விநாயகபுரம் மகா வித்தியாலயம், திருக்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


விநாயகபுரம் மகா வித்தியாலயம்
விநாயகபுரம் மகா வித்தியாலயம்
விநாயகபுரம் மகா வித்தியாலயம்
அதிகாரபூர்வ சின்னம்
குறிக்கோள் அறிவே ஆளுமை,
()
அமைவிடம்
நாடு இலங்கை
மாகாணம் கிழக்கு மாகாணம்
மாவட்டம் அம்பாறை மாவட்டம்
நகரம் திருக்கோவில்
இதர தரவுகள்
அதிபர்
பிரதி அதிபர்
மாணவர்கள் 1000+ (2015)
ஆசிரியர்கள் 38(2015)
உதவி ஊழியர்கள் 3(2015)
ஆரம்பம் 1965

[1] விநாயகபுரம் மகா வித்தியாலயம் கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் விநாயகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலை ஆகும்.[2] சுமார் 40 கல்விசார் ஊழியர்களைக் கொண்ட, இப்பாடசாலை, தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரை கொண்டிருக்கின்றது. நீண்ட கால வரலாறு கொண்ட குறித்த பாடசாலை 2015ம் ஆண்டு பொன்விழா கொண்டாடியது.

வரலாறு[தொகு]

விநாயகபுரம் கிராமத்தில் வாழ்ந்த மக்களின் பிள்ளைகளுக்கு கல்வி வழங்கும் நோக்குடன் 60×20 அடி ஓலைக் குடிசைகளுடனும் பிரதேச கற்ற இளைஞர்கள்,கிராம முன்னேற்ற சங்க அங்கத்தவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடனும் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 200 மாணவர்களையும் 13 தொண்டராசிரியர்களையும் கொண்டதாக அமைந்தது.

இவ் இளைஞர்களின் கற்பித்தலுடன் 1965 வரை இயங்கி வந்த பாடசாலை 1965.01.11 அன்று அரசினால் பொறுப்பேற்கபப்பட்டது. அதன்படி விநாயகபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை எனக் கல்வி அமைச்சினால் பதியப்பட்டது.

ஓலைக் குடிசையில் இயங்கிய பாடசாசாலையின் புதிய கட்டடத்திற்காக 1969.07.12 இல் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மேலும் முதலாவது இல்ல விளையாட்டுப்போட்டி 1980.03.26 இல் நடைபெற்றது. 1981 இலிருந்து 6ம் வகுப்பு வைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.1986 இல் இப்பாடசாலை 1C ஆக தரமுயர்த்தப்பட்டது. இப்பாடசாலைக்கு 1990ம் ஆண்டு நியமனம் பெற்று வந்த கலைப்பட்டதாரி ஆசிரியர் திரு.தங்கராசா தவராஜா அவர்களால் பாடசாலைக்கென கலாசாலைகீதம் இயற்றப்பட்டது. 1992 இல் க.பொ.த உயர்தரம் தொடங்கப்பட்டது. 2012 இல் க.பொ.த உயர்தர விஞ்ஞானப்பிரிவு தொடங்கப்பட்டதுடன் இப்பாடசாலை 1AB பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.[3] 2015 இல் பொன்விழா கொண்டாடப்பட்டது.2015 ம் ஆண்டு பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட ஆய்வுகூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.[4] [5]

பாடசாலை ஆரம்ப கர்த்தாக்கள்[தொகு]

 1. திரு மா.ஐயாத்துரை
 2. திரு பொ.கந்தசாமி
 3. திரு கு.விநாயகமூர்த்தி
 4. திரு க.பரமநாதபிள்ளை
 5. திரு வே.சந்திரசேகரம்
 6. திரு கு.கணேசமூர்த்தி
 7. திரு சி.வேல்முருகு
 8. திரு கு.பாலசுந்தரம்
 9. திரு சி.தங்கராசா
 10. செல்வி சி.பொன்னுத்தங்கம்
 11. செல்வி பொ.நாகேஸ்வரி
 12. செல்வி வே.பூரணம்மா
 13. திருமதி பார்வதி சுந்தரம்

[6]

அதிபர்கள்[தொகு]

