வின்டோஸ் செர்வர் 2003

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வின்டோஸ் செர்வர் 2003
வின்டோஸ் 2003 எண்டபிரைஸ் எடிசன் திரைக்காட்சி
விருத்தியாளர்மைக்ரோசாப்ட்
ஓ.எஸ். குடும்பம்மைக்ரோசாப்ட் வின்டோஸ்
மூலநிரல்பகிரப்பட்ட மூலம்
உற்பத்தி வெளியீடு24 ஏப்ரல், 2003
மென்பொருள்
வெளியீட்டு வட்டம்
2003 சேவைப்பொதி 2 (5.2.3790.3959) / 13 மார்ச், 2007[1]
கருனி வகைHybrid kernel
அனுமதிMS-EULA
அதிகாரப்பூர்வ
வலைத்தளம்
வின்டோஸ் செர்வர் 2003
ஆதரவு நிலைப்பாடு
பிரதான ஆதரவு 13 ஜூலை 2010.[2]

வின்டோஸ் செர்வர் 2003 மைக்ரோசாப்டினால் வின்டோஸ் 2000 செர்வரின் வழிவந்த வணிகப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு 24 ஏப்ரல் 2003 இல் வெளிவிடப்பட்ட ஓர் வழங்கி (செர்வர்) இயங்குதளமாகும். இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான விண்டோஸ் சர்வர் 2003 R2 6 டிசம்பர் 2005 இல் வெளிவந்தது. இதன் வழிவந்த 64பிட் செயலிகளுக்கு மாத்திரமேயான விண்டோஸ் செர்வர் 2008 4 பெப்ரவரி 2008 இல் வெளிவந்தது. [3]

மைக்ரோசாப்ட்டின் கருத்துப்படி இதன் முன்னர் வெளிவிடப்பட்ட விண்டோஸ் 2000 செர்வரை விட வினைத் திறனானதாகும். [4]

மேலோட்டம்[தொகு]

ஏப்ரல் 24, 2003 இல் வெளிவிடப்பட்ட இந்த இயங்குதளம். [5] விண்டோஸ் எக்ஸ்பி உடன் ஒத்திசைவுடன் வசதிகளையும் கொண்டுள்ளது. 5.2 என்கின்ற பதிப்பெண்ணைக்கொண்ட வின்டோஸ் சேவர் 2003 வின்டோஸ் எக்ஸ்பி உடனான ஒத்திசைவினைக் கொண்டுள்ளது. புதிய கணினிகள் தாக்குதல்களில் இருந்தான சந்தர்பக்கங்களைக் குறைத்துக் கொள்வதற்காக வின்டோஸ் 2000 செர்வர் போன்றல்லாது எந்தவொரு செர்வரின் சேவையும் தாமாக ஆரம்பிக்காது. விண்டோஸ் 2003 கூடுதலான ஒத்திசைவுப் பண்புகளைக் கொண்டுள்ளது.

இண்டநெட் இன்பொமேஷன் செர்வர் என்கின்றன இணைய வழங்கியின் மூலநிரலானது மீண்டும் ஏறத்தாழ முழையாகவே பாதுகாப்பு, வினைத்திறன் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு மீள் எழுதப்பட்டுள்ளது.

இவ் இயங்குதளமானது விருத்தியில் இருக்கும் பொழுது பல்வேறு பெயர்களை பெற்றது. ஆரம்பத்தில் 2000 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது இது ”விசிலர் சேர்வர்” என்று அறியப்பட்டது. பின்னர் இது விண்டோஸ் 2002 சேர்வர் என்றவாறு கொஞ்சக் காலத்திற்கு அழைக்கப்பட்டு மைக்ரோசாப்ட் டாட்.நெட் ஐப் பிரபலப்படுத்தும் வர்தக முயற்சிகளுள் ஒன்றாக இதை ’’விண்டோஸ் டாட்.நெட் சேர்வர் 2003 பெயர் மாற்றப்பட்டது. எனினும் இதில் டாட்.நெட் தொடர்பான பயங்கள் குழப்பங்கள் மற்றும் விமர்சனங்கள் காரணமாக மைக்ரோசாப்ட் இதில் இருந்த டாட்.நெட் என்ற பெயரை 2002 ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவந்த இரண்டாம் சோதனை முயற்சியில் கைவிட்டனர். [6]

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகள்[தொகு]

