வித்யா ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்யா ராவ்
Vidya Rao
திசம்பர் 2016 இல் குசராத்திலுள்ள அகமதாபாத் இலக்கியத் திருவிழாவில்
பின்னணித் தகவல்கள்
பிறப்புஇந்தியா ஐதராபாத்
தொழில்(கள்)பாடகி
இணையதளம்www.vidyaraosinger.com

வித்யா ராவ் (Vidya Rao) இந்துசுதானி இசைப் பாடகி மற்றும் ஓர் எழுத்தாளர் ஆவார். தும்ரி இசை மற்றும் தாத்ரா இசை பாணியில் பாடுவதில் இவர் புகழ்பெற்றவராகக் கருதப்படுகிறார்.[1]. நைனாதேவி என்னும் மறைந்த பாடகியைப் பற்றி நெஞ்சோடு நெஞ்சம் என்ற பெயரில் ஒரு நூலை இவர் எழுதியுள்ளார்.

வாழ்வும் பணியும்[தொகு]

வானாபர்தியில் பிறந்த வித்யா இந்தியாவின் ஐதராபாத் நகரத்தில் வளர்ந்தார். இவர் தனது பட்டப் படிப்பை சென்னையில் முடித்த பின், தில்லி பொருளாதாரப் பள்ளியில் சமூகவியல் பிரிவில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றார் [2].

இவர் தனது இசைப் பயணத்தைத் தொடங்குமுன் பெண்கள் மேம்பாட்டுக் கல்வி மையத்தில் ஐந்து ஆண்டுகள் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்[2]. அமீர்குசுரு,கபீர் ஆகியோரைப் போன்று பாடல்களை இயற்றியுள்ளார்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Kuldeep Kumar. "On a delicate note". The Hindu. http://www.thehindu.com/arts/books/article2683984.ece. பார்த்த நாள்: 17 January 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "Glimpses of Naina". The Hindu. December 8, 2011. பார்க்கப்பட்ட நாள் 11 June 2013.
  3. Jyoti Nair Belliappa. "Cascade of thumris". The Hindu. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யா_ராவ்&oldid=3352366" இலிருந்து மீள்விக்கப்பட்டது