வித்யா சங்கர்
| வித்யா சங்கர் | |
|---|---|
ஜனாதிபதி பிரதிபா பாட்டில் வித்யா சங்கருக்கு 2007 சங்கீத நாடக அகாதமி விருதை வழங்குகிறார் (கருநாடக இசைக்கருவி - வீணை) | |
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பு | 28 திசம்பர் 1919
[1] சென்னை, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய சென்னை, தமிழ்நாடு, இந்தியா) |
| இறப்பு | 29 சூன் 2010 (அகவை 90)
[2] மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு[2] |
| இசை வடிவங்கள் | கருநாடக இசை |
வித்யா சங்கர் (Vidya Shankar, 28 திசம்பர் 1919—29 சூன் 2010) என்பவர் ஒரு புகழ்பெற்ற இந்திய இசையியலாளர், கல்வியாளர்,வீணை இசைக்கலைஞர் ஆவார்.[3] இசைக் கலைஞர்களுக்கான மிக உயர்ந்த இந்திய விருதான சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றவர்.
தொழில்
[தொகு]வித்யா உயர்நிலைப் பள்ளி வரை வீட்டிலேயே கல்வி பயின்றார். இவருக்குப் பிடித்த பாடமான கணிதத்தில் திறமையானவராக இருந்ததால், அந்தத் துறையில் பட்டம் பெற விரும்பினார். ஆனால் "பெண்ணுக்கு கல்லூரியில் அது மிகவும் கடினமான பாடமாக இருக்கும் என்று உணர்ந்த அவரின் தந்தை அதை நிராகரித்தார். அதற்கு பதிலாக அவர் என்னை இசையை எடுக்கச் செய்தார்".[4] ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்த பிறகு, இவர் கலா நிலையம், சில்ரன் கார்டன் பள்ளி, சென்னையில் உள்ள கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் கணிதம் கற்பித்தார். பின்னர் மத்திய கர்நாடக இசைக் கல்லூரியில் சமசுகிருதம் மற்றும் இசையியல் ஆசிரியராக இருந்தார்.[4]
வித்தியா தனது துவக்ககால இசைக் கல்வியை டி. எஸ். சபேச ஐயரிடம் கற்றார். மேலும் மெட்ராஸ் சபாபதி ஐயர் மற்றும் இசைக்கலைஞர் டி. எல். வெங்கடராம ஐயர் ஆகியோரிடம் மேம்பட்ட இசைப் பயிற்சி பெற்றார். சமசுகிருதம், ஆங்கிலம் ஆகியவற்றில் இவருக்கு இருந்த புலமை காரணமாக, சிறந்த கருநாடக இசைக்கலைஞரான சியாமா சாஸ்திரிகள் குறித்து, ஏராளமான கட்டுரைகளையும், புத்தகங்களையும் வெளியிட்டார். 2007 ஆம் ஆண்டில், இவருக்கு சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]புகழ்பெற்ற சந்திரசேகர் அறிவுஜீவி குடும்பத்தைச் சேர்ந்த வித்தியா, இயற்பியலுக்கு நோபல் பரிசு பெற்ற சுப்பிரமணியம் சந்திரசேகரின் தங்கையும், இயற்பியலுக்கு நோபல் பரிசு பெற்ற சி.வி. ராமனின் மருமகளும் ஆவார்.[3] இவர் பாரி & கோ நிறுவனத்தின் நிர்வாகியான வி. எஸ். ஐயரை மணந்தார்.[3] இந்த இணையருக்கு வி. எஸ். சிவகுமார், வி. எஸ். மகேஷ், டாக்டர் வி. எஸ். சுந்தர் ஆகிய மூன்று மகன்கள் உண்டு.
சில காலம் உடல்நலக் குறைவால் அவதியுற்ற வித்தியா, 2010 சூன் 29 அன்று காலை, மைலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "TTK Memorial Award". The Journal of the Music Academy (Madras) 70: 40. 1999.
- ↑ 2.0 2.1 "Veena Vidushi passes away". Mylapore Times. 30 June 2010. http://www.mylaporetimes.com/2010/06/veena-vidushi-passes-away/.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Krishnan, Lalithaa (1 July 2010). "Art and science converged here". The Hindu. https://www.thehindu.com/features/friday-review/music/Art-and-science-converged-here/article16181169.ece.
- ↑ 4.0 4.1 "Vainika Vidya Shankar no more". 30 June 2010. https://www.thehindu.com/arts/Vainika-Vidya-Shankar-no-more/article16204888.ece.