வினா எழுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினா எழுதி
அண்மை வெளியீடுவினா எழுதி (3.0) / மே 1, 2008
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோசு
உரிமம்Proprietary EULA
இணையத்தளம்Question Writer home page

வினா எழுதி (Question Writer) என்பது மைக்ரோசாப்ட் விண்டோசிவிற்கான வினாடி வினா எழுதும் கருவி. இது கேள்விகளை எழுதுவதற்கும் அடோபி விளாசு வடிவத்தில் வினாடி வினாக்களில் தொகுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. [1] இந்த மென்பொருளை சென்ட்ரல் கொஸ்டீன் வெளியிட்டது. [2]

பயனர் இடைமுகம்[தொகு]

இந்த மென்பொருள் ஒவ்வொரு வினாடி வினாவையும் ஒரு தனி ஆவணமாக கருதுகிறது. இடதுபுறத்தில் கேள்விகளை மரம் போல காட்சியளிக்கிறது. வலது புறத்தில் கேள்விகளை மாதிரிக்காட்சி பார்ப்பதற்கான இடைமுகத்தினைக் கொண்டுள்ளது. இந்த மென்பொருள் பல ஆவண இடைமுகத்தைப் பயன்படுத்துகிறது, பல வினாடி வினாக்களை ஒரே நேரத்தில் திறக்க அனுமதிக்கிறது. வினாடி வினாவுக்குள் கேள்விகளை மறு வரிசைப்படுத்தவும் வினாடி வினாக்களுக்கு இடையில் கேள்விகளை நகலெடுக்கவும் இழுத்து விடும் வசதிகளையும் கொண்டுள்ளது.

அம்சங்கள்[தொகு]

இதன் பயனர்கள் கேள்விகளைச் சேர்ப்பதன் மூலமும் வினாடி வினாவுக்கு பொருந்தக்கூடிய அமைப்புகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் வினாடி வினாக்களை உருவாக்குகிறார்கள். கேள்வி அமைப்புகள் மற்றும் தேர்வு, நேர வரம்புகள், அறிக்கையிடல் மற்றும் பின்னூட்ட நிலை, குறிக்கும் திட்டம் மற்றும் தேர்ச்சி மதிப்பெண் ஆகியவற்றுடன் மாற்றங்களைச் செய்ய இந்த மென்பொருள் அனுமதிக்கின்றன.

8 விதமான கேள்வி வகைகளைப் பயன்படுத்தலாம், அவை

  • பலவுள் தெரிவு
  • பல விடைகளைக் கொண்டிருத்தல்
  • பொருத்துக [3]
  • வரிசைப்படுத்துதல் [4]
  • கோடிட்ட இடங்களை நிரப்புக
  • கட்டுரை [5]
  • சரி/ தவறு
  • பார்சியல் கிரெடிட் [6]

கையேடு[தொகு]

கையேடு விக்கி புத்தகமாக ஆன்லைனில் கிடைக்கிறது. [7]

சான்றுகள்[தொகு]

  1. "Question Writer home page".
  2. "Publisher website".
  3. "Matching question description". Archived from the original on 2011-01-04. பார்க்கப்பட்ட நாள் 2020-09-24.
  4. "Sequencing question description". Archived from the original on 2011-01-04. பார்க்கப்பட்ட நாள் 2020-09-24.
  5. "Essay question description". Archived from the original on 2011-03-05. பார்க்கப்பட்ட நாள் 2020-09-24.
  6. "Partial Credit question description". Archived from the original on 2011-05-09. பார்க்கப்பட்ட நாள் 2020-09-24.
  7. "Question Writer 3 Manual".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினா_எழுதி&oldid=3571930" இலிருந்து மீள்விக்கப்பட்டது