  • இண்டநெட் இன்பமேஷன் சேவிசஸ் என்றழைக்கப்படும் விண்டோஸ் இணைய வழங்கியின் 6 ஆம் பதிப்பானது குறிப்பிடத்த மேம்படுத்தல்களை உள்ளடக்கியுள்ளது.
  • இதன் உடன் உள்ளிணைந்த தீச்சுவர் ஊடாகவும் பொதுவான சேவைகள் இயக்கத்தில் இருக்காது வைத்திருப்பதன் மூலமாகவும் நிறுவும் பொழுதே தானாகவே பாதுகாப்பு நடைமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளும்,
  • வழங்கியை (சேர்வரை) நிர்வாகித்தல் - நிர்வாகக் கருவிகள் ஊடாக எந்தெந்த சேவைகளை செர்வர் வழங்கும் எனத் தீர்மானித்தல்
  • மேம்படுத்தப்பட்ட ஆக்டிவ் டிரைக்ரி
  • மேம்படுத்தப்பட்ட குழுப் பாலிசிகள் ஊடாக கையாளும் மற்றும் நிர்வாகிக்கும் வசதிகள்.
  • மேம்படுத்தப்பட்ட ஸ்கிரிப்டிங், மற்றும் கட்டளைகள். இது விண்டோஸ் சேர்வர் 2008 இல் முழுமையான கட்டளைப் பணிச்சூழலை இற்கான ஓர் பிள்ளையார் சுழி.
  • மேம்படுத்தப்பட்ட வன்வட்டு நிர்வாகம். திறக்கப்பட்ட நிலையில் உள்ள கோப்புக்களைக் கூட பக் அப் எடுக்கும் வசதி.
  • வன்பொருளூடாக கண்காணிப்பு நாய்க் கடிகாரம். இதன் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் சேர்வர் இயங்காவிட்டால் மீள் சேர்வரை ஆரம்பிக்கும் வசதி.


வாங்கி (கிளையண்ட்) இயங்குதளத்திற்கும் வழங்கி (சர்வர்) இயங்குதளத்திற்கும் இடையிலான வேறுபாடுகள்[தொகு]

விண்டோஸ் சர்வர் 2003 ஓர் வாங்கி (கிளையண்ட்) இயங்குதளமாக வடிவமைக்கபடாமையினால் கீழ்வரும் வித்தியாசங்களைக் காணலாம்.

  1. ஒளி ஆர்முடுகல் (Video Acceleration) குறைவானதாகும். இதனால் கூகுள் ஏர்த் போன்ற மென்பொருட்களை விண்டோஸ் 2003 சர்வர் இயங்குதளத்தில் போட்டால் வன்பொருள் ஆர்முடுகல் கிடையாது என்று பிழைச்செய்தி காட்டி ஒப்பன் ஜிஎல் (Open GL) இல் இயங்குவாதா என்று கேட்கும். அப்படியே இயக்கினாலும் மெதுவாகவே இயங்கும். அதே வன்பொருளில் வாங்கி இயங்குதளம் ஒன்றைபோட்டால் வழமைபோல இயங்கும்.
  2. ஒலிச்சேவைகள் (ஆடியோ சர்வீசஸ் - Audio services) செயலிழந்த நிலையிலேயே விண்டோஸ் இயங்குதளம் நிறுவப்படும் எனினும் இதைத் தேவையென்றால் விண்டோஸ்_கூட்டுக்_கட்டுப்பாட்டகம் ஊடாகவோ அன்றி சேவைகள் ஊடாகவோ (Start -> Run -> services.msc) செயற்படும் நிலைக்குக் கொண்டுவரலாம்.
  3. வாங்கி இயங்குதளம் போலன்றி இதில் கணினி விளையாட்டுகள் ஏதும் கிடையாது.

வன்பொருட் தேவைகள்[தொகு]

ஆகக்குறைந்தது[தொகு]

  1. 133 மெகாஹேட்ஸ் அளவிலான மையச்செயலி.
  2. 128 மெகாபைட் அளவிலான தற்காலிக நினைகவகம் (ராம்).
  3. 1.5 ஜிகாபைட் அளவிலான வன்வட்டு இடம்

பரிந்துரைக்கப்படுவது[தொகு]

  1. 550-700 மெகாஹேட்ஸ் அளவிலான மையச்செயலி
  2. 256 மெகாபைட் அளவிலான தற்காலிக நினைவகம் (ராம்) எனினும் 512 மெகாபைட் ஆவது இருந்தால் நல்லது.

குறிப்பு: இண்டெல் பெண்டியம் புறோ, பெண்டியம் II ஆகிய இரண்டு மையச் செயலிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மையச் செயலிகளை ஒரே தாய்பலகையில் (மதர்போட்) பொருத்தும் போது தொடர்பாடலில் உள்ள வழுவின் காரணமாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் சர்வர் 2003 இந்த இரண்டு இரக மையச் செயலிகளையும் ஒன்றுக்கு மேற்பட்ட மையச் செயலிகளாகக் கருதாது, ஒரு மையச் செயலியையே பாவித்துக் கொள்ளும். இது வன்பொருளில் உள்ள வழு என்பதால், வேறு மையச் செயலிகளுக்கு செல்வதையோ அல்லது ஒரு செயலிகாகப் பாவிப்பதையும் தவிர வேறு ஏதும் செய்ய இயலாது.

