் இவர் இடம்பெற்றார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்பு
2011 ஆத்தா சுவாதி கன்னடம்
2012 லீலை காயத்திரி தமிழ்
2012 நான் உமா தமிழ்
2012 மதில் மேல் பூனை திவ்யா தமிழ்
2013 சும்மா நச்சுன்னு இருக்கு - தமிழ் படப்பிடிப்பில் உள்ளது
2013 பேசு - தமிழ் படப்பிடிப்பில் உள்ளது
2013 சிப்பாய் - தமிழ் படப்பிடிப்பில் உள்ளது

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.indiaglitz.com/channels/kannada/article/66048.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-21. பார்க்கப்பட்ட நாள் 2013-06-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விபா_நடராஜன்&oldid=3571678" இலிருந்து மீள்விக்கப்பட்டது