வினீத் சரண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினீத் சரண்
Justice Vineet Saran.jpg
நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
7 ஆகத்து 2018
முன்மொழிந்தவர் தீபக் மிசுரா
நியமித்தவர் ராம் நாத் கோவிந்த்
தலைமை நீதிபதி ஒரிசா உயர் நீதிமன்றம்
பதவியில்
26 பிப்ரவரி 2016 – 6 ஆகத்து 2018
முன்மொழிந்தவர் டீ. எஸ். தாக்கூர்
நியமித்தவர் பிரணாப் முகர்ஜி
நீதிபதி, கர்நாடக உயர் நீதிமன்றம்
பதவியில்
16 பிப்ரவரி 2015 – 25 பிப்ரவரி 2016
முன்மொழிந்தவர் எச். எல். தத்து
நியமித்தவர் பிரணாப் முகர்ஜி
நீதிபதி, அலகாபாத் உயர் நீதிமன்றம்
பதவியில்
14 பிப்ரவரி 2002 – 15 பிப்ரவரி 2015
முன்மொழிந்தவர் சாம் பிரோஜ் பாருச்சா
நியமித்தவர் கே. ஆர். நாராயணன்
தனிநபர் தகவல்
பிறப்பு 11 மே 1957 (1957-05-11) (அகவை 65)
தேசியம் இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள் அலகாபாத் பல்கலைக்கழகம்

வினீத் சரண் (Vineet Saran) என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் ஒரிசா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.[1] இவர் கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் ஆவார்.

நீதிபதி பணி[தொகு]

நீதிபதி வினீத் சரண் 1957 மே 11 அன்று பிறந்தார். இவர் 28 ஜூலை 1980 அன்று வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்டார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சட்டம் தொடர்பான அனைத்து விடயங்களிலும் பயிற்சி பெற்றார். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 16 பிப்ரவரி 2015 அன்று கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் பெற்றார். 26 பிப்ரவரி 2016 அன்று ஒரிசா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[2]

சரண், ஆகஸ்ட் 8, 2018 அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Centre Notifies Appointment Of Justices KM Joseph, Indira Banerjee And Vineet Saran As SC Judges". Apoorva Mandhani. Live Law. 3 August 2018. 5 August 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. https://orissahighcourt.nic.in/judges/chief-justices-judges-elevated-to-supreme-court/hon-ble-mr-justice-vineet-saran/
  3. https://www.scobserver.in/judges/vineet-saran/
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினீத்_சரண்&oldid=3343520" இருந்து மீள்விக்கப்பட்டது