நிறுவல் வழிமுறைகள்[தொகு]

துப்பரவான நிறுவல்கள்[தொகு]

துப்பரவான நிறுவல்கள் வன்வட்டில் இயங்குதளம் இல்லாநிலையில் நிறுவதையோ அல்லது ஏலவே இருக்கும் இயங்குதளத்தை மேம்படுத்தாது விண்டோஸ் சர்வர் 2003 இயங்குதளத்தை நிறுவதைக் குறிக்கும்.

  • இறுவட்டு ஊடான நிறுவல்கள்.
இறுவட்டு ஊடான நிறுவல்களில் உங்களின் செமிக்கும் வன்பொருளுக்கு உரிய செலுத்தி மென்பொருள் (டிவைஸ் டிரைவர்) விண்டோஸ் இயங்குதளத்துடன் வராவிட்டால் நிறுவலை ஆரம்பிக்கும் பொழுது தட்டச்சுப் பலகையில் F6 விசைபலகையை அழுத்தி செலுத்தி மென்பொருளைச் சேர்த்து நிறுவலைச் செவ்வனே செய்யவியலும். இதற்கு ஓர் தீர்வாக டிரைவர்பக்சு ஊடாக செலுத்தி மென்பொருட்களைச் சேர்பதன் மூலம் நிறுவலாம். சாட்டா வன்வட்டை ACHI நிறுவவது வினைத்திறனானதாக் கருதப்படுகிறது செலுத்தி மென்பொருள் கிடைக்காத பட்சத்தில் ஐடீஈ நிறுவலாம். இந்தவசதி சிலவகை பயோஸ் (BIOS) இல் மாத்திரமே சாட்டா வன்வட்டை (ஹாட்டிஸ்க்) ஐடியி (IDE) ஆகக் காட்ட இயலும்.
  • வன்பொருள் விருத்தியாளர்களுக்கான பதிப்பில் ஒரு கடவுச் சொல்லானது இருக்கும் வன்பொருளுடன் இணைந்து ஒரு வன்பொருட் சொல்லை உருவாக்கும். இது பின்னர் விண்டோசை உயிர்ப்பிக்கும் பொழுது (activation) பயன்படுத்தப்படும். பல் அனுமதி (வால்யூம் லைசென்ஸ்) ஒரே தொடரிலக்கத்தை பலமுறை பயன்படுத்தி நிறுவலை மேற்கொள்ளலாம் ஏனைய வன்பொருள் விருத்தியாளர்களுக்கான பதிப்பில் ஒரு .தொடரிலக்கத்தை ஒரு கணினிக்கு மாத்திரமே பாவித்து உயிர்ப்பூட்டலாம்.
  • டைமனிக் டிஸ்க் இல் நிறுவுவதானால் விண்டோஸ் 2000 ஆரம்பிக்கு (பூட்) அல்லது சிஸ்டம் வால்யூம் இருந்து மேம்படுத்தப்ட்டால் மாத்திரமே நிறுவலை மேற்கொள்ளலாம். அவ்வாறு இல்லாவிட்டால் விண்டோஸ் சர்வர் 2003 இவ்வகையான மென்பொருளூடாக மாற்றம் செய்யப்பட்ட வன்வட்டை ஆதரிக்காது. ஏனென்றால் இதிற்தான் பிரதான ஆரம்பிக்கும் கோப்பு (மாஸ்டர் பூட் றெக்கோட் - Master Boot Record) உள்ளது அதில் பகுதிகளாகப் பிரிக்கபட்ட வன்வட்டின் விபரங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

மேம்படுத்தல் நிறுவல்கள்[தொகு]

