விபரீதக் கோட்பாடு (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
‎விபரீதக் கோட்பாடு
விபரீதக் கோட்பாடு
நூலாசிரியர்சுஜாதா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைபுதினம்
வெளியீட்டாளர்கிழக்குப் பதிப்பகம் [1] விசா பப்ளிகேஷன்ஸ்[2]
வெளியிடப்பட்ட நாள்
2010
ISBN978-81-8493-275-1

விபரீதக் கோட்பாடு, சுஜாதாவால் எழுதப்பட்டு 1976-இல் 'மாலைமதி' இதழில் வெளிவந்தது. பின்னர் கிழக்குப் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

கதைக் கரு[தொகு]

மறுமணம் செய்ய விரும்பும் ஓர் இளைஞன், காணாமல் போன தனது முதல் மனைவியைத் தேடிக் கண்டுபிடித்து, அவளிடமிருந்து விவாகரத்து வாங்கித் தருமாறு வக்கீல் கணேஷிடம் கேட்கிறான். அந்த இளைஞனின் வீட்டில், அந்த பெண்ணின் அறையில் கிடைத்த குறிப்புகளைக் கொண்டு, அப்பெண் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து கொள்கிறார்கள் வக்கீல் கணேஷ், வசந்த். அவர்கள் அங்கு செல்லும் போது, அவள் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறாள். அப்பெண் கொலை செய்யப்பட்டதன் உள்நோக்கம் என்ன, என்பதை கணேஷும் வசந்தும் துப்பறிந்து கண்டுபிடிக்கும் கதை.

கதை மாந்தர்கள்[தொகு]

  • கணேஷ்
  • வசந்த்
  • தருணா
  • சாமிநாதன்
  • சேஷகிரி
  • ப்ரதிமா
  • முத்துராமலிங்கம் மற்றும் பலர்.

மேற்கோள்கள்[தொகு]