வின்சுலோ நினைவுப் பூங்கா

ஆள்கூறுகள்: 43°48′11″N 70°06′49″W / 43.8029618°N 70.1137239°W / 43.8029618; -70.1137239
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வின்சுலோ நினைவுப் பூங்கா
Winslow Memorial Park
வின்சுலோ பூங்கா
Sunset (36565400344).jpg
பூங்காவிலிருந்து சூரியன் மறைவு, அதன் நுழைவாயிலில் இருந்து மேற்கு நோக்கி
வகைகடற்கரைப் பூங்கா மற்றும் முகாம் மைதானம்
அமைவிடம்பிரிபோர்ட்டு, மேய்ன், அமெரிக்கா.
ஆள்கூறு43°48′11″N 70°06′49″W / 43.8029618°N 70.1137239°W / 43.8029618; -70.1137239
பரப்பு90 ஏக்கர்கள் (0.36 km2; 0.14 sq mi)
உருவாக்கப்பட்டது1953 (70 ஆண்டுகளுக்கு முன்னர்) (1953)
Owned byபிரிபோர்ட்டு நகரம்
Camp sitesகிட்டத்தட்ட 100

வின்சுலோ நினைவுப் பூங்கா (Winslow Memorial Park) அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்திலுள்ள பிரீபோர்ட்டு நகரத்தில் அமைந்துள்ள ஒரு கடலோரப் பூங்கா மற்றும் முகாம் மைதானமாகும். வின்சுலோ பூங்கா என்றும் இது அழைக்கப்படுகிறது.[1] 90 ஏக்கரில் (0.14 சதுர மைல்) பரப்பளவில் அர்ராசீகெட்டு ஆற்றின் தெற்கு முனைக்கு அருகில் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் முகப்புக்கு அருகில், இசுடேடேபிள்சு பாயின்ட் சாலையின் கிழக்கு முனையில் காசுகோ விரிகுடா அமைந்துள்ளது. பூங்காவின் வடக்குப் பகுதி இசுடேடேபிள்சு கோவ் மீது தெரிகிறது.

பிரீபோர்ட்டு நகரத்திற்குச் சொந்தமான இந்த பூங்கா ஆண்டுதோறும் மே மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே ஒரு பிரபலமான முகாம் மைதானமாகும்.[2] வின்சுலோ பூங்கா பாதையின் இருபுறமும் சுமார் நூறு மனைகள் அமைக்கப்பட்டுள்ளன.[3] பூங்கா அமைந்துள்ள இசுடாக்பிரிட்ச்சு பாயிண்ட் என அழைக்கப்படும் தீபகற்பத்தின் வடகிழக்கு முனைக்கு இது செல்கிறது.[4] பூங்காவின் மேற்கு முனையில், வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில் குழந்தைகள் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.

இப்பூங்கா 2019 ஆம் ஆண்டில் $346,000 மற்றும் 2020 ஆம் ஆண்டில் $255,000 வருவாயை ஈட்டியது. கோவிட்-19 தொற்றுநோயின் முதல் முழு ஆண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.[2]

வரலாறு[தொகு]

இந்த பூங்கா தெலியா பி. பவர்சு வின்சுலோவின் பெயரால் அழைக்கப்படுகிறது. 1953 ஆம் ஆண்டில் இவரது மகள் அடிலெய்ட் வின்சுலோ ஆர்பு என்பவரால் நகரத்திற்கு பரிசாக வழங்கப்பட்டது.[4] ஆர்பு குடிசை எனப்படும் ஒரு வாடகை விடுதி வின்சுலோ பூங்கா வழியின் கிழக்கு முனையில் அமைந்துள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Winslow Park and Campground - Campground will be open from May 26th through October 1st. THERE ARE NO HOOKUPS ON ANY SITES. | Freeport ME". www.freeportmaine.com. 2022-07-30 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 Forecaster, Brielle HardyThe (2021-02-05). "Winslow Park breaks even in 2020, moves ahead with handicapped-accessible ramp". Press Herald. 2022-07-30 அன்று பார்க்கப்பட்டது.
  3. Forecaster, Jason PafundiSpecial to The (2019-11-27). "Winslow Park campers may lose the lottery". Press Herald. 2022-07-30 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 "What is the History of the park? | Freeport ME". www.freeportmaine.com. 2022-07-30 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Harb Cottage | Freeport ME". www.freeportmaine.com. 2022-07-30 அன்று பார்க்கப்பட்டது.