வின்ட்சர் முடிச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வின்ட்சர் முடிச்சு (Windsor knot) என்பது ஆண்களுக்கான கழுத்துப்பட்டிகளைக் கட்டுவதற்குப் பயன்படும் ஒரு முடிச்சு ஆகும். அரை வின்ட்சர் முடிச்சிலிருந்து வேறுபடுத்துவதற்காக இதனை முழு வின்ட்சர் முடிச்சு என்றும் குறிப்பிடுவது உண்டு. கழுத்துப்பட்டிகளுக்கான பிற முடிச்சுகளுடன் ஒப்பிடும்போது இது அதிக அகலம் கொண்ட முக்கோண வடிவமாகக் காணப்படும். இதன் பெயர் வின்ட்சரின் டியூக்கான முடிதுறந்த மன்னர் எட்டாம் எட்வார்டின் பெயரைத் தழுவி ஏற்பட்டதாகக் கருதப்பட்டது ஆனால் உண்மையில் இப்பெயர் அவரது பாட்டனான ஏழாம் எட்வார்டின் பெயரைத் தழுவி ஏற்பட்டதாகும். இந்த டியூக் அகலமான முடிச்சுடன் கழுத்துப்பட்டி கட்டுவதையே விரும்பினார். அதனால், இவர் தனது கழுத்துப் பட்டிகளை தடிப்புக்கூடிய துணிகளைப் பயன்படுத்தித் தைப்பித்ததாகக் கூறப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

Neckties திறந்த ஆவணத் திட்டத்தில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்ட்சர்_முடிச்சு&oldid=1352999" இருந்து மீள்விக்கப்பட்டது