வித்யுலேகா ராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வித்யுலேகா ராமன்
பிறப்புநவம்பர் 4, 1991 (1991-11-04) (அகவை 28)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா[1]
மற்ற பெயர்கள்வித்யு
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2012 – தற்போது

வித்யுலேகா ராமன் (Vidyullekha Raman, பிறப்பு: 4 நவம்பர் 1991) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் நடிகர் மோகன் ராமன் அவர்களின் மகள். 2012 ஆம் ஆண்டில் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்ட கௌதம் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம் மற்றும் எட்டோ வெளிபொயிந்தி மனசு திரைப்படங்களில் வித்யுலேகா முதன்முதலில் தோன்றினார்.[2] அதில் ஜென்னி என்னும் கதாபாத்திரத்தில் நாயகி சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து சுந்தர் சி. இயக்கத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தீயா வேலை செய்யனும் குமாரு திரைப்படத்தில் நடித்தார். தற்போது அஜித்தின் படத்தில் நடித்து வருகிறார்.[3] பல படங்களில் சிரிப்பு நடிகையாக நடித்த இவர் இனிமேல் குணச்சித்திர வேடங்களில் நடிக்கவிரும்புவதாகக் கூறியுள்ளார்.[4]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி Notes
2012 நீ தானே என் பொன்வசந்தம் ஜென்னி தமிழ் பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது
2012 எட்டோ வெளிபொயிந்தி மனசு தெலுங்கு
2013 தீயா வேலை செய்யனும் குமாரு வித்யா தமிழ்
2013 சம்திங் சம்திங் தெலுங்கு
2013 ராமய்யா வச்தாவையா ஆஷா ஜோதி தெலுங்கு படப்பிடிப்பில்
2014 மாலினி 22 பாளையங்கோட்டை தமிழ் படப்பிடிப்பில்
2014 மாலினி 22 விஜயவாடா தெலுங்கு படப்பிடிப்பில்
2014 வீரம் தமிழ்
2014 ஜில்லா தமிழ்

மேற்கோள்[தொகு]

  1. "Vidyullekha Raman Husband, Marriage, Age, Height, Weight, Biography. Article from Tamilactressdiary.com (பார்த்த நாள் 2018-03-15)"
  2. "A Gene To Inherit". Behindwoods.com. பார்த்த நாள் 2013-11-27.
  3. Ramchander (2013-04-01). "Vidyullekha Raman in Ajith-Tamanna's next flick". One India. பார்த்த நாள் 2013-11-27.
  4. வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்: வித்யூலேகா நேர்காணல் தி இந்து தமிழ் 05 செப்டம்பர் 2015

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யுலேகா_ராமன்&oldid=2923973" இருந்து மீள்விக்கப்பட்டது