உள்ளடக்கத்துக்குச் செல்

வின்செஞ்சோ காம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வின்செஞ்சோ (Vincenzo) அல்லது வின்செஞ்சியோ காம்பா (Vincenzio Gamba) (1606-1649), பின்னர் வின்செஞ்சோ கலிலீ (Vincenzo Galilei) (1619) எனப்பட்டவர் கலிலியோ கலிலீயின்1564-1642) சட்டப்புறம்பான மகனாவார். இவரது தாயார் மரீனா காம்பா (1570-1612) ஆவார். வின்செஞ்சோ கலிலியோவால் 1619 இல் சாட்டப்படி ஏற்கச் செய்யப்பட்டார். இவர் தன் தாத்தாவான விவ்செஞ்சோ கலிலீயைப் போலவே யாழிசைப்பத்தில் வல்லுனர் ஆனார்.

வாழ்க்கை

[தொகு]

வின்செஞ்சோ தன் உடன்பிறந்த வர்ஜீனியா(1600-1634), இலிவியா(1601-1659) எனும் இரு தங்கைகளைப் போலவே பாடுவா நகரில் பிறந்தார். வர்ஜீனியா பின் மரியா செலெசுதே எனும் கன்னித் துறவியானார். அதேபோல இலிவியாவும் ஆர்க்கேஞ்சலா எனும் கன்னித் துறவியானார்.

இவருக்குத் தாத்தாவின் பெயரான வின்செஞ்சோ கலிலீ பெயரிடப்பட்டது.1612 இல் இவரின் தாயார் இறந்த்தும் 1619 இல் இவர் சட்டப்படி தசுக்கினி பேரரசரால் ஏற்கப்பட்டார். எனவே வாழ்க்கை வரலாற்றில் இவர் பெயரும் இவரது தாத்தாவின் பெயரும் அடிக்கடி குழப்பிக் கொள்ளப்பட்டது.

இவர் கவிதையிலும் இசையிலும் இயக்கவியலிலும் வல்லவர் ஆனார். இவரது தந்தை இவரைப் பிசா நகரில் பெனெடெட்டோ காசுதெல்லியிடம் (1577/1578-1643) சட்டம் படிக்க விரும்பினார்.

இவர் 1629 இல் செசுடிலியாபோச்சினியேரி (1629-1669) என்பவரை மணந்தார். பணத்துக்காக தன் திருமணத்துக்குப் பிறகு, தந்தையாருடன் சண்டையிட்டார். என்றாலும் இவர்களது உறவு பின்னால் மேம்படலானது. கலீலியோவின் கடினமான பிந்தைய வாழ்க்கையில் வின்செஞ்சோ அன்புடன் உதவியுள்ளார்.

வின்செஞ்சோ விவியானி (1622-1703) வின்செஞ்சோ கலிலீயின் இசைக்கருவிகளைப் புதிதுபுதிதாக உருவாக்கும் திறமையைக் குறிப்பிடுகிறார். குறிப்பாக, "இவர் ஒரு யாழை செய்து மிகத் திறமையோடு அதை மீட்டி அதன் நாண்களில் இருந்து குழலிசைபோன்ற வியப்பான தொடர்ச்சியான மெல்லொலிகளைத் தருவித்துள்ளார்...".[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://brunelleschi.imss.fi.it/itineraries/biography/VincenzoGalileiJunior.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்செஞ்சோ_காம்பா&oldid=2259993" இலிருந்து மீள்விக்கப்பட்டது