  • ஆகக்குறைந்தது விண்டோஸ் எண்டி சர்வர் 4 உடன் சேவைப் பொதி 5 ஆவது இருத்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக இருக்கும் இயங்குதளம் விண்டோஸ் எண்டி சர்வர் 3.5 என்றால் அதை முதலில் எண்டி சர்வர் 4 இற்கு மெம்படுத்தி விட்டுப் பின்னர் விண்டோஸ் சர்வர் 2003 இற்கு மேம்படுத்தலாம். அவ்வாறு இல்லாவிட்டால் ஏற்கனவே இருக்கும் தரவுகளைச் சேமித்துவிட்டு துப்பரவான நிறுவலை மேற்கொள்ளலாம்.
  • விண்டோஸ் சர்வர் 2000 இல் இருந்து மேம்படுத்துவதானால் அதற்கு நிகரான பதிப்பையோ அல்லது அதனிலும் மேம்பட்ட பதிப்பையோ மாத்திரம் பயன்படுத்தியே விண்டோஸ் சர்வர் 2003 ஐ மேம்படுத்த இயலும். எடுத்துக்காட்டாக விண்டோஸ் எண்டி சர்வர் 4 எண்டபிறைஸ் பதிப்பைப் பாவித்தால் அதை விண்டோஸ் சர்வர் 2003 எண்டபிறைஸ் பதிப்பாகவே மேம்படுத்தலாம், அதை ஸ்ராண்டட் பதிப்பாக மேம்படுத்த இயலாது. இதற்குக் காரணம் என்றவென்றால் எண்டபிறைஸ் பதிப்பில் உள்ள பல்வேறுபட்ட வசதிகளைச் செயலிக்கச் செய்யவேண்டும் என்பதே. சாரம்சமாக
    • எண்டபிறைஸ் பதிப்பில் இருந்து எண்டபிறைஸ் பதிப்புக்கும்
    • பேசிக்/ஸ்டாண்டட் பதிப்பில் இருந்து ஸ்டாண்டட் பதிப்புக்கும் மேம்படுத்திக் கொள்ளலாம்.
  • ஆக்டிவ் டிரைக்டி விண்டோஸ் சர்வர் 2000 உடனேயே அறிமுகம் செய்யப்பட்டது. விண்டோஸ் எண்டி சர்வரில் பயனர் கணக்குகள் டொமைன்களுக்கான பயனர் மேலாளரிலேயே (யூசர் மனேஜர் பொ டொமைன்ஸ் - user manager for domain) செமிக்கப்படுகின்றது. இவ்விரண்டிலும் உள்ள மாறுபாடுகள் காரணமாக விண்டோஸ் எண்டி சேர்வரில் ஒரு நகலை உருவாக்கி நன்கு சோத்தித்து, சோதனை மேம்படுத்தல் சரிவர நடைபெற்றதன் பின்னரே உண்மையான மேம்படுத்லை மேற்கொள்ளவது நல்லது.
  • போதுமான அளவு வன்வட்டில் இடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • விண்டோஸ் எண்டி டொமைன் கண்டோலரில் விண்டோஸ் எண்டி கோப்புமுறையானது இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை, எனினும் விண்டோஸ் சர்வர் 2000, விண்டோஸ் 2003 சர்வர் இயங்குதளங்கள் விண்டோஸ் எண்டி கோப்புமுறையை மாத்திரமே ஆதரிக்கும் என்பதால் விண்டோஸ் எண்டி டொமைன் கண்டோலரை மேம்படுத்த முன்னர் எண்டி கோப்புமுறையில் கோப்புக்கள் சேமிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திப் படுத்திய பின்னரே விண்டோஸ் 2003 சர்வருக்கு மேம்படுத்தலாம்.
  • டொமைனை நகல் எடுக்கும் வழங்கியான பக் அப் டொமைன் கண்டோரலை வலையமைப்பில் இருந்து வேறாக்கி அணைத்து விடவும். இது மேம்படுத்தல் பிழைத்தால் மீண்டும் விண்டோஸ் எண்டி சர்வருக்குப் பழைய நிலையில் செல்வதற்கு உதவும். டொமைனை நகல் எடுக்கும் வழங்கி இல்லாவிட்டால் பாவிக்காது இருக்கும் ஓர் கணினியில் விண்டோஸ் எண்டி சர்வரை நிறுவி டொமைனை நகல் எடுக்கு வழங்கியாக மாற்றிவிடவும். விண்டோஸ் டொமனைக் கண்டோலர் சரிவர மேம்படுத்தப் பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திய பின்னரே நகல் எடுக்கும் வழங்கியை விண்டோஸ் 2003 சர்வருக்கு மேம்படுத்தவும்.

