வினை (மெய்யியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வினை இந்து தத்துவங்கள் குறிப்பிடும் பிறவிக்குக் காரணமான விடயமாகும். அதாவது, ஒருவர் செய்யும் செயல்களே வினை என்று அறியப்படுகின்றது. அவரவர் செய்யும் செயல்களின் தன்மைகளுக்கேற்ப நல்வினை, தீவினை என கணிக்கப் பெறுகின்றன. நல்வினை செய்தவர் நற்பிறவியை அல்லது சொர்க்கத்தினையும், தீவினை செய்தவர் இழிவான பிறவியை அல்லது நரகத்தினையும் அடைவர் என்று இந்து இலக்கியங்கள் கூறுகின்றன.

உபநிடதங்கள் நல்வினை நெய்தவன் நல்ல கர்ப்பையிலும், தீவினை புரிந்தோர் நாய், பன்றி, சூத்திரர் முதலான இழிவான கர்ப்பையிலும் சென்று பிறப்பர் என்று கூறுகின்றனக.

பௌத்த தத்துவங்களும் வினை பற்றிக் குறிப்பிடுகின்றன. பௌத்தத்தில் கம்மா என இவை அழைக்கப்படுகின்றன. வினை என்பது தன்முனைப்பால் ஏற்பட ௬டியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினை_(மெய்யியல்)&oldid=1754000" இருந்து மீள்விக்கப்பட்டது