வித்யா சுப்ரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam, பிறப்பு 1957) ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். மைலாப்பூரில் பிறந்து வளர்ந்த இவர் ஏறத்தாழ முப்பது வருடங்களாக நாவல்கள் மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவர் எழுதிய 100 புத்தகங்களின் பயனாக தமிழ்நாடு மாநில விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.[1] இவர் எழுதிய சிறுகதைகள் ஆங்கிலத்தில் “பியாண்ட் தி பிராண்டியர்“ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவரது இரண்டு சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “தமிழ் புனைநூல்களின் மலிவுப்பதிப்புப் தொகுப்பு” (Anthology of Tamil Pulp Fiction) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நூலில் இடம்பெற்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vidhya Subramaniam". Pustaka library. Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 26 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Chakravarthy, Pritham (2008). The Blaft Anthology of Tamil Pulp Fiction. Chennai, India: Blaft Publications. p. 178. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-906056-0-1. {{cite book}}: Cite has empty unknown parameters: |month= and |chapterurl= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யா_சுப்ரமணியம்&oldid=3571645" இலிருந்து மீள்விக்கப்பட்டது