விண்டோஸ் எண்டி மேம்படுத்தற் பிரச்சினைகள்[தொகு]

  • விண்டோஸ் எண்டி சர்வரில் உள்ள மிரர் (Mirror), ஸ்ரைப் (Stripe) கோப்புமுறைகள் பிரச்சினையை உண்டு பண்ணும். இவற்றுடன் சேர்த்து இயங்குதளத்தை விண்டோஸ் சர்வர் 2003 இற்கு மேம்படுத்தினால் இவற்றைத் தானாகவே கணினியில் காட்டது. மைக்ரோசாப்டின் ஆலோசனை என்னவென்றால் முதலில் மிரரைப் பிரித்து விட்டு, ஒன்றைக் கணினியில் நிறுவி பின்னர் விண்டோஸ் 2003 சர்வர் ஊடாக மீண்டும் மிரரை உருவாக்கவும். இருக்கும் ஸ்ரைப் ஆனது அந்தஸ்துடன் (Parity) இருந்தால் இதிலுள்ள கோப்புக்களைப் பிரதியெடுத்து விட்டுப் ஸ்ரைப்பை அழித்து விட்டு மீண்டும் விண்டோஸ் 2003 சர்வர் ஊடாக ஸ்ரைப்பை உருவாக்கிவிடவும். ஏனென்றால் விண்டோஸ் 2003 சர்வர் அந்தஸ்துடனான (Parity) ஸ்ரைப்பை முறையை ஆதரிக்காது. விண்டோஸ் 2003 சர்வர் இதன் முந்தைய முறையை ஒத்த றெயிட்-5 (RAID-5) முறையையே ஆதரிக்கும். இவற்றைத் தற்செயலாக மறந்து மேமபடுத்தலைச் செய்தால் விண்டோஸ் 2003 சர்வர் இலுள்ள FTOnline என்ற ஓர் உபயோகம் (Utility) ஊடாகக் கோப்புக்களை வாசிக்கக்கூடிய நிலைக்குக் கொண்டுவரும் (கோப்புக்களை எழுத இயலாது). பின்னர் கோப்புக்களை நகல் எடுத்துவிட்டு வேண்டிய மாற்றங்களைச் செய்யலாம்.

விண்டோஸ் எண்டி மேம்படுத்தும் ஒழுங்கு[தொகு]

  • முதலில் பிரதானமாக டொமைனைக் கட்டுப்படுத்தும் பிறைமறி டொமைன் கண்டோலரை (Primary Domain Controller - PDC) மேம்படுத்தவேண்டும். இவ்வாறு செய்வதால் விண்டோஸ் 2003 சர்வரில் உள்ள ஆக்டிவ் டிரைக்றியை உருவாக்க இயலும் அத்துடன் பிறைமறி டொமைன் கண்டோலர் (PDC) emulator ஐயும் அறிமுகப்படுத்தி விடும். இவ்வாறு மேம்படுத்தினால் வலையமைப்பில் உள்ள கணினிகள் உடனே விண்டோஸ் 2003 சர்வருடன் கணக்குகளை அங்கீகரிக்க முன்வரும் இது சிறிய வலையமைப்பில் பெரிய ஒரு விடயம் இல்லாவிட்டாலும் கூட பெரிய வலையமைப்பில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும். இதை இயன்றவரை குறைப்பதற்காக மைக்ரோசப்ட் சில ரெஜிட்றியில் மாறுதல்களை ஏற்படுத்தி விண்டோஸ் சர்வர் 2003 வாங்கிகளுக்கு விண்டோஸ் எண்டி 4 மாதிரித் தெரியும் வண்ணம் மாற்றங்களை உண்டுபண்ணக் கூடிய கோப்பினை விண்டோஸ் சர்வர் 2003இற்காக நிறுவல் கோப்புகளுடன் (Windows Deployment Kit for windows server 2003) சேர்த்துள்ளதெனினும் பயனர் விரும்பினால் மாத்திரம் நிறுவலை மேற்கொள்ளலாம், தானாக இக்கோப்பினைக் கணினி நிறுவிக்கொள்ளாது.
  • தானியங்கி அணுக்க வழங்கியான றிமோட் அக்சஸ் சர்வரை நகல் எடுக்கப் பயன்பட்ட பக் அப் டொமைன் கண்டோலரை மேம்படுத்த முன்னர் பயன்படுத்தவும். இதனால் இயங்குதளப் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், ஆக்டிவ் டிரைக்றியின் ஓர் அங்கமாகவும், விண்டோஸ் எண்டி லான் மனேஜரூடான அனுமதிகளையும் வழங்காது.
  • கடைசியாக டொமைனை நகல் எடுக்கும் பக் அப் டொமைன் கண்டோலரை மேம்படுத்தவும்.

