வினாடி வினா

வினாடி வினா (quiz) என்பது ஒரு வகையான மன ரீதியிலான விளையாட்டு ஆகும். இதில் மக்கள் ஒன்று அல்லது பல தலைப்புகளில் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க முயற்சி செய்கிறார்கள். அறிவு, திறன்களின் வளர்ச்சியை அளவிடுவதற்கு கல்வி சார் மதிப்பீடாகவோ அல்லது வெறுமனே ஒரு பொழுதுபோக்காகவோ வினாடி வினாக்களைப் பயன்படுத்தலாம். பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகவும், பெரும்பாலும் விளையாட்டு நிகழ்ச்சி வடிவத்திலும் அவற்றை தொலைக்காட்சியில் ஒளிபரப்பலாம்.
சொற்பிறப்பியல்
[தொகு]இந்த வார்த்தையின் ஆரம்பகால உதாரணங்கள் 1780 ஆம் ஆண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம். இதன் சொற்பிறப்பியல் தெரியவில்லை, ஆனால் அது மாணவர் பேச்சுவழக்கில் தோன்றியிருக்கலாம். இதற்கு, ஆரம்பத்தில் "விசித்திரமானது, விசித்திரமான நபர்" [a] அல்லது "நகைச்சுவை, புரளி" என்று பொருள்பட்டது. சுமார் 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இதற்கு "சோதனை, தேர்வு" என்று புரிந்துகொள்ளப்படுகிறது. [2] [3]
போட்டி
[தொகு]

வினாடி வினாக்கள் பல்வேறு பாடங்களில் பொது அறிவு அல்லது பாடம் சார்ந்ததாக நடத்தப்படலாம். வினாடி வினாவின் வடிவமும் மாறுபடலாம்.
கல்வி
[தொகு]கல்விச் சூழலில், வினாடி வினா என்பது பொதுவாக மாணவர் மதிப்பீட்டின் ஒரு வடிவமாகும். ஒரு தேர்வை விட இதற்கு குறைந்த நேரம் தேவைப்படுகிறது. [4] இந்தப் பயன்பாடு பொதுவாக அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ், டொமினிகன் குடியரசு, இந்தியாவில் உள்ள சில கல்லூரிகளில் காணப்படுகிறது. உதாரணமாக, ஒரு கணித வகுப்பறையில் ஒரு வினாடி வினா ஒரு வகையான கணிதப் பயிற்சியின் புரிதலைச் சரிபார்க்கலாம். சில பயிற்றுனர்கள், மாணவர்கள் அடுத்த பாடத்திற்குச் செல்வதற்கு முன்பு அவர்களின் முந்தைய பாடங்களை மறுபரிசீலனை செய்யும் நோக்கத்திற்காக, ஐந்து முதல் முப்பது வரையிலான ஒப்பீட்டளவில் எளிதான கேள்விகளை தினசரி அல்லது வாராந்திர வினாடி வினாவை நடத்துகின்றனர்.
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "quoz, n. (and int.)". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். (Subscription or participating institution membership required.)
- ↑ "quiz, n.". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். (Subscription or participating institution membership required.)
- ↑ "quiz, v.1". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். (Subscription or participating institution membership required.)
- ↑ "Quiz: How much do you know about China and Turkey?". cnn.com. Archived from the original on 4 October 2010.
