வித்யா பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வித்யா பிள்ளை (பிறப்பு 26 நவம்பர் 1978) என்பவர் ஓர் இந்திய தொழில்முறை மேடை கோற்பந்தாட்ட வீரர் ஆவார். சென்னையில் வளர்ந்து திருமணத்திற்கு பின் கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு இடம்பெயர்ந்தார். விளையாட்டில் சிறந்து விளங்கியமைக்காக கர்நாடகா அரசின் விருதினை பெற்றுள்ளார். சர்வதேச அளவில் பதக்கங்களை பெற்றுள்ள இவர் 2013ம் ஆண்டின் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். உலக பெண்கள் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் இற்திபோட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை 2016ம் ஆண்டில் பெற்றார். 2017ல் அப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் 

இளமைக்காலம்[தொகு]

சென்னையில் மூன்று பள்ளிகளில் கல்வி பயின்ற இவர் தனது கல்லூரி படிப்பை லயோலா கல்லூரியில் நிறைவு செய்தார். பின்னொரு நாளில் தன்னை இந்திய கிரிக்கட் அணி முன்னாள் வீரர் ஹேமங் பதானி அறிமுகம் செய்ததாக தெரிவித்திருக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யா_பிள்ளை&oldid=2685405" இலிருந்து மீள்விக்கப்பட்டது