நிருவாகப் பொதி[தொகு]

விண்டோஸ் சர்வர் 2003 உடன் இணைந்த நிருவாகப் பொதியை விண்டோஸ் சர்வர் 2003 இயங்குதளத்தில் Start -> Run -> adminpak.msi (கவனிக்க adminpack.msi என்றவாறு தட்டச்சுசெய்யவேண்டும் adminpack.msi என்றவாறு அல்ல) எனத் தட்டச்சுச் செய்வதன் மூலம் நிறுவிக் கொள்ளலாம். இப்பொதியை விண்டோஸ் எக்ஸ்பி கணினியில் நிறுவதானால் விண்டோஸ் சர்வர் 2003 இறுவட்டில் உள்ள i386 கோப்புறையில் உள்ள adminpak.msi சொடுக்குவதன் மூலம் நிறுவிக் கொள்ளலாம். நிறுவியதன் பின்னர் Start -> All Programs -> Administrative tools மூலம் நிருவாகிப்பதற்குரிய வேண்டிய மென்பொருட் கருவிகளைப் பாவிக்கலாம்.

பதிப்புக்கள்[தொகு]

விண்டோஸ் 2003 பல்வேறுபட்ட பதிப்புக்களில் வெளிவந்துள்ளது. இது பல்வேறு பட்ட வணிகப் பயனர்களை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஓர் குறுகிய மேலோட்டத்திற்கு மைக்ரோசாப்ட் விண்டோஸ் செர்வர் 2003 பதிப்பு ஓப்பீடு ஐப் பார்க்கவும். பொதுவாக விண்டோஸ் சேர்வர் எல்லாப் பதிப்புக்களுமே கோப்புக்கள், அச்சியந்திரங்களைப் பகிரும் வசதியுடன் பிரயோகங்களுக்கான வழங்கியாகவும் செயற்படும்.

ஸ்மோல் பிஸ்னஸ் எடிசன்[தொகு]

ஸ்மோல் பிஸ்னஸ் எடிசன் சிறிய வணிக அமைப்புக்களைக் குறிவைத்து பூரண தீர்வொன்றை வழங்கும் வண்ணம் உருவாக்கப்பட்டதாகும். இங்கு தொழில் நுட்பங்களானது ஒருங்கிணைக்கபப்ட்டு தீர்வுகளாக றிமோட் டெஸ்க்டாப் வேக்பிளேல் போன்ற தீர்வுகள் வழங்கப்பட்டது.

ஸ்மோல் பிஸ்னஸ் ஸ்ராண்டட் கூட்டு முயற்சி மென்பொருளான எடிசன் ஷெயார் பாயிண்ட் சேர்வர், மின்னஞ்சலுக்காக மைக்ரோசாப்ட் எக்ஸ்சேஞ் செர்வரையும், தொலைநகல் (பாக்ஸ்) செர்வர் மற்றும் பயனர்களைத் திறப்பட நிர்வாகிப்பதற்காக ஆக்டிவ் டிரைக்டிரியையும் உள்ளடக்கியுள்ளது. இம்மென்பொருளானது அடிப்படையான தீச்சுவர் (பயர்வால்), டீஎச்சீபி என்கின்ற கணினிகளுக்கு ஐபி முகவரிகளை வழங்கும் சேவை, மற்றும் நாட் என்கின்ற ஐபி முகவரிகளை மாற்றீடு செய்யும் முறையிலான ரவுட்டிங்கை 2 நெட்வெர்க் காட் அல்லது 1 நெட்வேர்க் காட் மற்றும் ஒரு வன்பொருள் ரவுட்டர் ஊடாக ஆதரிகின்றது.

ஸ்மோல் பிஸ்னஸ் பிரிமியம் பதிப்பானது மேலுள்ள வசதிகளுடன் மைக்ரோசாப்ட் சீக்குவல் சேர்வர் 2000 மற்றும் மைக்ரோசாப்ட் இண்டநெட் செக்கியூரிட்டி அண்ட் அக்சல்ரேஷன் சேர்வர் 2004 ஐயும் உள்ளடக்கியுள்ளது.

வெப் எடிசன்[தொகு]

