விந்தணு வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விந்தணு வங்கி என்பது மனித விந்தணுக்களை சேமித்து வைக்கின்ற நிறுவனமாகும்.‌ [1] விந்தணு வங்கி விந்தணு கொடையாளர்களிடமிருந்து விந்தணுக்களை வாங்கி சேமிக்கிறது. விந்தணு தேவையுள்ளோர்களிடம் விற்கவும் செய்கிறது.

ஒரு விந்தணு வங்கி என்பது தனிநபர்கள் அல்லது கருவுறுதல் மையங்கள் அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு விந்தணுக்களை விற்கும் தனிப்பட்ட நிறுவனமாக செயல்படுகிறது. சில பிரபல மருத்துவமனைகள் அல்லது மருத்துவ நிறுவனங்கள் கீழ் விந்தணு வங்கி செயல்படும் போது தனிநபர்களுக்கு வெளி மருத்துவமனைகளுக்கோ விந்தணுக்களை விற்காமல், அவர்களின் நோயாளிகளுக்கு மட்டுமே விந்தணுக்களை வழங்குகிறது.

பெரும்பாலான வங்கிகள் 18 வயது முதல் 39 வயது வரை உள்ள ஆண்களிடமிருந்து விந்தணுவை தானமாக பெறுகின்றன.[1] ஒரு சில வங்கிகள் அதிகபட்ச வயது வரம்பை 34 என்று நிர்ணயித்துள்ளது. எனவே, சராசரியாக ஒரு ஆண் 18 வயதிலிருந்து 35 வயது வரை விந்தணுவை தானமாக கொடுக்கலாம்.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விந்தணு_வங்கி&oldid=3715466" இருந்து மீள்விக்கப்பட்டது