வித்யாவினோதினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்யாவினோதினி
Vidyavinodini
முன்னாள் இதழாசிரியர்கள்சி.பி. அச்சுத மேனன், அப்பு நெடுங்காடி, டி.கே. கிருட்டிண மேனன், பள்ளியில் கோபால மேனன்
வகைஇலக்கியப் பத்திரிகை
இடைவெளிமாதாந்தரி
முதல் வெளியீடுநவம்பர் 1889 (1889-11)
கடைசி வெளியீடுமார்ச்சு 1902 (1902-03)
நிறுவனம்வி. சுந்தரய்யர் & சன்சு
நாடுகொச்சின்
மொழிமலையாளம்

வித்யாவினோதினி (Vidyavinodini) என்பது கொச்சி இராச்சியத்தில் இருந்த (இப்போது இந்தியாவின் ஒரு பகுதி) திரிச்சூரில் இருந்து வெளியிடப்பட்ட மலையாள மொழி மாத இலக்கிய இதழாகும் . [1] 1889 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியிடத் தொடங்கி 1902 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் வரை தொடர்ந்து வெளியிடப்பட்டது.

வரலாறு[தொகு]

வித்யாவினோதினி அச்சகம் 1886 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது (மலையாள சகாப்தம் 1062). வி.சுந்தரய்யர் & சன்சு உரிமையாளர்களான வி.சுந்தரய்யர் மற்றும் அவரது மகன் விசுவநாதய்யர் ஆகியோரால் இவ்வச்சகம் நடத்தப்பட்டது. [1] சி.பி.அச்சுத மேனனை ஆசிரியராகவும், விசுவநாதய்யரை மேலாளராகவும் வைத்து 1889 ஆம் ஆண்டு வித்யாவினோதினி இதழைத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் இதழ் திருச்சூரில் உள்ள கல்பத்ருமம் அச்சகத்திலும், பின்னர் 1900 ஆம் ஆண்டு முதல் வித்யாவினோதினி அச்சகத்திலும் அச்சிடப்பட்டது.

வித்யாவினோதினியின் முதல் இதழ் நவம்பர் 1889 இல் வெளியிடப்பட்டது. மலையாளத்தின் முதல் இதழான வித்யா விலாசினி, அந்த நேரத்தில் வெளியிடுவதை நிறுத்தியது. இது வித்யாவினோதினிக்கு விரைவில் அப்பகுதியில் தன்னை ஒரு சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ள உதவியது. [2] வித்யாவினோதினி இதழால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கேரளாவின் இலக்கிய, பண்பாட்டு மற்றும் அறிவியல் துறைகளில் பங்களிக்க முடிந்தது. இந்த இதழ் 150 இதழ்களை (பன்னிரெண்டு ஆண்டுகள் மற்றும் ஆறு இதழ்கள்) வெளியிட்டது. 1902 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியீடு நிறுத்தப்பட்டது.[3] இதழ் தன் இறுதி ஆண்டுகளில் அதன் பெயரை வித்யாவினோதினி வக்தவு என மாற்றியது.

1898 ஆம் ஆண்டு சி.பி. அச்சுத மேனன் பதவி விலகிய பிறகு, அப்பு நெடுங்கடி, டி.கே. கிருட்டிண மேனன், [2] மற்றும் பள்ளியில் கோபால மேனன் ஆகியோரும் வித்யாவினோதினியின் ஆசிரியர்களாகப் பணியாற்றினர்.

வித்யாவினோதினி வெறும் இலக்கிய இதழ் மட்டுமல்ல. மாறாக வரலாறு, கலாச்சாரம், நிதி, விவசாயம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளையும் உள்ளடக்கியிருந்தது. இயற்கை அறிவியலில் நிபுணத்துவம் பெற்ற சி.எசு.கோபால பணிக்கர், வித்யாவினோதினியின் முதன்மை அறிவியல் நிருபராக இருந்தார். இறுதியாக பள்ளியில் கோபால மேனனுக்குச் சொந்தமான இதழ் மார்ச் 1902 இல் இயங்குவதை நிறுத்தியது. வித்யாவினோதினியின் இடம் கொச்சின் எச்.எச்.ராமவர்மா அப்பன் தம்புரான் சொந்தமாக நடத்தி வந்த ரசிக ரஞ்சினி என்ற மாத இதழால் நிரப்பப்பட்டது. [2]

ட்ரிவியா[தொகு]

மலையாளத்தின் முதல் சிறுகதையான " வசனவிகிருதி " . பிப்ரவரி 1891 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாத வித்யாவினோதினியில் வெளியானது. (தொகுதி 2 இதழ் 3).

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Shaji A. (2017). Politicisation of Caste Relations in a Princely State: Communal Politics in Modern Travancore (1891–1947). Gurgaon: Zorba Books. பக். 57. 
  2. 2.0 2.1 2.2 T. K. Krishna Menon (1939). A Primer of Malayalam Literature. New Delhi: Asian Educational Services. 
  3. Bellary Shamanna Kesavan (1985). History of Printing and Publishing in India: A Story of Cultural Re-awakening · Volume 2. New Delhi: National Book Trust. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யாவினோதினி&oldid=3459355" இலிருந்து மீள்விக்கப்பட்டது