உள்ளடக்கத்துக்குச் செல்

வினோத் கினரிவாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வினோத் கினரிவாலா (Vinod Kinariwala) இந்தியாவின் அகமதாபாத்தைச் சேர்ந்த ஓர் இந்திய சுதந்திர ஆர்வலர் ஆவார்.

சுயசரிதை

[தொகு]

வினோத் கினரிவாலா 1924 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று சம்னாதாசு கினரிவாலாவுக்கு மகனாகப் பிறந்தார். இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள குசராத்து கல்லூரியில் இடைநிலை மாணவராக இருந்தார். [1] 1942 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 9 ஆம் தேதியன்று மகாத்மா காந்தி தலைமையில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டது. மறுநாள் சட்டக் கல்லூரி மாணவர்களால் ஒரு பேரணி நடத்தப்பட்டது. பேரணி குசராத்து கல்லூரியை அடைந்த போது அங்கு மற்ற மாணவர்களும் இவர்களுடன் இணைந்தனர். பேரணியை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். கல்லூரிக்கு முன்பாக இந்தியக் கொடியை ஏற்ற முயன்றதற்காக கினரிவாலா பிரித்தானிய உதவிக் கண்காணிப்பாளர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். [1] [2] [3] [4]

மரபு

[தொகு]

1947 ஆம் ஆண்டில், செய பிரகாசு நாராயணின் நினைவாக கல்லூரி வளாகத்தில் வீர் வினோத் கினரிவாலா நினைவகம் திறக்கப்பட்டது. [5] இந்த நினைவுச்சின்னத்தை வடிவமைத்தவர் ரவிசங்கர் ராவல் . காளை அதன் கொம்புகளால் ஓர் இளைஞரை எடுத்துச் செல்வதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இது பிரித்தானிய பேரரசுக்கு எதிரான இளைஞர்களின் அடையாளத்தை சித்தரிக்கிறது. இந்தியக் கொடியுடன் ஒரு கையும், சுதந்திர இயக்கத்தின் அடையாளமாக உடைந்த கைவிலங்கும் இதில் இடம்பெற்றிருந்தன.[2] ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து மாதம் 9 ஆம் தேதி அகில இந்திய சனநாயக மாணவர் அமைப்பு இவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறது.

இவர் இறந்த சாலைக்கு சாகித் வீர் கினரிவாலா மார்க் என்று இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது. [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Who's Who of Indian Martyrs.
  2. 2.0 2.1 "Gujarat: Vinod Kinariwala Memorial reminds of sacrifices for freedom". DNA India (in ஆங்கிலம்). 2019-08-10. பார்க்கப்பட்ட நாள் 2020-02-28.
  3. "History of Gujarat College". www.gacc.in. Archived from the original on 2020-07-18. பார்க்கப்பட்ட நாள் 2020-02-28.
  4. "અમદાવાદના શહીદ વિનોદ કિનારીવાલાની વીરતા અને તેની કહાની ન ભૂલી શકાય". GSTV (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-08-14. பார்க்கப்பட்ட நாள் 2020-02-28.
  5. 5.0 5.1 "Veer Vinod Kinariwala Memorial". Gujarat College, Government of Gujarat. Archived from the original on 28 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத்_கினரிவாலா&oldid=3571939" இலிருந்து மீள்விக்கப்பட்டது