உள்ளடக்கத்துக்குச் செல்

வின்சர் மெக்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வின்சர் மெக்கே
பிறப்புவின்சர் செனிக் மெக்கே
(1869-09-26)செப்டம்பர் 26, 1869 [1]
மிச்சிகன்[1]
இறப்புசூலை 26, 1934(1934-07-26) (அகவை 64)[1]
நியூயார்க்[1]
பணிவரைகதை மற்றும் இயங்குபடம் உருவாக்குபவர்
பெற்றோர்இராபர்ட் மெக்கே மற்றும் முர்ரே மெக்கே
பிள்ளைகள்பாப் மெக்கே

வின்சர் செனிக் மெக்கே (Winsor McCay, செப்டம்பர் 26, 1869 – சூலை 26, 1934) அமெரிக்க வரைகதை மற்றும் இயங்குபடம் உருவாக்குபவர், இவருடைய லிட்டில் நெமோ (1905) மற்றும் அதன்பிறகு வந்த செர்ட்டீ தி டைனாசர் (1914) பாத்திரத்திற்காக மிகவும் பிரபலமானவர். இவர் தன்னுடைய புனைப்பெயரான சைலாஸ் என்ற பெயரில் ட்ரீம் ஆப் தி ரேர்மிட் பியண்ட் வரைகதையை உருவாக்கியுள்ளார்.

இளமைக் காலம்

[தொகு]
லிட்டில் ஸேம்மி ஸ்னீஸ்

வின்சர் செனிக் மெக்கே மிச்சிகனில் உள்ள ஸ்பிரிங்க் லேக் என்னும் பகுதியில் 1869-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் திகதி இராபர்ட் மெக்கேவுக்கும் ஜேனட் முர்ரே மெக்கேவிற்கும் மகனாகப் பிறந்தார். [1] இவர் கனடாவில் 1867-ம் ஆண்டு பிறந்ததாகவும் கூறப்படுகிறது.

வாழ்க்கை

[தொகு]

1889-ம் ஆண்டு , மெக்கே சிகாகோவிற்கு படிப்பதற்காகச் சென்றார், போதிய அளவு பண்மில்லாததால் வேலை செய்ய நேர்ந்தது. இவர் தேசிய அச்சிடுதல் மற்றும் சித்திரம் செதுக்கும் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார், அங்கு வட்டரங்கு மற்றும் திரைப்படத்திற்கான சுவரொட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஓஹியோ மாகாணத்திற்கு ஓவியராக பணிபுரிய டைம் மியூசியம் சென்றனர். இவருடைய தி செவன் ஏஜஸ் ஆப் மேன் கதையில் வரைந்த இரு படங்கள் அவரை பிரபலப் படுத்தியது.[2] அதன் பிறகு அவர் வரைந்த பல ஓவியங்களும், வரைகதைகளும் மிகவும் பிரபலமானது.

கெரிட்டீ தி டைனாசர்

இவருடைய வரைகதைளுள், தி சிங்கிக் ஆப் லுசிதானியா, கப்பல் மீது ஏற்பட்ட தாக்குதலையும், முதலாம் உலகப்போருக்கு அமெரிக்கா பங்குபெற்றதிற்கு காரணமாக அமைந்தது.

இறப்பு

[தொகு]

மெக்கே 1934-ம் ஆண்டு சூலைத் திங்கள் 26-ம் நாள் காலமாணார்.[3]

வரை கதைகள்

[தொகு]
  • பெலிக்ஸ் பிட்டல் எழுதிய எ டேல் ஆப் தி ஜங்கிள் இம்ப்ஸ் (1903)
  • லிட்டில் ஸேம்மி ஸ்னீஸ் (1904–1906)
  • ட்ரீம் ஆப் தி ரேர்பிட் பியீண்ட் (1904–13)
  • தி ஸ்டோரி ஆப் ஹங்க்ரி ஹென்ரியட்டா (1905)[4]
  • எ பில்கிரிம்'ஸ் ப்ரோகிரஸ் (1905 to 1910)
  • லிட்டில் நெமோ (1905–1914, 1924–1927) (1911–1914 இன் தி லேண்ட் ஆப் வொன்டர்புல் ட்ரீம்ஸ் என்ற பெயரிலும்)
  • பூர் ஜேக் (1909–1911)

திரைப்படம்

[தொகு]
வின்சர் மெக்கே 1908-ம் ஆண்டு
  • லிட்டில் நெமோ (1911)
  • ஹவ் எ மஸ்கிட்டோ ஆப்ரேட்ஸ் (1912) (தி ஸ்டோரி ஆப் எ மஸ்கிட்டோ என்ற தலைப்பிலும்)
  • கெரிட்டீ தி டைனோசர் (1914)
  • தி ஸ்கின்னிங் ஆப் தி லூசித்தானியா (1918)
  • ட்ரீம்ஸ் ஆப் தி ரேர்பிட் பியண்ட்: பக் வாடுவில்லீ (1921)
  • ட்ரீம்ஸ் ஆப் தி ரேர்பிட் பியண்ட்: தி பெட் (1921)
  • ட்ரீம்ஸ் ஆப் தி ரேர்பிட் பியண்ட்: தி ப்ளையிங்க் ஹவுஸ் (1921)
  • தி சென்டார்ஸ் (1921)
  • கெரிட்டீ ஆன் டூர் (1921)
  • பிலிப்'ஸ் சர்க்கஸ் (1921)
  • தி பார்ன்யார்ட் பெர்பார்மன்ஸ் (1922–27?) (பெர்பார்மிங்க் அனிமல்ஸ் மற்றும் எ மிட்சம்மர்'ஸ் நைட்மேர் என்ற தலைப்புகளிலும்)

புத்தகங்களும் பிற தொகுப்புகளும்

[தொகு]
முதலாம் உலகப்போர் குறித்த மெக்கேயின் படம்

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]

மூலம்

[தொகு]

மேலும் அறிய

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்சர்_மெக்கே&oldid=4071824" இலிருந்து மீள்விக்கப்பட்டது