விண்டோஸ் சேர்வர் 20003 வெப் எடிசனானது இணையம் சார் பிரயோகங்கள், இணையப் பக்கங்கள், எக்ஸ் எம் எல் ஊடான இணைய சேவைகளை உருவாக்குவதற்கென உருவாக்கப் பட்டதாகும். இது பிரதானமாக இண்டநெட் இன்பமேஷன் செர்வர் 6 ஊடான ஓர் இணைய வழங்கியாகத் ஓர் விரைவாகப் பிரயோகங்களை .நெட் இன் முக்கியமாகன பாகமான ஏஎஸ்பி.நெட் ஊடாகப் பிரயோகங்களை விருத்தி செய்வதற்கென உருவாக்கப்பட்டதாகும். இந்தப் பதிப்பில் வாங்கி (கிளையண்ட்) அணுக்க அனுமதி உள்ளடக்கப்படவில்லை அத்துடன் இதில் டேமினல் செர்வர் உள்ளடக்கப்படவில்லை. எனினும் றிமோட் அட்மினிஸ்ட்ரேஷன் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஓரே நேரத்தில் அதிகபட்சமாகப் 10 பயனர்களே ஒரு பகிரப்பட்ட கோப்புறையை (போல்டர்) அணுகமுடியும். இதில் மைக்ரோசாப்ட் சீக்குவல் செர்வரையோ அல்லது எக்ஸ்சேஞ் சேர்வரையோ இதில் நிறுவ இயலாது. எனினும் இதில் சேவைப் பொதி 1 ஐப் பிரயோகித்த பின்னர் மைக்ரோசாப்ட் டேட்ட பேஸ் என்ஜின் சீக்குவல் செர்வர் 2005 எக்ஸ்பிரஸ் எடிசன் ஆகிய பதிப்புக்களை ஆதரவளிக்கின்றது. டாட்.நெட் பிரேம் வேர்க் 2.0 விண்டோஸ் சேர்வர் 2003 உடன் உள்ளிணைக்கப்படாவிட்டாலும் விண்டோஸ் மேம்படுத்தலுடாகத் தனியே நிறுவிக் கொள்ளலாம்.

விண்டோஸ் 2003 வெப் எடிசன் ஆகக்கூடுதலாக 2 செயலிகளை (புரோசசர்) களை ஆதரிக்கின்றது. இது ஆகக்கூடுதலாக 2 ஜிகாபைட் அளவிலான ராம் என்கின்ற தற்காலிக நினைவகத்தை ஆதரிக்கின்றது. வெப் எடிசன் டொமைன் கண்டோரலாகச் செயற்படவியலாது. [7]மேலும் இதுவே விண்டோஸ் சேர்வர் கிளையண்ட்டின் அணுக்க மட்டுப்பாடு இல்லாத பதிப்பாகும்.

ஸ்ராண்டட் எடிசன்[தொகு]

விண்டோஸ் சேர்வர் 2003 ஸ்ராண்டட் எடிசன் சிறிய வணிக அமைப்புக்களில் இருந்து நடுத்தர வணிக அமைப்புக்களை குறிவைத்து உருவாக்கப்பட்டதாகும். ஸ்ராண்டட் எடிசன் கோப்புக்கள் மற்றும் அச்சியந்திரங்களைப் பகிர முடிவதோடு பாதுகாப்பான முறையில் இணையத்தை அணுகவும் உதவி செய்கின்றது. பிரயோகங்களை உருவாக்குவதிலும் உதவி செய்கின்றது. இந்தப் பதிப்பானது 4 மையச் செயலிகளை ஆதரிப்பதுடன் 4 ஜிகாபைட் அளவிலான தற்காலிக நினைவகம் (ராம்) ஐயும் ஆதரிக்கின்றது. இது 64 பிட் பதிப்பாகவும் வெளிவந்துள்ளது. ஸ்ராண்டட் எடிசன் 32 ஜிகாபைட் தற்காலிக நினைவகத்தை (ராம்) ஐக் கையாளும் வசதி படைத்தது. விண்டோஸ் சேர்வர் 2003 ஆனது மாணவர்களுக்கான இலவசப்பதிப்பாகவும் மைக்ரோசாப்ட்டின் டீரிம்பார்க் திட்டம் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.

எண்டபிரைஸ் எடிசன்[தொகு]

விண்டோஸ் 2003 எண்டபிரைஸ் எடிசன் மத்திய மற்றும் பெரிய வணிக நிறுவனங்களை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டதாகும். இது 8 மையச் செயலிகளை ஆதரிக்கின்றது. இதன் 32 பிட் பதிப்பானது 32 ஜிகாபைட் அளவிலான தற்காலிக நினைவகத்தை ஆதரிக்கின்றது. இதன் 64 பிட் பதிப்பானது 1 டெராபைட் அளவிலான தற்காலிக நினைவகத்தைக் கையாளக் கூடியது.

டேட்டா செண்டர் எடிசன்[தொகு]

விண்டோஸ் சேர்வர் டேட்டா செண்டர் எடிசனானது கூடுதல் பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மையைக் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இது 32பிட், இட்டானியம் புரோசர்கள், 64 பிட் புரோசர்களை ஆதரிக்கும். இதன் 32 பிட் பதிப்பானது ஆக்கக்கூடுதலாக 32 செயலிகளையும் 64 பிட் பதிப்பானது ஆகக் கூடுதலாக 64 புரோசர்களையும் ஆதரவளிக்கும். 32பிட் கட்டுமானமானது ஆகக்கூடுதலாக 64 ஜிகாபைட் அளவிலான நினைவகத்தை ஆதரவளிக்கின்றது. 64பிட் பதிப்பானது ஆகக்கூடுதலாக 2 டெராபைட் அளவிலான தற்காலிக நினைவகத்தை ஆதரவளிக்கின்றது. [8]விண்டோஸ் 2003 டேட்டா செண்டர் எடிசனானது ஒரு பிரயோகத்திற்கான புரோசசரையும் நினைவகத்தையும் மட்டுப்படுத்த வல்லது.

