உள்ளடக்கத்துக்குச் செல்

விந்துக் கொடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விந்து தானம் அல்லது விந்துக் கொடை (sperm donation) என்பது ஆண் தன் மனைவியல்லாத பெண்ணைக் கருத்தரிக்கச் செய்யத் தன் விந்தைத் தானம் தருவதாகும்.[1][2] இந்த விந்துவினால் பிறக்கும் குழந்தைக்கு விந்தை அளித்தவர்தான் தந்தை என்றாலும், சட்டப்படியும் பிற சடங்குகளின்படியும் கருத்தரித்த பெண்ணின் கணவரே அக்குழந்தைக்குத் தந்தையாகக் கருதப்படுவார்.[3] குழந்தையல்லாத இணையர் மட்டுமின்றி ஓரினச் சேர்க்கையாளர்களும், திருமணம் செய்து கொள்ளாத பெண்களும் இவ்வகையில் குழந்தை பெற்றுக் கொள்வர்.

தன் விந்தை கொடையளிக்க விரும்புபவர் விந்து வங்கியை நாடி கொடையளிப்பர்.[4] விந்தைப் பெற விரும்பும் இணையர் விந்தை அளித்தவரின் உடற்கட்டு, இனம், தோற்றம், திறமைகள் போன்ற பிற தகவல்களை நாடிப் பெறுவதும் உண்டு. கருத்தரித்தல் செயற்கை முறையில் விந்தை பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தல் வழியும் நடைபெறும். சில நேரங்களில் அந்த ஆண் அப்பெண்ணுடன் உடலுறவு கொண்டு கருத்தரிக்கச் செய்தலும் நடைபெறும். ஆண் ஒருவர் தனியார் விந்து வங்கிகளில் தன்னுடைய விந்தைக் குறிப்பிட்ட பெண்ணுக்குத் தர அனுமதி உண்டு.

விந்தணு கொடையாளி

[தொகு]

விந்தணு கொடையாளி என்பவர் தன் மனைவியல்லாத பெண்ணைக் கருத்தரிக்கச் செய்யத் தன் விந்தைத் தானமாகத் தருபவராவார்.[5][2] இவ்வாறு கொடையாகத் தரப்படும் விந்தணுவை வாங்கவும், சேமிக்கவும், விற்பனை செய்யவும் விந்தணு வங்கிகள் செயல்படுகின்றன. பெரும்பாலான வங்கிகள் 18 வயது முதல் 39 வயது வரை உள்ள ஆண்களிடமிருந்து விந்தணுவைத் தானமாகப் பெறுகின்றன.

சட்டக் கருத்துகள்[சான்று தேவை]

[தொகு]

விந்தணு கொடையாளிகள் முறையாக மனித கருத்தரித்தல் மற்றும் கருவளவியல் ஆணையம் அங்கீகரித்த விந்தணு வங்கிகளில் விந்தணுவைக் கொடுக்க வேண்டும். இதனால் கொடையாளிகளின் விந்தணுவிலிருந்து உருவாகும் குழந்தைகளுக்கும் விந்தணு கொடையாளிகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது.

  • கொடை விந்தணு மூலம் பிறக்கும் எந்தவொரு குழந்தைக்கும் கொடையாளி சட்டப்பூர்வத் தந்தை இல்லை.
  • பிறக்கும் குழந்தைக்கு எந்தச் சட்டப்பூர்வக் கடமையையும் கொடையாளி செய்ய வேண்டியதில்லை.
  • குழந்தைக்கு நிதியுதவி செய்யும்படி விந்தணு கொடையாளியை நிர்ப்பந்திக்க இயலாது.
  • அதுபோல குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைப் பெற்றோரிடம் கூற விந்தணு கொடையாளிக்கு எந்த உரிமையும் இல்லை.
  • குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் விந்தணு கொடையாளியின் பெயர் இடம்பெறாது.

இந்த உரிமைச் சட்டங்கள் நாடுகளுக்கிடையே மாறுபடுகிறது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "Sperm donation - Mayo Clinic". www.mayoclinic.org. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.
  2. 2.0 2.1 "Donor Sperm for Fertility Treatment | IVF Australia". www.ivf.com.au (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-31.
  3. Jacqueline Acker (2013). "The Case for Unregulated Private Sperm Donation". UCLA Women's Law Journal 20. doi:10.5070/L3201018045. https://escholarship.org/uc/item/2qj3t4t1#page-1. 
  4. "Top U.S. Sperm Banks: Compare & Find Ideal Sperm Donor Facility Near Me". www.ivfauthority.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.
  5. "Sperm donation - Mayo Clinic". www.mayoclinic.org. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விந்துக்_கொடை&oldid=3715483" இலிருந்து மீள்விக்கப்பட்டது