வினேசு போகாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினேசு போகத்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு25 ஆகத்து 1994 (1994-08-25) (அகவை 29)
பலாலி, அரியானா, இந்தியா[1]
உயரம்160 cm (5 அடி 3 அங்)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுகட்டற்றவகை மற்போர்
நிகழ்வு(கள்)48 கிலோ
கழகம்பிவானி விளையாட்டுக் கழகம்
பயிற்றுவித்ததுஓ பி யாதவ்
பதக்கத் தகவல்கள்
மகளிர் கட்டற்றவகை மற்போர்
நாடு  இந்தியா
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 கிளாசுக்கோ 48 கிலோ
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 கோல்ட் கோஸ்ட் 50 கிலோ
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 பர்மிங்காம் 50 கிலோ
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 இஞ்சியோன் 48 கிலோ
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 ஜகார்த்தா 50 கிலோ
ஆசிய மற்போர் வாகையர் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2013 புது தில்லி 51 கிலோ
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2015 தோகா 48 கிலோ
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016 பாங்காக் 53 கிலோ
பொதுநலவாய மற்போர் வாகையர் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2013 ஜோகனசுபெர்கு[2] 51 கிலோ
21 பெப்ரவரி 2016 இற்றைப்படுத்தியது.

வினேசு போகத் (Vinesh Phogat, ஆகத்து 25, 1994) இந்திய மற்போர் வீராங்கனையாவார். மற்போர் போட்டிகளில் சாதனை படைக்கும் குடும்பப் பின்னணி கொண்டவர். இவரது இரு ஒன்றுவிட்ட சகோதரிகளான கீதா போகத்தும் பபிதா குமாரியும் கூட பன்னாட்டு மற்போர் போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகளாவர். மூவரும் பொதுநலவாய விளையாட்டுக்களில் பதக்கங்கள் வென்றுள்ளனர்.

தனிவாழ்வும் குடும்பமும்[தொகு]

வினேசு மற்போர் வீரர் மகாவீர் சிங் போகத்தின் தம்பி இராச்பாலின் மகளாவார். மற்போர் வீராங்கனைகளான கீதா போகத்தும் பபிதா குமாரியும் இவரது பெரியப்பாவின் மகள்கள் ஆவர்.[3][4]

இவரையும் இவரது ஒன்றுவிட்ட சகோதரிகளையும் மற்போரில் பயிற்றுவிக்க இவரது தந்தையும் பெரிய தந்தையும் அரியானாவின் அந்த சிற்றூரில் பெரும் எதிர்ப்பை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. தங்கள் சமூகத்தின் ஒழுக்கத்திற்கும் மரபிற்கும் எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டனர்.[5]

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினேசு_போகாட்&oldid=3571937" இருந்து மீள்விக்கப்பட்டது