வினோதினி நீலகாந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினோதினி நீலகாந்த்
பிறப்பு(1907-02-09)9 பெப்ரவரி 1907
அகமதாபாது, பம்பாய் மாகாணம்
இறப்பு29 செப்டம்பர் 1987(1987-09-29) (அகவை 80)
தேசியம்இந்தியர்
பணிபேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
உறவினர்கள்சரோஜினி மேத்தா (சகோதரி)

வினோதினி ராமன்பாய் நீலகாந்த் (Vinodini Nilkanth)(9 பிப்ரவரி 1907 - 29 செப்டம்பர் 1987)[1] என்பவர் குசராத்தி எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், பத்திரிகை கட்டுரைகள் மற்றும் குழந்தைகள் இலக்கியங்களை எழுதியுள்ளார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

1914 வாக்கில் வினோதினி

வினோதினி நீலகாந்த் பம்பாய் மாகாணத்தின் ஒரு பகுதியான அகமதாபாத்தில் பிறந்தார். இவரது தந்தை ராமன்பாய் நீலகாந்த், குசராத்தி நாவலாசிரியர் மற்றும் அரசியல்வாதி. இவரது தாயார், வித்யாகவுரி நீலகாந்த், ஒரு சமூக சீர்திருத்தவாதி மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் குசராத்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் பெண்களில் ஒருவர். இவரது பெற்றோர் இருவரும் எழுத்தாளர்கள், அதே போல் இவரது சகோதரி சரோஜினியும் எழுத்தாளர் ஆவார்.

வினோதினி மகாலட்சுமி பயிற்சிக் கல்லூரியில் ஆரம்பப் பள்ளியில் பயின்றார். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். 1928-ல், தனது இளங்கலைப் படிப்பை ஆங்கிலத்தை முதன்மைப் பாடமாகவும், குசராத்தியை இரண்டாம் நிலை மொழியாகவும் முடித்தார். 1930-ல், சமூக அறிவியல் மற்றும் கல்வியில் முதுகலைப் படிப்பதற்காக மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.[1]

தொழில்[தொகு]

வினோதினி நீலகாந்த் அகமதாபாத்தில் உள்ள வனிதா விஷ்ரம் என்ற நிறுவனத்தின் தலைவராக இருந்தார். அகமதாபாத்தில் உள்ள நகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் இருந்தார். பின்னர் எசு. என். டி. டி. பெண்கள் பாடசாலையில் பேராசிரியரானார். செய்தித்தாள்களிலும் எழுதி வந்தார்.[1] குசராத்து வித்யா சபையின் செயற்குழு உறுப்பினராக இருந்தார்.[3]

வெளியீடு[தொகு]

நீலகாந்த் தனது பதின்பருவத்தில் தனது முதல் கட்டுரைப் புத்தகத்தை வெளியிட்டார். இவரது சிறுகதைகள் மனித மனதில், குறிப்பாக ஒரு பெண்ணின் மனதை ஊடுருவி தாக்கத்தினை ஏற்படுத்தியது.

கட்டுரைகள்[தொகு]

 • ராசத்வாரா (1928)
 • நிஜானந்தா [3]

சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]

 • அரசினி பிதர்மா (1942)
 • கர்பாஸி அனே பிஜி வர்தாவோ
 • தில் தரியாவ்னா மோதி (1958)
 • அங்குலினோ ஸ்பர்ஷ் (1965)

நாவல்[தொகு]

 • காதலிவன்

குழந்தைகள் இலக்கியம்[தொகு]

 • சிசுரஞ்சனா (1950)
 • மெண்டினி மஞ்சரி (1956)
 • பாலகோனி துனியாமா டோக்கியு
 • சஃபராசந்த் (1964)
 • பட்சந்த் கத்தியரோ (1964)

பிற[தொகு]

 • கர்னோ வஹிவத் (1959)
 • பால் சுரக்ஷா (1961)
 • முக்தஜனோனி பூமி (1966). [1]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஜேன் ஆஸ்டினின் ப்ரைட் அண்ட் ப்ரெஜுடிஸை தனது சொந்த இலக்கியப் படைப்புகளுடன் சேர்த்து, நீலகாந்த் குசராத்தி மொழியில் மொழிபெயர்த்தார். பெர்ட்ரண்டு ரசலின் தி கான்க்வெஸ்ட் ஆஃப் ஹேப்பினஸின் மொழிபெயர்ப்பான சுக்னி சித்தியையும் இவர் வெளியிட்டார்.

ஆய்வுக் கட்டுரைகள்[தொகு]

தழுவல்[தொகு]

நீலகாந்தின் சிறுகதையான தரியாவ் தில் காந்தி மடியா இயக்கிய கஷினோ டிக்ரோ (1979) குசராத்தி திரைப்படமாகத் தழுவி எடுக்கப்பட்டது.

விருதுகள்[தொகு]

இவரது சிறுகதைத் தொகுப்புகளான தில் தரியாவ்னா மோதி குஜராத் சாகித்ய சபா விருதையும், அவரது படைப்பு அங்குலினோ ஸ்பர்ஷ் குஜராத் அரசாங்க விருதையும் வென்றது. [3]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 "સવિશેષ પરિચય: વિનોદિની નીલકંઠ, ગુજરાતી સાહિત્ય પરિષદ". Gujarati Sahitya Parishad (in குஜராத்தி). பார்க்கப்பட்ட நாள் 8 September 2018.
 2. "Vinodinee Neelkanth: Life and times of a Gujarati writer who dared to be unconventional - Indian Express". archive.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 21 July 2018.
 3. 3.0 3.1 3.2 Encyclopaedia of Indian Literature: Navaratri–Sarvasena. https://books.google.com/books?id=sOsbAAAAIAAJ. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோதினி_நீலகாந்த்&oldid=3658384" இலிருந்து மீள்விக்கப்பட்டது