 1. திரு க.சுப்பிரமணியம்(1965–1968)
 2. திரு S.T.பூபாலரெட்ணம்(1968–1971)
 3. திரு J.S.நடராஜா(1971–1974)
 4. திரு S.K.இராஜேந்திரம்(1974–1979)
 5. திரு மா.செல்லப்பா(1979–1980)
 6. திரு ப.சதாசிவம்(1980–1994)
 7. திரு கு.கணேசமூர்த்தி(1994–1997)
 8. திரு பா.நவரெத்தினம்(1997–1999)
 9. திரு இ.வேலுப்பிள்ளை(1999–2001)
 10. திரு சு.தவராசா(2001–2006)
 11. திரு ச.பீதாம்பரம்(2006–2008)
 12. திரு கி.சிறிஸ்கந்தராசா(2008–2010)
 13. திரு சொ.பரஞ்சோதி(2010–2014)
 14. திரு R.M.அன்ரன்(2014–2018)

[7]

பாடசாலைப் பண்[தொகு]

உலகெங்கும் புகழ்பெறு உயர் தமிழ் வாழ்க
உதவிடும் கலைமகள் வாழ்க
விரிபுகழ் விளைநகர் விநாயகபுரத்தில்
விளங்கிடும் தமிழ் கலைக்கூடம்
அறிவினை அளித்து அருளொளி பெருக்கும்
அனைவரும் நீடுளி வாழ்க
கல்வியை நாம் பயில்வோமே
கடவுளை வணங்கிடுவோமே
கலைவளம் பெருக்கிடுவோமே
அறிவோம் அறிவோம் அறிவோம் அறிவறிவறிவோம்
பயிலும் நல் மாணவர் வாழ்க.

நல் மாணவ மணிகளின் நலன்களை நினைத்தே
நாளுமே நமதிறை தொழுவோம்
நாட்டுக்கும் தமிழுக்கும் ஏட்டுக்கும் உயிரை
நல்கவே சபதமும் எடுப்போம்
அனைவரும் ஒரு குலமாவோம்
அறிவினில் சமரசம் காண்போம்
அன்பினில் ஒற்றுமையாவோம்
(அறிவோம் அறிவோம்)

இறைவனின் திருவருள் பெரிதென நினைத்தே
இசைமழை பொழிந்திடுவோமே
அறிவுரை கூறிடும் அன்னை பிதா குரு
ஆணைக்கும் அடங்கிடுவோமே
சேவையின் மூலமும் நாமே சேமங்கள்
அடைந்திடுவோமே
செய்தொழில் போற்றிடுவோமே
(அறிவோம் அறிவோம்)

[8]

பாடசாலையின் பணிக்கூற்றும் தூரநோக்கும்[தொகு]

பணிக்கூற்று[தொகு]

அறிவு,திறன் மனப்பாங்கு விழுமியங்கள் என்பவற்றில் நேரான நடத்தை மாற்றத்தைக் காட்டும் தேசிய ஒருமைப்பாடும்,மனித நேயமும் மிக்க சந்ததியை உருவாக்குதல்.

தூரநோக்கு[தொகு]

எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுத்து வாழக்கூடிய ஆளுமைப்பண்புடைய மனித சமுதாயம்

[9]

மேற்கோள்கள்[தொகு]

 1. பொன் விழா மலர் (2015),கமு/திகோ/விநாயகபுரம் மகா வித்தியாலயம், பாடசாலை கொடியும் இலச்சினையும், பப.07
 2. 'List of schools in eastern'
 3. பொன் விழா மலர் (2015),கமு/திகோ/விநாயகபுரம் மகா வித்தியாலயம், பப.05-14
 4. 'Fire breaks out in school'
 5. 'Fire breaks'
 6. பொன் விழா மலர் (2015),கமு/திகோ/விநாயகபுரம் மகா வித்தியாலயம், பப.15
 7. பொன் விழா மலர் (2015),கமு/திகோ/விநாயகபுரம் மகா வித்தியாலயம், பப.16
 8. பொன் விழா மலர் (2015),கமு/திகோ/விநாயகபுரம் மகா வித்தியாலயம், பப.4
 9. பொன் விழா மலர் (2015),கமு/திகோ/விநாயகபுரம் மகா வித்தியாலயம்,