பதிப்புக்களின் ஒப்பீடு[தொகு]

விண்டோஸ் சர்வர் 2003 பதிப்புக்களும் வசதிகளும்
வன்பொருள் வெப் ஸ்ராண்டட் எண்டபிறைஸ் டேட்டா செண்டர்
ஆகக்கூடிய ஆதரவளிக்கும் மையச்செயலி 2 4 8 32/64(64 பிட்)
ஆகக்கூடிய தற்காலிக நினைவகம் ஜிகாபைட்டில் (RAM) 2 4 32/64 (64பிட்) 64/512(64பிட்)
டொமைன் கண்டோலர் இல்லை ஆம் ஆம் ஆம்
கிளஸ்டர் ஆதரவு இல்லை இல்லை 8 இணைப்பு(8 node) 8 இணைப்பு (8 node)
64பிட் ஆதரவு இல்லை ஆம் ஆம் ஆம்
இயங்கு நிலையில் நினைவகத்தைச் சேர்த்தல். அதாவது, வன்பொருள் ஆதரவளிக்கும் கணினிகளில் கணினியை மீள்துவக்கம் செய்யாமல் கணினியின் இயங்குநிலையில் தற்காலிக நினைவகத்தைச் சேர்த்தல். குறிப்பு:வன்பொருள் ஆதரவு இல்லாத கணினிகளில் இச்செயற்பாட்டைச் செய்வது கணினியின் பாகங்களுக்குப் பழுதை உண்டு பண்ணலாம். [9] இல்லை இல்லை ஆம் ஆம்

குறிப்பு: 64பிட் பதிப்பானது இண்டெல் ஐட்டானியம் செயலிகளுக்குத் தனியாகவும் ஏனைய ஏஎம்டி இண்டெல் செயலிகளுக்கான பதிப்பாக 64பிட் பதிப்பென இருவேறு பதிப்புக்களை வெளியிட்டுள்ளது. [10]

உசாத்துணைகள்[தொகு]

  1. http://blogs.technet.com/windowsserver/archive/2007/03/13/sp2-goes-live.aspx
  2. Microsoft (2008-03-08). "Windows server 2003 Lifecycle Policy". Microsoft. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. மைக்ரோசாப்ட் (2011-02-13). "மைக்ரொசப்ட் 64பிட் கணிமை". மைக்ரோசாப்ட். {{cite web}}: Check date values in: |date= (help) (ஆங்கில மொழியில்)
  4. மைக்ரோசாப்ட் (2007-02-19). "வின்டோஸ் சேவர் 2003: மென்பொருள் மேலோட்டம்". மைக்ரோசாப்ட். {{cite web}}: Check date values in: |date= (help) (ஆங்கில மொழியில்)
  5. மைக்ரோசாப்ட் (2003-04-24). "விண்டோஸ் 2003 உலகளாவிய ரீதியில் இன்றுமுதற் கிடைக்கும்". மைக்ரோசாப்ட். பார்க்கப்பட்ட நாள் 2006-11-13. {{cite web}}: Check date values in: |date= (help)
  6. விண்டோஸ் சர்வரின் அடையாளப் பிரச்சினைகள்
  7. "Compare the Editions of Windows Server 2003". Microsoft. பார்க்கப்பட்ட நாள் 2006-09-02.
  8. மைக்ரோசாப்ட் (2011-02-13). "விண்டோஸ் பதிப்புக்களின் நினைவக எல்லை". மைக்ரோசாப்ட். {{cite web}}: Check date values in: |date= (help) (ஆங்கில மொழியில்)
  9. மைக்ரோசாப்ட் (2011-02-13). "விண்டோஸ் சர்வர் 2003 பதிப்புகளின் ஒப்பீடு". மைக்ரோசாப்ட். {{cite web}}: Check date values in: |date= (help) (ஆங்கில மொழியில்)
  10. மைக்ரோசாப்ட் (2011-02-13). "மைக்ரொசப்ட் 64பிட் கணிமை". மைக்ரோசாப்ட். {{cite web}}: Check date values in: |date= (help) (ஆங்கில மொழியில்)
மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்டோஸ்_செர்வர்_2003&oldid=3291760" இலிருந்து மீள்விக்கப்பட்டது