வினைவேகமாற்றி நச்சு
Appearance
வினைவேகமாற்றியின் செயல்திறனை இழக்கச் செய்யும் சேர்மங்கள் வினைவேகமாற்றி நச்சு எனப்படும். இச்செயல்முறை வினைவேகமாற்றி நச்சாதல் என்றழைக்கப்படும். வினைவேகமாற்றி நச்சுகளுக்கான சான்றுகள் பின்வருமாறு.
1. கந்தக டை ஆக்சைடு ஆக்சிசனேற்றமடையும் தொடுமுறையில் பயன்படுத்தப்படும் வினைவேகமாற்றியான பிளாட்டினத்திற்கு, ஆர்சீனியசு ஆக்சைடு வினைவேகமாற்றி நச்சாகச் செயல்பட்டு அதன் செயல்திறனைக் குறைக்கிறது.
- SO2 + O2 2 SO2O3 (வினைவேகமாற்றி: பிளாட்டினம், Pt; நச்சு: ஆர்சீனியசு ஆக்சைடு, - As2O3)
2. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் இரும்பு வினைவேகமாற்றிக்கு ஐட்ரசன் சல்ஃபைடு வினைவேகமாற்றி நச்சாகச் செயல்படுகிறது.
- N2 + 3 H2 2 NH3 (வினைவேகமாற்றி: இரும்பு, Fe; நச்சு: ஐட்ரசன் சல்ஃபைடு, H2S)
உசாத்துணை
[தொகு]- தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் பரணிடப்பட்டது 2011-02-06 at the வந்தவழி இயந்திரம்