வினு உடனி சிறிவர்தன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வினு உடனி சிறிவர்த்தன
பிறப்புவினு உடனி சிறிவர்த்தன
10 மார்ச்சு 1992 (1992-03-10) (அகவை 27)
கொழும்பு, இலங்கை
பணிநடிகை, வடிவழகி, தொலைக்காட்சி தொகுப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2012–தற்சமயம் வரை
விருதுகள்மிஸ் இலங்கை அழகி 2012 (சுமுது பிரசாதினியுடன் கூட்டு வெற்றியாளர்)

வினு உடனி சிறிவர்த்தன (Vinu Udani Siriwardana பிறப்பு 10 மார்ச் 1992) இலங்கையைச் சேர்ந்த நடிகை, வடிவழகி மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். தெரன வீட் உலக அழகிக்கான இலங்கை அழகி அணிவகுப்பில் கலந்து கொண்டார். இவ் அணிவகுப்பில் சுமுது பிரசாதினியுடன் கூட்டு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

உலக அழகிக்கான இலங்கை அழகி[தொகு]

31 மார்ச் 2012 இல் ப்ளூ வோட்டர், வத்துசவில் நடைபெற்ற தெரன வீட் மிஸ் உலக அழகிக்கான இலங்கை அழகி அணிவகுப்பு நடைபெற்றது.[1] அவ் அணிவகுப்பில் சுமுது பிரசாதினி இரண்டாவது இடத்தைப் பெற்றார். பின்பு அவ் முடிவு பிழை என்று தெரிய வருகின்றது. 4 ஏப்ரல் 2012 இல் கொழும்பில் கால்பேஸ் நட்சத்திர ஹோட்டலில் சுமுது வெற்றியாளராக வாகை சூடினார். வினு மற்றும் அமுது கூட்டு வெற்றியாளர்களென அறிவிக்கப்பட்டது. சீனாவில் 2012 ஆகஸ்டில் நடைபெற்ற மிஸ் உலக அழகிப் போட்டியில் அமுது இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டார்.[2] வினு மிஸ் டெலன்ட் பட்டத்தையும் வென்றுள்ளார். சண்டே ஒப்சவர் பத்திரிகையின் கணக்கெடுப்பில் அதிக மக்கள் வாக்குகளை பெற்ற போட்டியாளராக வினு தெரிவு செய்யப்பட்டார்.

சர்வதேச சுற்றுலா ராணி[தொகு]

நன்ஜிங் சீனாவில் நடைபெற்ற 18ஆவது மிஸ் சுற்றுலா ராணி சர்வதேச அழகி அணிவகுப்பில் போட்டியிட்டார். இப் போட்டியில் சிறந்த தேசிய ஆடை மற்றும் சிறந்த திறமையாளர் ஆகிய பட்டங்களை வென்றுள்ளார்.

நடிப்பு பணி[தொகு]

வினு பிபின மல் என்ற தொலைக்காட்சி நாடகத்தில் தனது நடிப்புப் பணியை தொடங்கினார்[3]. ஆனால் தருமலி தொலைக்காட்சி நாடகத்தில் தருமலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தமையால் பிரபல்யமானார்.[4] வினு இசைக் காணொளிகளிலும் தோன்றியிருக்கின்றார்.

திரைப்படங்கள்[தொகு]

வருடம் திரைப்படம் பாத்திரம்
2015 அகலிபொல குமரிஹாமி
2016 பத்தினி மனிமெக்கலா
2018 யாம ராஜ சிரி யமா தேவி

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

வினு குடும்பத்தில் இரண்டாவது புதல்வியாவார். இவருக்கு சனு என்ற மூத்த சகோதரரும் ருவி என்ற இளைய சகோதரியும் உள்ளனர். அனுலா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்[1]. தற்சமயம் வினு குடும்பத்துடன் இலங்கையில் தெகிவளையில் வசிக்கின்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 http://archives.dailynews.lk/2012/06/01/fea35.asp பார்த்தநாள் 11-7-2012
  2. http://www.universalqueen.com/2012/04/sumudu-prasadini-is-derana-veet-miss.html www.universalqueen.com பார்த்தநாள் 2012-7-11
  3. http://www.sundaytimes.lk/120805/magazine/pipena-mal-a-tale-of-sacrifices-7680.html பார்த்தநாள் 11-7-2017
  4. http://www.sundaytimes.lk/130217/magazine/tharumalee-shows-change-of-village-32907.html பார்த்தநாள் 11-7-2017

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினு_உடனி_சிறிவர்தன&oldid=2757973" இருந்து மீள்விக்கப்பட்டது