உள்ளடக்கத்துக்குச் செல்

வித்யார்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்யார்த்தி
இயக்கம்பாலாச்சாரி
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
திரைக்கதைபாலாச்சாரி
இசைமணிசர்மா
நடிப்புஜித்தன் ரமேஷ்அதிதி அகர்வால்
கலையகம்சூப்பர் குட் ஃபிலிம்su
வெளியீடு9 டிசம்பர் 2004 (2004-12-09)
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

வித்யார்த்தி (Vidyardhi) என்பது 2004ஆம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு காதல் நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை எசு. சங்கரிடமும் பாக்யராஜிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பாலாச்சாரி இயக்கியுள்ளார். இதில் அறிமுக நடிகர் ஜித்தன் ரமேஷ், அதிதி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ் ராஜ், ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1][2][3]

கதைக்களம்

[தொகு]

சலீம் இப்ராகிம் என்ற மாஃபியா கும்பல் தலைவன், பொறியியல் கல்லூரி ஒன்றின் தலைவரைக் கொன்று, வளாகத்தை மூடி அங்கு பிரச்சினைகளை உருவாக்குகிறான். மீதமுள்ள கதை, கிராந்தி என்ற மாணவன் எவ்வாறு தனது கல்லூரியைக் காப்பாற்றுகிறான் என்பதைப் பற்றியதாகும்.

நடிகர்கள்

[தொகு]
  • ஜித்தன் ரமேஷ் - கிராந்தி
  • அதிதி அகர்வால் - ஜானவி
  • பிரகாஷ் ராஜ் - கல்லூரி முதல்வர்
  • இராகுல் தேவ் - சலீம் இப்ராகிம்
  • பிரம்மநந்தம்
  • கோவை சரளா
  • தணிகெள்ள பரணி
  • கிரி பாபு
  • வேணு கோபால்
  • ரஜிதா
  • விசாக் பிரசாத்
  • மல்லாடி ராகவா
  • நவபாரத் பாலாஜி
  • அபினய கிருஷ்ணா

தயாரிப்பு

[தொகு]

இப்படத்தின் தொடக்க விழா அக்டோபர் 2003இல் அன்னபூர்ணா படபிடிப்பு நிலையத்தில் நடைபெற்றது. இதில் அரிகிருஷ்ணா, ஜெகபதி பாபு, உதய்கிரண், தருண், ஜீவிதா, த. ராமாநாயுடு, அல்லு அரவிந்த், எம். எசு. ராஜு மற்றும் அசோக் குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இத்திரைப்படம் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரியின் மகனான ரமேஷின் அறிமுகத் திரைப்படமாகும். தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்த மந்தது ஜாவேரி கதாநாயகியாக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். படத்தின் படப்பிடிப்பு முக்கியமாக ஐதராபாத்து, மும்பையில் நடைபெற்றது. பின்னர் மந்தா ஜாவேரிக்கு பதிலாக அதிதி அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். படம் ஏப்ரல் 2004இல் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் அது மேலும் தாமதமாகி திசம்பரில் வெளியானது.

பாடல்கள்

[தொகு]

இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.[4]

  • "சயே சயேதே" – கணபதி
  • "ஐதராபாத் கை" – கிருஷ்ணராஜ்
  • "ஒகே ஒக்கசாரி" – எஸ். பி. பி. சரண்
  • "விரிஸே பிரதி" – ஹரிஹரன்
  • "எம்பில்லா" – மல்லிகார்ஜுன்
  • "ஆந்திரா கிலாடி வித்யார்த்தி" - திப்பு, மகாலட்சுமி, பிரேம்ஜி அமரன் (ராப் இசை)

வெளியீடும் வரவேற்பும்

[தொகு]

இப்படம் எதிர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது. 'ஐடில்பிரைன்' இணையதளத்தின் விமர்சகர் ஒருவர் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாதிகளின் முரண்பாடுகளை விமர்சித்தார். படத்தின் இரண்டாம் பாதி 'சை' (Sye) திரைப்படத்தை நினைவூட்டும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டார். 'சிஃபி' இணையதளத்தின் விமர்சகர், "மணிசர்மாவின் இசை ரசிக்கும்படி இருந்தாலும், மற்ற அம்சங்கள் எவ்வித திருப்பங்களும் இன்றி வழக்கமானதாகவும் கணிக்கக்கூடியதாகவும் உள்ளன. முன்னணி ஜோடியைப் பற்றி எழுதுவதற்கு எதுவும் இல்லை. ரமேஷிற்கு திரை ஆளுமை இல்லை மற்றும் படம் இரசிகர்களை ஈர்க்கத் தவறிவிட்டது" என்று எழுதினார்.[2] A critic from Sify wrote that "The music of Mani Sharma is hummable though other aspects are formulaic and predictable with no major twists. Nothing much to write about the lead pair. Ramesh has no screen presence and the film fails to impress".[5] The film did not run well.[6] இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Telugu Cinema Functions – Muhuart of Vidyardhi – Ramesh, Mamata Zhaveri – RB Chowdary". www.idlebrain.com. Archived from the original on 29 April 2017. Retrieved 15 December 2019.
  2. 1 2 "Vidyardhi – Telugu cinema Review – Ramesh, Aditi Agarwal". www.idlebrain.com. Archived from the original on 3 December 2019. Retrieved 26 December 2019.
  3. ↑ "Jithan's hero". The Hindu. 6 May 2005 இம் மூலத்தில் இருந்து 11 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201011152813/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/jithans-hero/article28582558.ece.
  4. ↑ "Chords & Notes". 19 December 2004 இம் மூலத்தில் இருந்து 16 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220116013548/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/chords-notes/article28361141.ece.
  5. ↑ "Review Vidyarthi". Sify. Archived from the original on 2005-01-06.
  6. ↑ "List of Telugu films released in year 2004". www.idlebrain.com. Archived from the original on 24 December 2018. Retrieved 17 October 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யார்த்தி&oldid=4611035" இலிருந்து மீள்விக்கப்பட்டது